- அந்த நாட்டு பாட்டைத் தவிர வேற எந்த நாட்டுப் பாட்டும் அங்க கேட்கக் கூடாது. நீங்க ‘ஹ்ம் சொல்றியா மாமா’னு கேட்டா ‘நாங்க ஹ்ம்ம் ஹ்ம்ம் சொல்வோமே ஆமா’னு தூக்கிட்டு போய் துப்பாக்கியால போட்டுத் தள்ளிடுவாய்ங்க.
- உள்ளூர் தவிர நீங்க வேற யாருக்கும் நீங்க போன் பண்ணவே கூடாது. இன்டர்நேஷனல் கால் பண்றது அங்கே மாபெரும் தப்பு. 2007 ரிப்போர்ட்டின் படி நார்த் கொரியன் ஃபேக்டரி பாஸ் ஒருத்தைர், வெளிநாட்டு கால் பண்ணதுக்காக ஒரு லட்சம் மக்களுக்கு முன்னாடி சுட்டுக் கொன்றார்களாம்.
- கிம் ஜாங் உன் மீட்டிங் வெச்சுப் பேசும்போது யாராவது தூங்குற மாதிரி சிக்னல் தெரிஞ்சாகூட, அல்லையில அரை இன்ச் புல்லட்டை இறக்கிடுவாய்ங்க. 2015-ல நார்த் கொரியாவோட Defence மினிஸ்டர் மீட்டிங்ல லேசா கண் அசந்துருக்காரு. அப்படியே கையிலாசாவுக்கு அனுப்பி வெச்சுட்டாய்ங்க.
- விரக்தியோட உச்சத்துக்கு போறவங்களோட இறுதி முடிவு தற்கொலை. அப்படி யாராவது தற்கொலை பண்ணிக்கிட்டா தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா தங்கச்சி, அண்ணன்னு மொத்த சொந்த பந்தத்தையும் தூக்கி ஜெயில்ல போட்டுடுவாங்களாம். ஒருவேளை அப்படி யாரும் இல்லேன்னா வரப்போற அவரோட மூணு தலைமுறைக்குத் தண்டனை கிடைக்குமாம். தற்கொலைய தடுக்குறதுக்காக இப்படி ஒரு சட்டமாம்.
- கொரியாவுல 28 வகையான ஹேர் கட் இருக்கு. அதுதான் அங்க allowed-ம் கூட. 18 வகை பெண்களுக்கு 10 வகை ஆண்களுக்கு. அதையும் மீறி மஷ்ரூம் கட், சம்மர் கட், சல்மான் கட்லாம் பண்ணா அந்த மண்டைய அப்படியே கவ்வி செம்மி விட்ருவாய்ங்க. சுப்ரீம் லீடர் கிம்மோட ஹேர் கட்டை ஒரு பய காப்பியடிக்க கூடாது.

- அந்த ஊருக்கு டூர் போறவங்க பின்னாடி எப்பவுமே அந்த ஊர் guards இருந்துட்டே இருப்பாங்க. டூர் போறவங்க ஏதாவது தப்பு பண்ணா கூறு போடுறதுக்குதான் அந்த guards.
- ஒவ்வொரு அஞ்சு வருஷத்துக்கும் இங்க எலெக்ஷன் நடக்கும். 17 வயசுக்கு மேல உள்ள ஒவ்வொருத்தரும் ஓட்டு கட்டாயம் போடணும். ஆனா Candidate ஒரே ஒருத்தர் மட்டும்தான். முதல்வன் அர்ஜுன் மாதிரி யாராவது கைய தூக்கி நான் வேட்பாளரா நிக்கப்போறேன்னு சொன்னா தூக்குன கை துண்டிக்கப்படும்.
- அந்த ஊர்ல டிவி பார்க்கறவங்களுக்கு வாய்ச்சிருக்க சேனல் மொத்தமே மூணுதான். அந்த மூணு சேனலைத்தான் மாத்தி மாத்திப் பார்த்தாகணும். அந்த மூணுல ஒண்ணு விஜய் டிவி மாதிரி இருந்தா யோசிச்சு பாருங்க. போட்ட படத்தையே போட்டு நம்மள தற்கொலைக்கு தூண்டுவாய்ங்க. தற்கொலையும் பண்ணிக்க முடியாது. பண்ணிக்கிட்டா ஃபேமிலி மொத்தமும் ஜெயிலுக்குப் போயிடும்.
- அந்த ஊர்ல வளர்ற குழந்தைங்க என்ன படிக்கணும்னு அரசாங்கம்தான் முடிவு பண்ணுமாம். அப்படி முடிவு பண்ணி ஸ்கூலுக்கு போற பசங்க யூஸ் பண்ற டேபிள், டெஸ்க்குக்கு படிக்கிறவங்களேதான் காசு கொடுக்கணுமாம். இது ஸ்கூல் ஃபீஸ்ல சேராதாம். நார்த் கொரியாவோட literacy ரேட் 99 சதவீதம்.
- ஒருவேளை கார் வாங்குற ஆசை இருந்தா அதைத் தீர்மானிக்கிறது அரசாங்கம்தான். அதையும் மீறி அப்ரூவ் வாங்கிட்டா அந்த காரை வாங்குறதுக்கு வாழ்நாள் முழுக்க உழைக்கணும். அந்தளவு காஸ்ட்லி. சைக்கிளையே அந்த ஊர்ல ரெஜிஸ்டர் பண்ணிதான் வாங்கணும். ரொம்ப ரொம்ப பணக்காரங்களும், கவுர்மென்ட் ஆபிஸர்ஸும்தான் காருக்கு சொந்தக்காரங்களா இருப்பாங்க. மோஸ்ட்லி அங்க பப்ளிக் டிரான்ஸ்போர்ட்தான் யூஸ் பண்ணுவாங்க.

- இது மத்த உலகத்துக்குதான் 21st century. ஆனா நார்த் கொரியாவோட வழக்கப்படி Juche yearனு சொல்வாங்க. ஏப்ரல் 15 1912ல இருந்துதான் அவங்களோட காலண்டரே ஆரம்பிக்கும். அன்னைக்குதான் கிம் ஜாங் உன்னோட தாத்தா கிம் இல் சங் பிறந்தார்.
- 1978-ல அப்ப இருந்த சுப்ரீம் லீடர் கிம் ஜாங் இல் ஒரு முரட்டு சம்பவம் பண்ணிருக்கார். ஒரு ஃபிலிம் டைரக்டரையும் அவரோட மனைவியுமான ஒரு நடிகை இவங்க இரண்டு பேரையும் கடத்தி நார்த் கொரியன் மூவிஸோட கிரியேட்டிவிட்டைய வளர்த்துவிடுங்கனு துப்பாக்கி முணையில மிரட்டியிருக்காங்க. வழி இல்லாம கொஞ்சம் வேலை பார்த்து அவரோட நம்பிக்கைய பெற்று மூவி ப்ரொமோஷன்னு சொல்லி அந்த நாட்டை விட்டே தப்பிச்சி ஆஸ்திரியா போயிருக்காங்க.
- 2008-ல சவுத் கொரியா நார்த் கொரியாவுக்கு fertilizers அனுப்புற நிறுத்திட்டாங்க. அதுக்கும் ஒரு வினோத சட்டத்தை கொண்டு வந்தார் நம்ம கிம் ஜாங். உரங்களுக்கு வழியில்லாம மனிதக் கழிவுகளை உரமா பயன்படுத்திக்க சொல்லிட்டாப்டி. பாயாசம் சாப்பிடுங்க ஃப்ரெண்ட்ஸ்.
0 Comments