இந்தியாவிலேயே கல்விக்காக ஒர் நிறுவனத்துக்கு வழங்கப்படும் உயர்ந்த அந்தஸ்து A++ தரம்தான். இந்தியா முழுவதும் எடுத்துக் கொண்டால் ஒரு சில தரமான கல்வி நிறுவங்களுக்கு மட்டுமே இந்த அந்தஸ்து கிடைக்கும். அந்த சில கல்வி நிறுவனங்களின் வரிசையில் இணைந்திருக்கிறது, சத்யபாமா கல்விக் குழுமம். சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்துக்கு A++ வகை கொடுத்து தரம் உயர்த்தியிருக்கிறது, பல்கலைக்கழக மானியக்குழு.

சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர், தொலைநோக்கு பார்வை கொண்ட நிறுவன வேந்தர் டாக்டர் ஜேப்பியார் அவர்களால், திறன்வாய்ந்த தொழில்நுட்பம் மற்றும் அறம் சார்ந்த ஆற்றல் வாய்ந்த மானுட சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற உள்ளுணர்வால் ஆரம்பிக்கப்பட்டது. பல மாணவர்களை சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு சேர்த்திருக்கிறது, சத்யபாமா கல்விக்குழுமம்.
A++ தரத்தால் மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்!
இப்போது கிடைத்திருக்கும் அங்கீகாரத்தால் சத்யபாமாவில் பயிலும் மாணவர்களுக்குத்தான் பெரிய பலன். மாணவர்கள் உயர்படிப்புக்காகவோ, வேலை வாய்ப்புக்காகவோ வெளிநாடுகளில் விண்ணப்பிக்கும்போது முன்னுரிமை கிடைக்க வாய்ப்புகள் அதிகம். A++ அங்கீகாரம் பெற்ற கல்லூரி உலகில் எந்த கல்லூரியுடனும் எளிதாக இணையலாம். அப்படி இணையும்போது மாணவர்களுக்கான அனுபவம் அதிகமாகக் கிடைக்கும். தரம் உயர்த்தப்பட்ட கல்லூரிகளிலேயே அதிகமான சர்வதேச நிறுவனங்கள் வேலை வாய்ப்பை தர முன்வருவதால் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் நிச்சயமாக வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
ஏன் A++ தரம் அவசியம்?
A++ தரம் அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. அப்படி கிடைக்க ஒரு நிறுவனத்தில் அதிநவீன கட்டமைப்பும், திறமையான பேராசிரியர்களும், திறமையான நிர்வாகமும் இருக்க வேண்டும். இந்த A++ தரம் கிரேடு 1-ல் வருவதால் சிறந்த பாடத்திட்டங்களை ஒரு நிறுவனம் வழங்க முடியும். சர்வதேச கல்லூரிகள், நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சிகளை நடத்தி தகவல்களை பறிமாறிக் கொள்ளலாம். கேம்பஸ் இண்டர்வ்யூக்களுக்கு நிறுவனங்கள் வர வைக்கவும் இந்த தரம் உயர்த்துதல் உதவும்.

இதுபற்றி சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் வேந்தர் டாக்டர் மரியஜினா ஜான்சன்பேசும்போது, “பல்கலைக்கழக மானியக் குழு, சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வகை–1 இல் யூஜிசி ஒழுங்குமுறைச் சட்டம் 2018-ன் படி தரம் உயர்த்தியுள்ளது சத்யபாமா கல்வி நிறுவனத்தின் பயணத்தில் மற்றுமொரு மைல்கல். நமது நிறுவனத்தின் வெற்றிகரமான இந்த உயரிய பயணத்துக்கு, தளர்வின்றி ஊக்கத்துடன் துணை நின்று ஆதரவளித்து வரும் பெற்றோர்கள், ஆளெடுப்பு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள், ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், ஊடகத்தினர் நலன் விரும்பிகள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்துணர்ச்சியளிக்கும் தருணத்தில், மாணவ சமுதயாத்துக்கு மேலும் பல ஆக்கப்பூர்வமான நன்மைகளை வழங்க சத்யபாமா குழுமம் உறுதியேற்கிறது!’’ என்று தெரிவித்தார்.