முதல்வரான பிறகு முதல்முறையாக கோவளம் டு மகாபலிபுரம் வரை சுமார் 25 கி.மீ சைக்கிளில் பயணித்தார் மு.க.ஸ்டாலின். அவர் ஓட்டிய Pedaleze C2 சைக்கிளில் என்ன ஸ்பெஷல்?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் கூடுதல் அக்கறை கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வராவதற்கு முன்பு அவர் உடற்பயிற்சி செய்வது, சைக்கிள் ஓட்டுவது போன்ற போட்டோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். விடுமுறை நாட்களில் கிழக்குக் கடற்கரை சாலையில் ரிலாக்ஸாக சைக்கிளிங் போவது அவரது வழக்கம். ஆனால், கொரோனா நோய்த்தொற்று அதிகரித்ததால் முதல்வரான பின்னர் சைக்கிளிங் செல்வதை அவர் தவிர்த்து வந்தார். இந்தநிலையில், கடந்த 4-ம் தேதி கோவளம் முதல் மகாபலிபுரம் முதல் சுமார் 25 கி.மீ வரை சைக்கிளிங் போயிருக்கிறார் ஸ்டாலின். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பெரிதாக பாதுகாப்பு என்பது இல்லாமல் இயல்பாக சைக்கிளிங் செல்வது அவர் வழக்கம். முதல்வர் பொறுப்பேற்றிருக்கும் சூழலில் போலீஸ் பாதுகாப்புடன் அவர் சைக்கிளிங் சென்ற போட்டோக்கள் இன்டர்நெட்டில் வைரலாகின. இந்தப் பயணத்துக்கு அவர் பயன்படுத்தியது Pedaleze C2 மாடல் சைக்கிள்.
Pedaleze C2 சைக்கிளில் என்ன ஸ்பெஷல்?
எலெக்ட்ரிக் சைக்கிள் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் இந்திய நிறுவனமான Pedaleze-ன் சிக்னேச்சர் தயாரிப்புகளில் ஒன்று C2 சைக்கிள்கள் முக்கியமானவை. H2, O2 என இன்னும் இரண்டு பாப்புலர் மாடல்களும் அந்த நிறுவனம் தயாரிப்பவைதான். C2 சைக்கிள்கள் 36 வோல்ட் 7 Ah பேட்டரி கொண்டது. எலெக்ட்ரிக் சைக்கிளான இதை 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் சுமார் 35 – 40 கி.மீ வரை பெடல் பண்ணாமலேயே பயணிக்க முடியும் என்கிறது Pedaleze நிறுவனம்.
பிரண்ட் அண்ட் பேக் எல்.ஈ.டி விளக்குகள், 7 Speed gear train, ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டியுடன் கூடிய எல்.சி.டி டிஸ்பிளே கொண்டது. அலுமினியம் 6061-T6 மெட்டீரியலால் உருவாக்கப்பட்ட C2 மாடல் சைக்கிள் 19 இன்ச் உயரம் கொண்டது. 120 கிலோ வரை எடை தாங்கும் வலிமை கொண்ட இந்த சைக்கிளின் விலை choosemybicycle.com வெப்சைட்டில் ரூ.81,499 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பெடலுக்குக் கீழே அமைக்கப்பட்டிருக்கும் சின்ன சைஸ் மோட்டார் மூலம் பெடல் செய்யாமலேயே நீங்கள் பயணிக்க முடியும். 5.5 அடி உயரத்துக்கு மேல் இருக்கும் வாடிக்கையாளர்களின் பெஸ்ட் சாய்ஸ் இந்த மாடல் சைக்கிள் என்கிறது தயாரிப்பு நிறுவனம்.
அட்ஜஸ்டபிள் ஃப்ரண்ட் ஷாக் அப்சர்பர்களுடன் வரும் இந்த சைக்கிளில் 250 W சக்திகொண்ட மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது. கறுப்பு, சிவப்பு, ஊதா என மூன்று நிறங்களில் வருகிறது இந்த மாடல் சைக்கிள். ஸ்மார்ட் மோட் உள்ளிட்ட நான்கு டிரைவிங் மோட்கள் லாங் டிரைவ்-க்கு ஏற்றது.
Also Read – மேகதாது அணை விவகாரத்தில் என்ன பிரச்னை… வரலாறும் பின்னணியும்..!