அலைகளில் நடக்கலாம் வாங்க… அப்ளாஸ் அள்ளும் கேரளாவின் புதிய முயற்சி!

கோழிக்கோடு கடலில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் பாலம் சுற்றுலாப் பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதென்ன மிதக்கும் பாலம்னு கேக்குறீங்களா… வாங்க தெரிஞ்சுக்கலாம்.

கோழிக்கோடு கடற்கரை

Beypore beach
Beypore beach

கேரள மாநிலம் கோழிக்கோடு Beypore கடற்கரையில் மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. அலைகள் ஆர்ப்பரிக்கும்போது அதனோடு சேர்ந்து அந்த ஏற்ற, இறக்கத்தை இதன்மீது நடக்கும் சுற்றுலாப் பயணிகளும் அனுபவிக்க முடியும். அடர்த்தி மிகுந்த பாலி எத்திலீனால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலம் கடற்கரையில் இருந்து 100 மீ தூரத்துக்கு சுமார் 30 மீ அகலத்துக்கு பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாலத்தை கேரள முதல்வரின் மருமகனும் பொதுப்பணித்துறை அமைச்சருமான பி.ஏ.முகமது ரியாஸ் மார்ச் 31-ம் தேதி திறந்துவைக்க இருக்கிறார். சுமார் 500 பேர் வரை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், லைஃப் சேவிங் காப்பு உடையணிந்து 50 பேரை மட்டுமே அனுமதிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. கேரள சுற்றுலாத் துறையும் துறைமுகங்கள் கழகமும் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தியிருக்கின்றன. இதனை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதென்ன மிதக்கும் பாலம்?

  • நீர் நிலைகள் மீது மிதக்கும் பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்படுவது மிதக்கும் பாலமாகும்.
  • Bardges அல்லது Pantoons எனப்படும் மிதவைகள் மூலமாக இது வடிவமைக்கப்படும்.
  • கரையில் ஒரு வலுவான பிணைப்பு மூலம் இதன் சமநிலை உறுதிப்படுத்தப்படும்.
  • மிதக்கும் பாலங்கள் குறித்து புராண காலங்கள் முதலே குறிப்புகள் இருக்கின்றன.

Also Read – ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் தெரிந்துவைத்திருக்க வேண்டிய 7 மலையாள நடிகைகள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top