சிங்கப்பூரில் பணியாற்ற விரும்பும் இந்தியர்கள், நேரடியாக விசாவுக்காக விண்ணப்பிக்க முடியாது. அந்த நாட்டில் இருக்கும் நிறுவனம் சார்பில் விசா விண்ணப்பிக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் கிடைத்தபிறகே சென்று பணியாற்ற முடியும். சிங்கப்பூர் Work Permit பெறுவதற்கான நடைமுறைகள், விண்ணப்பிக்கும் முறை, அந்நாடு அளிக்கும் விசாவின் வகைகள் என்னென்ன… வாங்க தெரிஞ்சுக்கலாம்.
சிங்கப்பூர் வொர்க் பெர்மிட்

சிங்கப்பூரைப் பொறுத்தவரை மற்ற நாடுகளைப் போல் வேலைக்கான விசா என்ற ஒன்று நடைமுறையில் இல்லை. மாறாக, Work Permit அல்லது Work Pass என்ற நடைமுறைதான் அமலில் இருக்கிறது. அந்த நாட்டுக்குச் சென்று நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ பணியாற்ற விரும்பும் வெளிநாட்டினர் இந்த பெர்மிட் இருந்தால் மட்டுமே அங்கு தங்கி பணியாற்ற முடியும். அதேபோல், வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் சிங்கப்பூர் நிறுவனங்கள், அவர்களுக்கான மாதாந்திர ஊதியத்தோடு, மருத்துவக் காப்பீடு மற்றும் பாதுகாப்பு வைப்புத் தொகை உள்ளிட்ட விவரங்களை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
சிங்கப்பூர் வொர்க் பெர்மிட் – தேவையான ஆவணங்கள்
- விண்ணப்பிப்பவரிடம் தகுதியான பாஸ்போர்ட் இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
- வொர்க் பெர்மிட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் வேலை, அது தொடர்பான வேலைக்குத் தகுதியான நபராக இருத்தல் வேண்டும். அந்த வேலைகளை மட்டுமே பார்க்க வேண்டும்.
இதுதவிர சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டினர் கீழ்க்கண்டவற்றையும் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும்.
- வேறு தொழிலில் ஈடுபடுவதோ அல்லது சொந்தமாகத் தொழில் தொடங்குவதோ கூடாது.
- வொர்க் பெர்மிட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனத்துக்காக மட்டுமே பணியாற்ற வேண்டும்.
- சிங்கப்பூரைச் சேர்ந்தவரையோ அல்லது நாட்டின் நிரந்தரக் குடியுரிமை பெற்றவரையோ மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அனுமதியின்றி திருமணம் செய்யக் கூடாது.
- நீங்கள் தங்குவதற்காக உங்களின் நிறுவனத்தால் அளிக்கப்பட்ட முகவரியில் மட்டுமே தங்க வேண்டும்.
- ஒரிஜினல் வொர்க் பெர்மிட்டை எப்போதும் உங்களுடனேயே வைத்திருக்க வேண்டும். அதிகாரிகள் ஆய்வுக்காகக் கேட்கும்போதை அதை சமர்ப்பிக்க வேண்டும்.
சிங்கப்பூர் அரசு வழங்கும் வேலைக்கான விசா – வகைகள்
சிங்கப்பூரில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு அந்நாட்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Manpower) பல்வேறு வகையான விசாக்களை வழங்குகிறது. அங்கு பணியாற்ற இந்த விசாக்களில் ஒன்றைப் பெற்றிருப்பது அவசியம்.

