எலான் மஸ்க்

Elon Musk கார்ப்பரேட் மான்ஸ்ட்ரா… உலகின் டாப் பில்லினியரானது எப்படி?

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸோட சி.இ.ஓ, The Boring Company-யோட நிறுவனர், OpenAI மற்றும் Neuralink நிறுவனங்களோட இணை நிறுவனர் – இப்படி Elon Musk – ஓட போர்ட்ஃபோலியோவை சொல்லிக்கிட்டே போகலாம். இன்னிக்கு சூழ்நிலைக்கு, தான் என்ன நினைச்சாலும் அதை சாதிக்கக் கூடிய நிலைமைல இருக்க மிகச்சிலர்ல அவரும் ஒருத்தர்னு சொல்லலாம். இருந்தாலும், ‘பூமியில இருந்து தப்பிச்சு செவ்வாயை நம்மோட காலனியாக்குற வரைக்கும் நான் மகிழ்ச்சியா இருக்க மாட்டேன்’னு சொல்றாரு எலான் மஸ்க். சரி யார் இவரு… எப்படி இப்படி உயரத்துக்கு வந்தாரு… நம்ம சர்க்கார் விஜய் கேரக்டர் மாதிரி அவர் கார்ப்பரேட் மான்ஸ்டரா… இந்தத் தகவல்களைப் பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.

யார் இந்த Elon Musk?

Elon Musk
Elon Musk

தென்னாப்பிரிக்காவின் மூன்று தலைநகரங்கள்ல ஒண்ணான பிரிடோரியாவுல 1978 ஜூன் 28-ம் தேதி பிறந்தவர் இந்த எலான் ரீவ் மஸ்க். இவரோட அம்மா, Maye Musk, மாடலாவும் டயட்டீசியனாகவும் இருந்தவங்க. இவரோட அப்பா Errol Musk ஒரு மெக்கானிக்கல் என்ஜினீயர். சின்ன வயசுலயே கம்ப்யூட்டர் மேல தீராத காதல் கொண்டிருந்த நம்ம மாஸ்டர் மஸ்க்குக்கு, 10 வயசுலயே Commodore VIC-20 அப்டிங்குற ஆரம்ப கால் PC-யை வாங்கிக் கொடுத்திருக்காங்க. அதை வைச்சு, 12 வயசுலயே Blastar-ங்குற ஒரு பேசிக் வீடியோ கேமை உருவாக்கியிருக்காரு. அதை 500 டாலருக்கு ஒரு கம்பெனிகிட்ட அப்பவே வித்து லாபம் பார்த்திருக்காரு. தென்னாப்பிரிக்காவுல இளைஞர்கள் கட்டாயம் இரண்டு வருஷம் மிலிட்டரில வேலை பார்க்கணும்னு ஒரு ரூல் இருக்கு. அதிலிருந்து தப்பிக்க, கனடாவில் பிறந்த தன்னுடைய தாய் வழியா, அந்த நாட்டு பாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்றார். அதுக்கப்புறம் கனடா வந்து பல வேலைகள் செஞ்ச அவரு, பென்சில்வேனியா யுனிவர்சிட்டில ஒரே நேரத்துல பிசிக்ஸ், எகனாமிக்ஸ்னு இரண்டு மேஜர்ல டிகிரி முடிச்சிருக்காரு.

முதல் ஸ்டார்ட் அப்

Zip2
Zip2

எலான் மஸ்க், தன்னோட சகோதரர் கிம்பல், அப்புறம் ஒரு நண்பர் இவங்ககூட சேர்ந்து ஆரம்பிச்ச முதல் ஸ்டார்ட் அப் Zip2. இது அப்போ இருந்த நியூஸ் பேப்பர்களுக்கு ஆன்லைன்ல டூர் கைடன்ஸ் கொடுக்குற சாப்ட்வேரை உருவாக்குற நோக்கத்துல தொடங்கப்பட்ட கம்பெனி. அந்த ஐடியா பின்னாட்களில் பெரிய சக்ஸஸ் ஆனாலுமே, ஆரம்பத்துல டேக் ஆஃப் ஆக டைம் எடுத்திருக்கு. இதனால, பொருளாதாரரீதியா கஷ்டப்பட்ட மஸ்க், ஆபிஸ் சோஃபாவுலயே தூங்கின நாட்கள் கூட இருந்திருக்கு. அதுக்கப்புறம் ஏஞ்சல் இன்வெஸ்டர்ஸோட உதவியோட அந்த கம்பெனி சக்ஸஸ்ஃபுல்லா உருவானதோட, நியூயார்க் டைம்ஸ், சிகாகோ ட்ரிபியூன் மாதிரியான பெரிய நியூஸ் பேப்பர்களோட கான்ட்ராக்டும் அவங்களுக்குக் கிடைச்சிருக்கு. மஸ்கோட முதல் பிஸினஸ் மேன் அவதாரம் எடுத்த இந்த கம்பெனி, 1999-லயே 309 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலை போயிருக்கு. அதுல இருந்த 7% ஷேர் மூலமா 22 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதிச்ச போது அவரோட வயசு 27.

