ஈஃபிள் டவரின் உயரம் 20 அடி கூடியிருக்கிறதா.. உண்மை என்ன?

19-ம் நூற்றாண்டில் Gustave Eiffel என்ற பொறியாளரால் கட்டப்பட்டபோது, வாஷிங்டன் நினைவுச் சின்னத்தின் உயரத்தை விட பெரியதாக வடிமைக்கப்பட்டது. 1 min


ஈஃபிள் டவர்
ஈஃபிள் டவர்

உலக அதிசயங்களில் ஒன்றான பிரான்ஸின் ஈஃபிள் டவரின் உயரம் சுமார் 20 அடி (6 மீ) அளவுக்குக் கூடியிருப்பதாகப் பேசப்பட்டு வருகிறது. உண்மையில் இதன் பின்னணியில் என்ன இருக்கிறது?

ஈஃபிள் டவர்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருக்கும் ஈஃபிள் டவர், அதன் தனித்துவமான டிசைனாலும் உயரத்தாலும் உலக அளவில் மக்களை ஈர்த்து வருகிறது. 19-ம் நூற்றாண்டில் Gustave Eiffel என்ற பொறியாளரால் கட்டப்பட்டபோது, வாஷிங்டன் நினைவுச் சின்னத்தின் உயரத்தை விட பெரியதாக வடிமைக்கப்பட்டது. இதன்மூலம் மனிதர்களால் கட்டப்பட்ட உயரமான கட்டுமானம் என்ற பெயர் பெற்றது. இந்தப் பெருமையை அந்த டவர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் வரை தக்க வைத்திருந்தது. 1929-ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கட்டப்பட்ட Chrysler Building அந்த சாதனையை முறியடித்தது. உலக அளவில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துபோகும் சுற்றுலாத் தலங்களில் முக்கியமானது ஈஃபிள் டவர்.

ஈஃபிள் டவர்
ஈஃபிள் டவர்

உயரத்தைப் பொறுத்தவரையில் பல்வேறு காரணங்களால், அது மாறியே வந்திருக்கிறது. ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு மேலாக பிராட்கேஸ்டிங் எனப்படும் ஒளிபரப்பு சேவைகளுக்கான பயன்பாட்டில் இந்த டவர் இருந்து வருகிறது. டவரின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் ஆன்டெனாக்கள் குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றப்படும். இதனால், அதன் உயரமும் அப்போது மாறுபடும்.

அந்தவகையில், பாரீஸில் இருக்கும் அந்த டவரின் உச்சியில் புதிதாக ஒளிபரப்பு சேவைகளுக்கான ஒரு ஆன்டெனா தற்போது பொருத்தப்பட்டிருக்கிறது. இது நேரலையாக பிரான்ஸ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்டது. ஹெலிகாப்டர் ஒன்றின் மூலம் DAB+  ஆன்டெனா எடுத்துச் செல்லப்பட்டு பொருத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் டவரின் உயரம் 20 அடி (6 மீ) அளவுக்கு அதிகரித்து, மொத்த உயரம் 330 மீட்டராக இருக்கிறது.

Also Read – Road Trip பிளான் பண்றீங்களா… அதுக்கு முன்னாடி இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!


Like it? Share with your friends!

465

What's Your Reaction?

lol lol
36
lol
love love
32
love
omg omg
24
omg
hate hate
32
hate

0 Comments

Leave a Reply

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format
உன் பாதை அது உனக்கானது மட்டுமே! ரூமியின் “Motivational Quotes” லேடி உதித் நாராயண்… யார் இந்த `மல்லிப்பூ’ மதுஸ்ரீ! தனுஷுக்கே டஃப் கொடுத்த பேரழகி… அனா டீ அர்மாஸின் கதை! இவங்க யூ-டியூப் சேனல் ஆரம்பிச்சா என்ன கண்டண்ட் போடுவாங்க? பொன்னியின் செல்வன் நடிகர்களின் கலர்ஃபுல் ஆல்பம்!