• ஜெயலலிதா: `சிசிடிவி அகற்றம் ஏன்?’ – ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக அப்போலோ வைத்த 3 வாதங்கள்!

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் இனி ஆஜராக முடியாது என அப்போலோ மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. 1 min


    அப்போலோ மருத்துவமனை
    அப்போலோ மருத்துவமனை

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது முந்தைய அ.தி.மு.க அரசு கூறியதாலேயே சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.

    ஜெயலலிதா சிகிச்சை

    ஜெயலலிதா
    ஜெயலலிதா

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சைபெற்ற நிலையில், அந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் விசாரணை நடத்தி வரும் நிலையில், அப்போலோ மருத்துவமனை சார்பில் பல்வேறு முறை நேரில் ஆஜராகி ஆணையம் முன்னர் பல்வேறு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    அப்போலோ வழக்கு

    இந்தநிலையில், ஆறுமுகசாமி ஆணையம் முன்பாக ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. அப்போது அப்போலோ மருத்துவமனை தரப்பில், `முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது அவருக்கு பிரைவசி வேண்டும் என அப்போதைய தமிழக அரசு கூறியதாலேயே அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை அகற்றினோம். ஒருதலைபட்சமாக நடந்துகொள்ளும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு விசாரணைக்காக இனிமேல் ஆஜராக முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டது. ஆணையத்துக்கு எதிராக அப்போலோ தரப்பில் மூன்று விஷயங்கள் முன்வைக்கப்பட்டது. அதில், இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் ஏராளமானோர் இன்னும் விசாரிக்கப்படாமல் இருக்கிறார்கள். ஆனால், எங்கள் மருத்துவர்களையே திரும்பத் திரும்ப விசாரணைக்கு அழைக்கிறார்கள். ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது.

    அப்போலோ மருத்துவமனை
    அப்போலோ மருத்துவமனை

    விசாரணை தொடர்பாக நாங்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களை ஆணையம் தரப்பில் இருந்து ஊடகங்களில் கசிய விடுகின்றனர். இதனால், எங்கள் மருத்துவமனையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுகிறது. இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. அந்த உரிமையின் அடிப்படையில்தான் ஆணையத்தின் முன்பு இனிமேல் விசாரணைக்கு ஆஜராக முடியாது என்கிறோம். மருத்துவ வல்லுநர்கள் இடம்பெறாத இந்த ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உண்மையைக் கண்டறிய நடக்கும் விசாரணையாக இது தெரியவில்லை என்றும் அப்போலோ மருத்துவமனை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

    Also Read – அஜித் வீடியோ, ஜெயலலிதா வீடியோ… அப்போலோ சர்ச்சையின் பின்னணி என்ன?


    Like it? Share with your friends!

    563

    What's Your Reaction?

    lol lol
    12
    lol
    love love
    8
    love
    omg omg
    41
    omg
    hate hate
    8
    hate

    Web desk

    0 Comments

    Leave a Reply

  • Choose A Format
    Personality quiz
    Series of questions that intends to reveal something about the personality
    Trivia quiz
    Series of questions with right and wrong answers that intends to check knowledge
    Poll
    Voting to make decisions or determine opinions
    Story
    Formatted Text with Embeds and Visuals
    List
    The Classic Internet Listicles
    Countdown
    The Classic Internet Countdowns
    Open List
    Submit your own item and vote up for the best submission
    Ranked List
    Upvote or downvote to decide the best list item
    Meme
    Upload your own images to make custom memes
    Video
    Youtube and Vimeo Embeds
    Audio
    Soundcloud or Mixcloud Embeds
    Image
    Photo or GIF
    Gif
    GIF format
    பயமா இருக்கா… இந்த இடங்களுக்கெல்லாம் போனா இன்னும் பயங்கரமா இருக்கும்! ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..!’ ஓய்விலிருந்து Comeback கொடுத்த 5 கிரிக்கெட் வீரர்கள்! உலகின் வண்ணமயமான Aquariums!! அழகு மீன்களின் அணிவகுப்பு ‘இளமை திரும்புதே, ரௌடி பேபி, அம்மா அம்மா’ – ‘Poetu’ தனுஷின் வேறலெவல் பாடல்கள்! தாஜ்மஹால வேற வேற ஊர்ல பார்த்து இருக்கீங்களா?