தாய்லாந்து சந்திரமுகி பங்களா

49 மாடி கட்டடம், இறந்த உடல்.. இது தாய்லாந்தின் சந்திரமுகி பங்களா?!

சந்திரமுகி படத்துல பேய் பங்களா ஒன்னு இருக்கும். அதுல நடக்கிற சம்பவங்கள்தான் கதையாவும் இருக்கும். அப்படி நிஜத்துல நடக்க வாய்ப்பு இல்லைனு நம்ம எல்லோருக்கும் தெரியும். ஆனா தாய்லாந்துல உண்மையாவே அப்படி சந்திரமுகி பங்களா ஒன்னு இருக்கு. அதைப் பத்தி நிறைய கருத்துக்கள் உலவிட்டும் இருக்கு. திடீர் திடீர்னு உருளுதாம், உடையுதாம்னு சொல்ற மாதிரி நிஜமாவே நிறைய சம்பவங்கள் அந்த பங்களாவுல நடந்திருக்கு. தாய்லாந்து மசாஜ்க்கு மட்டும் பேமஸ் இல்ல, இந்த கட்டிடமும் அங்க ஃபேமஸ்தான். அதைப் பத்தின சுவாரஸ்யமான சம்பவங்களைத்தான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.

கட்டிடக் கலையில எக்ஸ்பெர்ட் ஆன ரங்சன் பாங்காக்ல மிகப்பெரிய பில்டிங் கட்டலாம்னு முடிவு பண்றார். அப்போ தானே ரியல் எஸ்டேட் நிபுணரா இருந்ததால ஒரு நிலத்தை வாங்கி கட்டிடம் கட்ட ஆரம்பிக்கிறார். ப்ளான் பக்காவா ரெடியாகுது. மொத்தம் 49 மாடி கட்டிடம்னு முடிவு பண்ணி அதுக்கான ப்ளான்ல இறங்கினார். பக்கத்துலயே பார்க்கிங்க்காக 10 மாடி கட்டிடத்தை ஆரம்பிக்கிறார். அதுக்குப் பின்னால ரெண்டு கட்டிடத்தையும் இணைக்கிறார். அவரோட ப்ளானே இது பணக்கார மக்களுக்கான லக்ஸரி கட்டிடமாக இருக்ணும்னு மனசுல வச்சுக்கிட்டே வேலை பார்க்கிறார். தான் கட்டிடத்துறையில எக்ஸ்பெர்ட் அப்படிங்குறதால 1990-ல ஆரம்பிச்ச வேலை அடுத்த 3 வருஷத்துலயே 80 சதவீத பணிகளை முடிக்கிறார். ஆனா, அடுத்த சில நாட்கள்லயே கட்டிடம் பாதியில நிற்கும்னு கனவுலகூட நினைச்சுப்பார்த்திருக்க மாட்டார். அவ்ளோ பிரம்மாண்டமா மிகப்பெரிய முதலீட்டுல கட்டிடம் வளர்ந்தது. இப்போ அவர் சைட்ல வேலை பார்த்துக்கிட்டிருக்கார். இப்போ அங்க ஒரு போலீஸ் ஜீப் எண்ட்ரி கொடுக்குது. அப்போ வழக்கமா போலீஸ் ஏதாவது வேலையா வந்திருப்பாங்க, விசாரிச்சுட்டு போயிடுவாங்கனு நினைச்சு அவரை வரவேற்கிறார்.

இங்க ஒன்னும் நாங்க விருந்து சாப்பிட வரலை. வண்டியில ஏறுங்கனு சொல்லி ரங்சனை போலீஸ் ஜீப்ல அழைச்சுக்கிட்டு போயிட்டாங்க. இப்போ ஸ்டேஷன்ல வைச்சு அவரை விசாரிக்கிறாங்க. சொல்லுங்க நீங்க ஏன் உச்சநீதிமன்ற நீதிபதியை கொல்ல திட்டம் போட்டீங்கனு அவரை போலீஸ் விசாரிக்கிது. ஏது நானா, அப்படியெல்லாம் இல்லைனு தன்னோட தரப்பு விளக்கத்தை வைக்கிறார். ஆனா இல்ல நீ பண்ணியிருப்ப அப்படினு சொல்லி பல வருஷமா ஜெயில்ல வைச்சிடுறாங்க.

Also Read – சின்னதா வந்து சில்லறையை சிதறவிட்ட குட்டி வில்லன்களைத் தெரியுமா?

