தன்னுடைய நிலத்தை டிராக்டர் கொண்டு உழும்போது, இடைஞ்சலாக இருந்த ஒரு கல்லை விவசாயி தூக்கித் தூரப்போட்டால் என்ன நடக்கும்?
* ஒன்றும் நடக்காது
* மூன்றாம் உலகப் போர் மூளும்
உங்கள் பதில் என்ன?
இந்தக் கேள்விக்கு மூன்றாம் உலகப் போர் என்ற ஆப்ஷன் ஏன் என யோசிக்கிறீர்களா?
அந்தக் கல் ஒரு ‘நில அளவைக் குறிப்பிடும்’ காணிக்கல்லாக இருந்தால்…?
அந்தக் காணிக்கல் எல்லையைக் குறிக்கும் ஒரு கல்லாக இருந்தால்…?
அந்த எல்லைக்கல் இருநாடுகளைப் பிரிக்கும் எல்லைக்கல்லாக இருந்தால்…?
அதுவும் இரு பெரிய ஐரோப்பிய நாடுகளின் எல்லையைக் குறிப்பிடும் எல்லைக்கல்லாக இருந்தால்…?

இரண்டாம் உலகப் போர் முக்கியப் பங்கு வகித்த இரண்டு நாடுகளாக அவை இருந்தால்…?
மூன்றாம் உலகப் போர் மூளும் தானே…?
நடந்தது என்ன?
இறுதியில் என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்.
பெல்ஜியத்தில் எல்லையோர கிராமம் ஒன்றின் விவசாயி, தன்னுடைய நிலத்தை உழுது கொண்டிருந்தபோது டிராக்டர் செல்ல இடையூறாக இருந்த ஒரு கல்லை ஏழரை அடி தூரத்தில் தூக்கிப் போட்டுவிட்டார்.
சில நாள்களுக்குப் பிறகு ஒரு உள்ளூர் வரலாற்று ஆய்வாளரின் கண்களில் இந்த எல்லைக்கல் நகர்த்தி வைக்கப்பட விபரம் தெரிய வருகிறது. இதன் மூலமாக பெல்ஜியத்தின் பரப்பளவு அதிகமாகவும், பிரான்சின் பரப்பளவு குறைந்திருப்பதும் தெரிய வருகிறது.
Also Read : தீவுல 32 ஆண்டுகள் தனிமையா வாழ்ந்துருக்காரு! – எப்படினு பாருங்களேன்
சம்பந்தப்பட்ட பெல்ஜியம் நகரத்தின் மேயர் இதுகுறித்து பேசும் போது, “இது எனக்கு மகிழ்ச்சியான விஷயம் தான், பிரான்ஸ் எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறது எனத் தெரியவில்லை” என்றார்.
பிரான்சும் லேசாக சிரித்துவிட்டு இந்தப் பிரச்சினையை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
எல்லைக்கல்லை நகர்த்தி வைத்த விவசாயியே மீண்டும் சரியான இடத்தில் அந்தக் கல்லை நிறுவ வேண்டும் என இப்போது முடிவாகி இருக்கிறது.
இதே சம்பவம் 80 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தால் மூன்றாம் உலகப்போர் கூட நடந்திருக்கும்.
Ref : BBC
0 Comments