ஆப்கானிஸ்தான் அரசு தாலிபான்கள் கைக்குப் போவதற்கு சில நாட்கள் முன்னர் நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர் Khalid Payenda.
தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா கடந்த ஆண்டு வாபஸ் பெற்றது. இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தனர். கடந்தாண்டு ஆகஸ்ட் 15-ல் தலைநகர் காபூல் அவர்களின் கீழ் வந்தது. அதிபர் அஷ்ரப் கனி, நாட்டை விட்டு வெளியேறினர். இந்த சம்பவம் நடப்பதற்கு சில நாட்கள் முன்னர், அஷ்ரஃப் கனி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அத்தோடு பலர் ஆப்கானிஸ்தானை விட்டும் வெளியேறினர். அப்படி அஷ்ரஃப் கனி தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவர் காலித் பயெண்டா.
Khalid Payenda
தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றும் முன்னர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய காலித், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் குடும்பத்தோடு தஞ்சமடைந்தார். வாஷிங்டனில் இருக்கும் கிக் என்ற பொருளாதார நிறுவனத்தில் பணியில் சேர்ந்த அவர், ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆசிரியர் குழுவில் வேறொரு பேராசிரியரோடு சேர்ந்து மாணவர்களுக்குக் கற்பித்தும் வருகிறார். தனது நான்கு குழந்தைகளுடன் கூடிய குடும்பத்துக்காக இத்துடன் சேர்ந்து வாஷிங்டனில் Uber வாடகை காரையும் ஓட்டி வருகிறார். இதை வாஷிங்டன் போஸ்ட் செய்தியாக வெளியிட்டிருக்கிறது.
அந்த பத்திரிகைக்குப் பேட்டியளித்திருக்கும் காலித், `இப்போது எனக்கென சொந்த நாடு எதுவும் இல்லை. நான் இந்தப் பகுதியைச் சேர்ந்தவனில்லை. இது வெறுமையான உணர்வைக் கொடுக்கிறது’ பேசியிருக்கிறார். மேலும், தான் பார்க்கும் வேலை மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதன் மூலம் குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும் கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் சென்ற நிகழ்வு தம்மை கனவிலும் துரத்துவதாகவும், அதற்குக் காரணம் அமெரிக்கர்கள்தான் என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார். அந்தப் பகுதியில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமையை நிலைநாட்டுவதாகக் கூறி இருபது ஆண்டுகளாக அமெரிக்கப் படைகள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
You have remarked very interesting points!
ps nice website.Blog monetyze