Blue Java Banana

நீல நிறம்.. வெண்ணிலா ஐஸ்க்ரீம் சுவை – ப்ளூ ஜாவா வாழைப்பழம் தெரியுமா?

ப்ளூ ஜாவா வாழைப்பழத்தை (Blue Java Banana) பிஜி தீவில் ஹவாய் வாழைப்பழம் என்றழைக்கிறார்கள். பிலிப்பைன்ஸில் க்ரீ என்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் செனிஸோ என்ற பெயரிலும் இந்த ப்ளூ ஜாவா வாழைப்பழம் பிரபலம்.

நமக்கு வாழைப்பழம் என்றாலே கவுண்டமனி – செந்திலின் கரகாட்டக்காரன் காமெடிதான் நினைவுக்கு வரும். மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் வாழைப்பழம் மற்றும் அதன் காயைப் பார்த்திருப்போம். நீலநிறத்தில் வாழைப்பழத்தைப் பார்த்திருக்கிறீர்களா? என்னது நீல நிறத்தில் வாழைப்பழமா என்று கேட்கிறீர்களா… உண்மையில் அப்படி ஒரு வாழைப்பழம் இருக்கிறது. ப்ளூ ஜாவா என்றழைக்கப்படும் அந்த வாழைப்பழம் நீலநிறத்தில் இருப்பதுடன், அதன் சுவை வெண்ணிலா ஐஸ்க்ரீமைப் போன்றிருக்கும். சமீபத்தில் ஒருவர் அதுகுறித்து சமூக வலைதளத்தில் பல்வேறு தகவல்களுடன் பதிவிடவே, நீல நிற வாழைப்பழம் குறித்த விவாதம் பெரிதானது.

ப்ளூ ஜாவா வாழைப்பழம்

நியூயார்கில் இருந்து செயல்படும் இங்கிலாந்து விளம்பர நிறுவனமான ஓகில்வி (Ogilvy) நிறுவனத்தின் கிரியேட்டிவ் டீம் ஹெட்டான தாம் காய் மெங் (Tham Khai Meng), ப்ளூ ஜாவா வாழை குறித்து படங்களுடன் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்திருந்தார். அதன் தோல் மட்டுமல்ல அந்த பழமே நீலநிறத்தில்தான் இருக்கும். `யாருமே ப்ளூ ஜாவா பற்றி சொல்லவே இல்லையே… அவை ஐஸ்க்ரீம் போலவே சுவை கொண்டிருக்கின்றன’ என்று மெங் ட்விட்டரில் சிலாகித்திருந்தார்.

இதையடுத்து ப்ளூ ஜாவா குறித்தும் நெட்டிசன்கள் விவாதிக்கத் தொடங்கினர். தெற்காசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ப்ளூ ஜாவா வாழைப்பழம், ஹவாய் தீவில் மிகப்பிரபலம். ஐஸ்கிரீம் வாழைப்பழம் என்று ஹவாய் விவசாயிகள் இதை அழைக்கிறார்கள். இரண்டு இனங்களைக் கலப்பினம் செய்து பெறப்பட்ட முஸா பல்பிஸியானா (Musa balbisiana) மற்றும் முஸா அகுமினாடா (Musa acuminata) இனங்களை ஹைபிரிட் செய்து பெறப்பட்டதே ப்ளூ ஜாவா வாழைப்பழம். இந்த வாழை மரம் 15 முதல் 20 அடி உயரம் வரை வளரும் என்கிறார்கள். இலைகள் வெள்ளி கலந்த பச்சை நிறத்தில் காணப்படும். 40 டிகிரி பாரன்ஹீட் அளவு வெப்பமுடைய வெப்பமண்டல நாடுகளிலேயே இது பயிரிடப்படுகிறது.

Blue Java Banana

பிஜி தீவில் இதை ஹவாய் வாழைப்பழம் என்றழைக்கிறார்கள். பிலிப்பைன்ஸில் க்ரீ என்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் செனிஸோ என்ற பெயரிலும் இந்த ப்ளூ ஜாவா வாழைப்பழம் பிரபலம். வெண்ணிலா ஐஸ்கிரீம் போன்ற சுவையுடையதால், ஐஸ்கிரீமுடன் சேர்த்து சாப்பிடும்போது சுவை அதிகம் என்கிறார்கள் உணவுப் பிரியர்கள்.

Also Read : Beware of Pink Whatsapp

இதுபோன்று பெரிதாக வெளியில் தெரியாத பழம், காய் வகைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா… கமெண்டில் சொல்லுங்க நாங்களும் தெரிஞ்சுக்கிறோம்.


Blue Java Banana – Fact Box

Does Blue Java Banana available in Tamilnadu or India?

Blue Java Banana is a hybrid of two species of Banana native to Southeast Asia. This variety of Bananas are not available in Tamilnadu either in India. It is available only in Hawaii, Fiji, the Philippines and Central American countries.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top