1921-ல் பிறந்த இளவரசர் பிலிப்புக்கும் – இரண்டாம் எலிசபெத்துக்கும் இந்தியா சுதந்திரம் பெற்ற 1947ம் ஆண்டில் பிரமாண்டமாகத் திருமணம் நடைபெற்றது. ஏறக்குறைய 73 ஆண்டுகள் இல்வாழ்க்கைக்குப் பின் கணவர் பிலிப்பை இழந்திருக்கிறார் ராணி இரண்டாம் எலிசபெத். இளவரசர் பிலிப் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இளவரசர் பிலிப் வாழ்வின் 10 சம்பவங்கள் புகைப்படங்களாக…
-
1 1947ம் ஆண்டு நடைபெற்ற திருமணத்துக்குப் பின்னர் இளவரசர் பிலிப் - மகாராணி இரண்டாம் எலிசபெத்
-
2 காதல் ஜோடி
-
3 ராணுவத்தில் கீழ்நிலை வீரர் முதல் படைப்பிரிவின் தலைவர் வரை பல பொறுப்புகளை வகித்த இளவரசர் பிலிப், 70 ஆண்டுகள் பிரிட்டிஷ் ராணுவத்தில் பொறுப்பு வகித்தார்.
-
4 கார்கள் மீது தீராக் காதல் கொண்ட இளவரசர் பிலிப்பின் கலெக்ஷன்களில் எம்.ஜி முதல் ஆஸ்டன் மார்ட்டின் வரை வின்டேஜ் கார்கள் பலவும் உண்டு.
-
5 குதிரைகள் என்றால் அலாதி பிரியம். அவரைப் போலவே மகள் ஆனுக்கும் குதிரைகள் என்றால் கொள்ளைப் பிரியம்.
-
6 1953ம் ஆண்டில் மகாராணி இரண்டாம் எலிசபெத்துடன் பெர்முடா சுற்றுப்பயணத்தின்போது
-
7 1973-ம் ஆண்டு நடைபெற்ற மகள் ஆன் - மார்க்ஸ் பிலிப் திருமணத்தில் அவரை அழைத்துச் செல்லும் இளவரசர் பிலிப்
-
8 `அவர் எப்போது எனது பலமாக கூடவே இருந்திருக்கிறார். நானும், இந்தக் குடும்பம் உள்பட பல நாடுகளும் அவருக்கு ரொம்பவே கடன்பட்டிருக்கிறோம்’ - 1997-ல் 50-ம் ஆண்டு திருமண நாளில் இளவரசர் பிலிப் குறித்து மகாராணி இரண்டாம் எலிசபெத்.
-
9 தனது பாதுகாவலர் போல் உடையணிந்த இளவரசர் பிலிப்பைப் பார்த்து புன்னகைக்கும் மகாராணி இரண்டாம் எலிசபெத்.
-
10 சகிப்புத் தன்மையே எந்தவொரு திருமண வாழ்வின் முக்கியமான அங்கம் - இளவரசர் பிலிப்
0 Comments