Personalised Employment Pass
ஏற்கனவே சிங்கப்பூரின் வேலைக்கான விசாவை வைத்திருக்கும் பெரும் தொகையை ஊதியமாகப் பெறும் வெளிநாட்டவர்கள் அல்லது வெளிநாடுகளைச் சேர்ந்த தனியார் நிறுவன உயர் அதிகாரிகளுக்கு இந்த விசா வழங்கப்படுகிறது.
S Pass
மாதந்தோறும் 2,200 அமெரிக்க டாலர்கள் அல்லது அதற்கு மேலான தொகையை ஊதியமாகப் பெறுபவர்களுக்கான விசா. அதேபோல், இந்த விசாவுக்கான மற்ற தகுதிகளையும் அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
Employment Pass
வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்காக வரும் தனியார் நிறுவன மேலாளர்கள், அதிகாரிகள் வழங்கப்படுவது. இவர்களது மாத ஊதியம் 3,600 அமெரிக்க டாலர்களுக்கு அதிகமாக இருக்க வேண்டும்.
Work Permit (Foreign Domestic Worker)
வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வீட்டு வேலைக்காக வருபவர்களுக்கானது.
Work Permit (Foreign Worker)
கட்டட வேலை, கப்பல் கட்டும் தளம், வாடிக்கையாளர் சேவைத் துறை உள்ளிட்ட பணிகளுக்காக வெளிநாட்டில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கானது.
Entre Pass
சிங்கப்பூரில் தொழில் தொடங்க நினைக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்களுக்கானது.
Training Employment Pass
பயிற்சிக்காக சிங்கப்பூர் வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், பயிற்சியின்போது குறைந்தது 3,000 அமெரிக்க டாலர்களை மாத ஊதியமாகப் பெற வேண்டும்.

Work Holiday Pass (Under Work and Holiday Visa Programme)
18 முதல் 30 வரையுள்ள ஆஸ்திரேலிய மாணவர்கள் விடுமுறையின்போது சிங்கப்பூரில் தங்கிப் பணியாற்ற வழங்கப்படுவது. ஒரு வருடம் காலாவதி தேதி கொண்டது.
Work Permit (Performing Artiste)
ஹோட்டல்கள், மதுபானக் கூடங்கள், இரவு விடுதிகளில் நடனக் கலைஞர்களாக, பாடகர்களாகப் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படுவது.
Training Work Permit
இந்த விசாவின் கீழ் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் ஆறு மாத காலத்துக்கு சிங்கப்பூரில் தங்கி பயிற்சி பெற முடியும்.
Work Permit (Confinement Nanny)
மலேசியாவைச் சேர்ந்த வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கானது. பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளருக்குக் குழந்தை பிறந்திருக்கும் நிலையில், அவர்களுக்கு உதவியாக இந்த விசாவின் மூலம் 16 வாரங்கள் வரை தங்கியிருக்க முடியும்.
Pre-approved Letter of Consent
சிங்கப்பூரில் தங்கியிருக்க நீண்ட கால விசா அல்லது பெர்மிட் வைத்திருப்பவர்களின் மனைவி/கணவர் அல்லது குழந்தைகள் இதன்மூலம் விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும்.
Also Read:
Work Passes (Holders of Long-Term Visit Passes issued by ICA)
சிங்கப்பூரைச் சேர்ந்தவரை அல்லது நிரந்தக் குடியுரிமை பெற்றவரை மணந்தவர்கள் மற்றும் சிங்கப்பூரில் பயிலும் தங்களது மகன்/மகளுடன் துணையாக இருக்கும் பெற்றோர் இதன் கீழ் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.
Miscellaneous Work Pass
சிங்கப்பூரில் 60 நாட்கள் அளவுக்கு பணி தொடர்பாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கானது.
Long Term Visit Pass
சிங்கப்பூரின் Employment passes, S Pass வைத்திருப்பவரின் பெற்றோர், பெண் கொடுத்தோர் – பெண் எடுத்தோர் உள்ளிட்டோருக்கானது.
Letter of Consent
Employment Pass வைத்திருப்போரின் குழந்தைகள் Dependent’s Pass, Long-Term Visit Pass போன்றவற்றை வைத்திருப்பவர்கள் இதன்கீழ் விண்ணப்பிக்கலாம்.
Dependent’s Pass
Employment Pass அல்லது S Pass வைத்திருப்போரின் மனைவி, குழந்தைகளுக்கானது.
இந்த விசாக்களுக்கென அதன் தன்மையைப் பொறுத்து கட்டணம் ஒன்றையும் சிங்கப்பூர் அரசு நிர்ணயித்திருக்கிறது.
Also Read – இயர் எண்டில் கார் வாங்குவது சிறந்ததா… பிளஸ், மைனஸ் என்னென்ன?
Thirupathi
சிங்கப்பூரில் வேலை பார்த்து ஒரு சில வருடங்கள் முடிந்து தற்போது இந்தியாவில் வசிக்கும் ஒருவரது பாஸ்போர்ட் எண்ணை வைத்து சிங்கப்பூரின் work permit Number கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும்
After working in Singapore for a few years and now living in India, what should I do to find a Singaporean permit with my passport number? Pls. Help