அடேய் கோவையன்ஸ், உங்க குசும்பு இருக்கே..!

எல்லா ஊருக்கும் யூனிக்னஸ் இருக்கு. அதேமாதிரிதான் கோயம்புத்தூருக்கும். அவங்க மரியாதைல ரொம்ப ஸ்பெஷல்னு சொல்ற மாதிரியே குசும்புலயும் கொஞ்சம் ஸ்பெஷல்தான். அவங்க பண்ண சில குசும்புகளை இந்த வீடியோல நாம பார்க்கலாம்.

கோவைன்னா சும்மா இல்லீங்கோவ்..னு, சோஷியல் மீடியால ஒரு போஸ்ட் வைரல் ஆகிட்டு இருந்துச்சு. அதுல, “திருநெல்வேலியிலிருந்து கோவைக்கு ஒருத்தர் இன்டர்வியூக்கு வந்துருக்காரு. வந்தவர் காந்திபுரத்திலிருந்து டவுன்பஸ்ல ஏறி கூட்டத்துல மிதந்து வந்து நடுவில நின்னுட்டாரு. அங்க பஸ்ல முன்னாடி பெண்கள் பகுதி, பின்னாடி ஆண்கள் பகுதி. ஒவ்வொருத்தரா டிக்கட் எடுக்க ஆரம்பிச்சாங்க. ஒரு பொண்ணு ‘சித்ரா ஒண்ணு’னு சொல்லி டிக்கட் எடுத்துருக்கு. இன்னொரு பொன்னு ‘சுகுணா ஒண்ணு’னு சொல்லியிருக்கு. ஒரு அம்மா ‘கிருஷ்ணம்மாள் ஒண்ணு’னு சொல்லிருக்கு. இன்னொருத்தர் ‘வரதராஜ் ஒண்ணு’ ன்னு சொல்லி டிக்கெட் எடுத்தாரு. அதேமாதிரி இன்னும் ரெண்டு பேர், ‘ராதா கிருஷ்ணா’ ஒண்ணு, ‘அரவிந்த் ஒண்ணு’ குடுங்கன்னு டிக்கெட் எடுத்துருக்காரு.

Coimbatore
Coimbatore

இன்டர்வியூ போன நம்மாளு இதையெல்லாம் கவனிச்சிக்கிட்டே இருந்துருக்காரு. சித்ரா ஒண்ணு, சுகுனா ஒண்ணு, அரவிந்த் ஒண்ணு, கிருஷ்ணம்மாள் ஒண்ணு, ராதாகிருஷ்ணா ஒண்ணு, வரதராஜ் ஒண்ணு – இப்படி சொல்லி எல்லாரும் டிக்கட் எடுக்கவும் நம்மாளு, “ஓஹோ… இந்த ஊர்ல எல்லாரும் அவங்கவங்க பேரை சொல்லி தான் டிக்கட் எடுக்கனும் போலன்னு நினைச்சிக்கிட்டு, ‘சுப்பிரமணி ஒண்ணு’ அப்டின்றுக்காரு. கண்டக்டர் மண்டகாஞ்சு போய், “என்னது சுப்பிரமணியா? அப்படி ஒரு ஸ்டாப்பே இல்லையே”ன்னாரு. உடனே, இவரு “மத்தவங்களுக்கு மட்டும் பேரைச் சொன்னவுடனே டிக்கட் கொடுத்தீங்க. ஏன் எனக்கு மட்டும் தரமாட்டீங்கிறீங்க”ன்றுக்காரு. கண்டக்டர் யோவ் “அவங்க சொன்னதெல்லாம் பஸ் ஸ்டாப் பேருயா”ன்னு சொல்லியிருக்காரு. அடேய், கோயம்புத்தூர்காரங்களா என்னடா ஸ்டாப் பேரு வைச்சிருக்கீங்க?