திருப்புமுனை ஏற்படுத்திய X.com

X.com
X.com

இன்டர்நெட்தான் எதிர்காலத்துல எல்லாமுமா இருக்கப்போகுதுன்றதை ஆரம்பத்திலேயே கணிச்ச ஜீனியஸ் எலான் மஸ்க். அதைக் குறிவைச்சு இவர் தொடங்குன X.com-தான் உலகின் முதல் ஆன்லைன் பேங்கிங் பிஸினஸ் பிளான். Harris Fricker, Ed Ho, மற்றும் Christopher Payne இவங்களோட சேர்ந்து 1999-ல இவர் ஆரம்பிச்ச இந்த கம்பெனி, 2000-த்துல சிலிக்கான் வேலில இருந்து இயங்குற Confinity Inc கம்பெனியோட மெர்ஜ் ஆச்சு. இதுதான் இப்ப இருக்க PayPal நிறுவனமா உருவெடுத்துச்சு. இதை 2002-ல் eBay 1.5 பில்லியன் டாலர்ஸ் கொடுத்து வாங்குனாங்க. அந்த கம்பெனியோட 11.75% ஷேர்ஸ் வழியா எலான் மஸ்குக்கு சுமார் 180 மில்லியன் டாலர் பணம் வந்துச்சு. அவர் நினைச்சிருந்தா அப்பவே ரிலாக்ஸ் மோடுக்குப் போய் ஃபார்ம் ஹவுஸ், காஸ்ட்லி லைஃப் ஸ்டைல்னு போயிருக்கலாம்.. அப்படி போயிருந்தா, நாம இன்னிக்கு அவரைப் பத்தி இப்படி பேசிட்டு இருந்திருக்க மாட்டோம். அதுக்கப்புறம் மஸ்க் எடுத்த ரிஸ்க் ரொம்பப் பெருசு பாஸ்.

டெஸ்லா – ஸ்பேஸ் எக்ஸ்

Space X, Tesla
Space X, Tesla

’’eBay டீல் மூலமா வந்த 180 மில்லியன் டாலர்களில் 100 மில்லியன் டாலர்களை, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திலும், 70 மில்லியன் டாலர்களை எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவிலும் முதலீடு செய்தேன்’ன்னு எலான் மஸ்கே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கார். கடந்த 2003-ல் Martin Eberhard மற்றும் Marc Tarpenning இவங்களோடு சேர்ந்து டெஸ்லா கம்பெனியை எலான் மஸ்க் தொடங்கினார். 2004-ல் 6.5 மில்லியன் டாலர் இன்வெஸ்ட் பண்ணி, அந்த கம்பெனியோட மிகப்பெரிய ஷேர் ஹோல்டரா ஆனதோட அந்த கம்பெனியோட சேர்மனாவும் பொறுப்பேற்றுக் கொண்டார். 2008-ல அந்த கம்பெனியோட சி.இ.ஓவா மஸ்க் பதவியேற்கிறார். அதுக்கு அடுத்த வருஷம் டெஸ்லா, தன்னோட முதல் எலெக்ட்ரிக் காரான ‘the Roadster’ காரோட மாஸ் புரடக்‌ஷனைத் தொடங்குனாங்க.