1993-ம் வருசத்துல இருந்து 2008-ம் வருசம் வரைக்கும் வழக்கு நடக்குது. இந்தக்காலக்கட்டத்துல மனுஷனுக்கு ஜாமீன்கூட கிடைக்கலை. 2008-ம் வருஷம் இவர் குற்றவாளினு அறிவிக்கப்பட்ட நிலையில 2010-ல நீங்க பண்ணலைனு முடிவுக்கு வந்துட்டோம். நீங்க வெளில போலாம்னு சொல்லி அந்த வழக்கு முடிச்சு வைக்கப்படுது. கிட்டத்தட்ட 17 வருஷ காலம் கேஸ்ல இருந்ததால கட்டிடத்தை இவரால நினைச்ச மாதிரி கட்ட முடியலை. இதுபோக 1997-ம் வருஷம் ஆசிய நாடுகளையே உலுக்கி எடுத்த நிதிநெருக்கடி அதிகமா இருந்தது. அதனால பாங்க்காக்ல 80 சதவிகித கட்டிட பணிகள் பாதியிலேயே நிறுத்துனாங்க. அந்த சூழல்லதான் பேய் டவர் கட்டிடமும் முழுமையா மூடப்பட்டது. நிதி நெருக்கடி முடிஞ்ச உடனே மத்த கட்டிடங்கள் வழக்கம்போல தங்களோட பணிகளை துவக்குனாங்க. ஆனா இந்த கட்டிடம் மட்டும் முழுசா மூடப்பட்டுச்சு.

ரங்சன் விடுதலையாகி வந்த பின்னாலகூட இதை அவரால தொடரமுடியலை. இடையில அவர் மகன் பன்சித் கையில எடுத்தும் இந்த கட்டிடத்தை முழுசா முடிக்க முடியலை. அதிகமான வருஷங்கள் இந்தக் கட்டிடம் மூடியே கிடந்ததால மக்கள் இதை பேய் டவர்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. அதனால் மக்கள் யாரும் இந்தக் கட்டிடத்துக்கு போகவே முன்வரலை. மக்கள் இதை பேய் பங்களானு சொல்றதுக்கு இன்னொரு கதையும் இருக்கு. இந்த பில்டிங் மொத்தமும் ஒரு கல்லறை மேல கட்டப்பட்டிருக்கிறதா ஒரு கதை எழுத ஆரம்பிச்சாங்க. அது மக்கள் மத்தியில தீயா பரவ ஆரம்பிச்சது. அது என்னன்னா?.. இந்த பில்டிங்கை கட்டின இடம் முன்காலத்துல கல்லறையா இருந்துச்சாம். அதனால அங்க இருக்கிற பேய்கள்தான் இந்த கட்டிடத்தை பாதியிலயே நிறுத்தி வைச்சுடுச்சுனு ஒரு கருத்தும் இருக்கு. இந்தக் கருத்துக்கு வலுசேர்க்கிறவிதமா 2014-ம் வருஷம் 43 வது மாடியில்ல ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒருத்தரோட சடலம் தூக்குல தொங்கிய நிலையில கண்டெடுக்கப்பட்டிருக்கு. அதுக்குக் காரணம் தற்கொலைனு பின்னால தெரிஞ்சது. இது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்த, இந்தக் கட்டிடம் பத்தி பயங்கரமான கதைகளை கிளப்பிவிட ஆரம்பிச்சாங்க. இதைப் பார்த்த ஒரு இயக்குநர் தி ப்ராமிஸ்னு ஒரு கதை உருவாக்கி இந்த பேய் டவர்லயே படமாக்கிட்டார். நகருக்கு மையத்துல இருந்தாலும் இங்க நடந்த மோசமான சம்பவத்தால இது வெறிச்சோடித்தான் இருக்கு. தாய்லாந்துக்கு சுற்றுலா போற பயணிகளும் தவறாம இந்தக் கட்டிடத்தை பார்க்கிறாங்க. இந்தக் கட்டிடத்தில் மக்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் கட்டிடத்தைச் சுற்றிப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனா, இந்தக் கட்டிடத்தை பார்க்க அனுமதி இல்லை. அங்க இருக்கிற காவலாளிகளுக்கு பணத்தைக் கொடுத்து உள்ளே போய் சுத்திப் பார்க்குறாங்க.

ஒரு விஷயம் என்னன்னா?, அந்த காவலாளிகள் இதுவரைக்கும் உள்ளே போனதே இல்லையாம். அந்த அளவுக்கு மிரட்டலான டவரா இன்னைக்கும் இருக்கு. அந்தக் கட்டிடம் கைவிடப்பட்டு 25 வருஷத்துக்கு மேல ஆகுது. இந்தக் கட்டிடத்தோட உண்மையான பெயர் சாத்தோர்ன் யூனிக் டவர். தாய்லாந்தோட கலாசாரத்தை பிரதிபலிக்கிற கட்டிடமா மாறியிருக்க வேண்டிய கட்டிடம் இன்னைக்கு மோசமான நிலையில கைவிடப்பட்டிருக்கு. இதுக்கெல்லாம் மேல அல்டிமேட்டா ஒரு விஷயம் இருக்கு. இந்தக் கட்டிடத்துல மக்கள் நிறைய பேய்களை பார்த்திருக்கிறதாவும், அப்பப்போ அங்க இருந்து சத்தம் வர்றதாவும் சொல்லிட்டு இருக்காங்க. அந்தக் கட்டிடத்தோட உரிமையாளர் கடைசிவரைக்கும் அதை கட்ட நினைக்க, இப்போ வரைக்கும் அது கைகூடவே இல்லை. நம்ம சந்திரமுகி பங்களா மாதிரி அப்படியே இருக்கு. பக்கத்துல குடியிருக்கிறவங்க, ஒருவித அச்சத்துலதான் நடமாடிக்கிட்டிருக்காங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top