சரி, ஸ்டாப் பேருதான் இப்படி இருக்குதுனு பார்த்தா, இவங்க பயன்படுத்துற சில வார்த்தைகளும் அப்படி தான் இருக்கு. தப்பா சொல்லல, அந்த வட்டாரமொழிக்கான அழகோட இருக்கு. நாம அதை கேட்கும்போது இதெல்லாம் தமிழ் வார்த்தையா?னு தோணும். நம்ம கன்னியாகுமரியன்ஸ்க்கே டஃப் கொடுப்பாங்க போல இருக்கு. எக்ஸாம்பிள் பாருங்க, ஏனுங் அந்த வட்டன் எடுங். அப்டினா தட்டமாம். கிளாஸ் எடுடா பக்கினு சிம்பிளா சொல்லுவோம். ஆனால், இவங்க கிளாஸ எடுத்துட்டு வான்னுவாங்களாம். இந்த வார்த்தை எல்லாம் எந்த லிஸ்ட்லயுமே சேராதேடா? உப்புசமா இருக்கு, அதாவது வேர்த்து கொட்டுதுனு சொல்லுவோம்ல, அதுக்கு இப்படி சொல்லுவாங்களாம். இதெல்லாம் பரவால்ல விடுங்க. குழாப்புனு ஒரு வார்த்தை வைச்சிருக்காங்க. எவனாலயும் கண்டுபிடிக்க முடியாது. அப்படினா விளக்காம். கோயம்புத்தூர்னு சொன்னாலே நமக்கு மரியாதைதான் நியாபகம் வரும். அந்த விஷயத்துல அவங்களை அடிச்சுக்க முடியாது. ஆனால், அவங்க பேசுற சில வார்த்தையெல்லாம் அல்டிமேட்டா இருக்கும்.

போசி (மக்குதான் போசி), சால் (தண்ணி புடிச்சு வைக்கிற குண்டா), செருப்பு தொட்டுட்டு வா (செருப்பு போட்டுட்டு வர்றதுதான் இதுக்கு அர்த்தம்), பொடி சுடுது (வெயில் அடிக்குது), பப்ஸ் (சமோசா), தண்ணி நம்பி போகுது (தண்ணி நிரம்பி போகுது), தொளாவுறது (தேடுறது), – இந்த வார்த்தைக்குலாம் என்ன அர்த்தம் தெரியுமா? யோசிச்சிட்டே இருங்க. வீடியோ கடைசில இதுக்குலாம் அர்த்தம் சொல்றேன்.

சோஷியல் மீடியால சுத்திட்டு இருந்த சம்பவம் ஒண்ணு சொல்றேன். இதுவும் பஸ்ல நடந்த காமெடிதான். ஒருத்தங்க ரெண்டுநாள் ஆபீஸ் வேலையா கோயம்பத்தூர் போயிருக்காங்க. அங்க லோக்கல் பஸ்ல கண்டக்டர்கிட்ட, “சார் ஒரு காந்திபுரம் குடுங்க”னு கேட்ருக்காங்க. “எங்க ஊர்லே ஒரே ஒரு காந்திபுரம் தான் இருக்கு, அதையும் உனக்கு குடுத்துட்டா அப்புறம் நாங்க என்ன பண்றது?”ன்றுக்காரு. ஆஹா, இன்னைக்கு சனி சடைபோட ஆரம்பிச்சிருச்சு, இன்னும் என்னனென நடக்கப்போகுதோ?னு நினைச்ச்சுட்டு, “சார் காந்திபுரம் போக ஒரு பயணச்சீட்டு குடுங்க”னு மாத்தி கேட்ருக்காங்க. கன்டக்டர் உடனே, “ஓ, அதுவா அப்படிக்கேளு, இந்தா”னு டிக்கெட் கொடுத்துருக்காரு. இனிமேல் இந்த ஊருக்காரனுக கிட்ட இனி வாயக்குடுத்து வாங்கிகட்டிக்க கூடாதுனு ஒரு சீட்ல போய் உட்கார்ந்துருக்காங்க.