2010-ல் பங்குகளை வெளியிட்டு பொதுத்துறை நிறுவனமான டெஸ்லாவோட ஷேர்ஸ் மதிப்பு தொடர்ந்து ராக்கெட் வேகத்துல உயர்ந்துட்டு வருதுனே சொல்லலாம். அக்டோபர் 2021-ல டெஸ்லாவோட சந்தை மதிப்பு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்கிற இலக்கைத் தொட்டது. அமெரிக்க வரலாற்றில் இந்த மதிப்புமிக்க இடத்தைப் பிடித்த ஆறாவது கம்பெனி டெஸ்லா. அதேமாதிரி, செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கும் காலனியாக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு Tom Mueller அப்டிங்குற என்ஜினீயரோடு சேர்ந்து மஸ்க் ஆரம்பிச்ச கம்பெனி ஸ்பேஸ் எக்ஸ். கலிபோர்னியாவின் El Segundo என்கிற இடத்துல இருக்க ஒரு வேர் ஹவுஸைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட ஸ்பேக் எக்ஸ், 2005-ல 160 பேர் வேலை பாக்குற பெரிய கம்பெனியா மாறுச்சு. அவங்க ஒவ்வொருத்தரும் எலான் மஸ்கால் நேரடியா இன்டர்வியூ பண்ணி, ஒப்புதல் பெறப்பட்டவங்களாம். 2005-2009 இடைப்பட்ட காலங்கள்ல பல ராக்கெட் லாஞ்சிங் தோல்விகள்ல முடிஞ்சாலும், 2010- ல அந்த நிறுவனம் பண்ண சாதனை மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது. அந்த வருஷத்தில் பூமியோட வெளிவட்டப் பாதைக்கு ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பின ராக்கெட் வெற்றிகரமா போய்ட்டு பூமிக்குத் திரும்ப வந்துச்சு. இதன் மூலமா பூமியோட வெளிவட்டப் பாதைக்கு ராக்கெட்டை அனுப்பின முதல் தனியார் கம்பெனி அப்படிங்குற பெருமை ஸ்பேஸ் எக்ஸுக்குக் கிடைச்சுச்சு.

கார்ப்பரேட் மான்ஸ்ட்ரா?

Elon Musk
Elon Musk

சர்க்கார் படத்துல வர்ற விஜய் கேரக்டர் அறிமுகம் கவனிச்சிருக்கீங்களா… அவர் எந்தவொரு நாட்டுக்குப் போனாலும் அங்க முன்னணில இருக்க கம்பெனியை மொத்தமா கபளீகரம் பண்ணிடுவாரு அப்டிங்குற ரேஞ்சுல சுந்தர் ராமசாமிங்குற விஜய் கேரக்டரை அறிமுகப்படுத்துவாங்க. ட்விட்டரை வாங்க எலான் மஸ்க் முயற்சி பண்ணப்ப, ஆரம்பத்துல ட்விட்டர் நிர்வாகம் அதை ஏற்க மறுத்து, அதுக்கப்புறம் பேரம் படிஞ்சிருச்சு. இதனால, தான் நினைச்சதை அடைய எலான் மஸ்க் எந்தவொரு எண்டுக்கும் போகத் தயங்காதவர்ங்குற மாதிரி ஒரு டாக் வந்துச்சு. அவரோட கிராஃப் எப்படி வளர்ந்துச்சு… எங்கிருந்து எந்தவொரு இடத்துக்கு எலான் மஸ்க் வந்திருக்காருனு சொல்லிருக்கோம்.

உண்மையில் எலான் மஸ்க் கார்ப்பரேட் மான்ஸ்டரா… நீங்க என்ன நினைக்கிறீங்க.. கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read – சென்னையில் உற்பத்தி நிறுத்தம்; Datsun பிராண்டுக்கு மூடுவிழா – எங்கே சறுக்கியது நிஸான்?!

13 thoughts on “Elon Musk கார்ப்பரேட் மான்ஸ்ட்ரா… உலகின் டாப் பில்லினியரானது எப்படி?”

  1. Howdy! Someone in my Facebook group shared this site with us so I came to give it a look. I’m definitely loving the information. I’m book-marking and will be tweeting this to my followers! Wonderful blog and wonderful design and style.

  2. Hi there just wanted to give you a quick heads up. The words in your post seem to be running off the screen in Ie. I’m not sure if this is a format issue or something to do with internet browser compatibility but I thought I’d post to let you know. The design look great though! Hope you get the problem resolved soon. Many thanks

  3. Superb website you have here but I was curious about if you knew of any forums that cover the same topics talked about in this article? I’d really love to be a part of community where I can get feed-back from other knowledgeable individuals that share the same interest. If you have any recommendations, please let me know. Many thanks!

  4. Đến với J88, bạn sẽ được trải nghiệm dịch vụ cá cược chuyên nghiệp cùng hàng ngàn sự kiện khuyến mãi độc quyền.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top