நமக்கு கலாய்க்க சரியான பீஸ் கிடைச்சிடுச்சுனு பஸ்ல இருக்குறவங்க நினைச்சுப்பாங்க போல. இவங்களும் அதுக்கு ஏத்த மாதிரி கண்டெண்ட் கொடுத்துருக்காங்க. இவங்க அந்த ஊருக்குப் புதுசு, பக்கத்துல இருந்தவர்கிட்ட, “சார் காந்திபுரம் வந்தா சொல்லுங்க”-னு சொல்லியிருக்காங்க. உடனே அவரு “காந்திபுரம் , காந்திபுரம், காந்திபுரம், காந்திபுரம்”னு நாலு தடவை சத்தமா கத்திட்டு, இவங்களைப் பார்த்து, “சார், நான் கூப்பிட்டு பாத்தேன் காந்திபுரம் வரமாட்டேங்குது, நீங்க வேணும்னா ஒரு வாட்டி கூப்பிட்டு பாருங்க”னு சொல்லியிருக்காரு. ணோவ் முத்தண்ணா-னு நமக்கு தோணலாம். ஆனால், அங்க எல்லாம் சிரிக்க ஆரம்பிச்சிருக்காங்க. அடப்பாவிகளா, வீட்டுலயே யோசிச்சிட்டு வருவானுகளோ-னு இவர் மைண்ட் வாய்ஸ் வேற.

Coimbatore
Coimbatore

கான்வர்சேஷனை இதோட முடிக்கலாம்ல, அதான் இல்லை. “சார் காந்திபுரம் ஸ்டாப் வந்தா சொல்லுங்க , நான் அங்க இறங்கனும்”ன்றுக்காரு. அதுக்கும் யோசிக்காமல், “சரி, உங்க ஃபோன் நம்பர் குடுங்க, நான் நீங்க இறங்க வேண்டிய ஸ்டாப்புக்கு முன்னாடியே இறங்கிடுவேன், நாளைக்கு அந்தப்பக்கம் போவேன், அப்ப காந்திபுரம் வந்த உடனே உங்களுக்கு ஃபோன் பண்றேன்றுக்காரு”. ஏனுங், கோயம்புத்தூர் காரங் நீங்கலாம் பொறக்கும்போதே குசும்போடதான் பொறந்தீங்களாங்?

கோயம்புத்தூர் காரங்க அரசியலும் கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கும். தமிழ்நாடே சேர்ந்து கடந்த தேர்தல்ல ஒரு முடிவை கொடுத்தாங்க. ஆனால், இவங்க மட்டும் மொத்தமா வேற ஒரு முடிவை கொடுத்தாங்க. இதே டயலாக்கை வேற எங்கயோ கேள்விபட்ட மாதிரி இருக்குல? ரொம்ப யோசிக்காதீங்க, கன்னியாகுமரி வீடியோலயும் இதைத்தான் சொன்னேன். கன்னியாகுமரிக்கும் கோயம்புத்தூருக்கும் இந்த வித்தியாசமான வட்டார வழக்கு அரசியல் நடவடிக்கைகள் இதுலலாம் நிறைய ஒற்றுமைகள் இருக்கு. அந்த ஒத்த ஓட்டையும் டிரெண்ட் ஆக்குனது இவங்கதான். யூனிக்கான உணவுகளும் பண்ணுவாங்க. கோழி உருண்டை, காளான் வறுவல், கொள்ளு சட்னி, அரிசியும் பருப்பும் இதெல்லாம் அங்க ஸ்பெஷலான உணவுனு சொல்றாங்க. நான் கோயம்புத்தூர் இல்லை. அதனால சரியா தெரியல. ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல்காரங்கலாம் நானும் கோயம்புத்தூர்தான்டானு கம்பு சுத்துவாங்க. அவங்க சொல்லாதீங்க. உண்மையான கோவையன்ஸ் மட்டும் சொல்லுங்க.

Coimbatore
Coimbatore

நாமலாம் டீ குடிக்க பக்கத்துல இருக்க கடைக்குப் போவோம். ஆனால், இவங்கலாம் பைக் எடுத்துட்டு ஊட்டிக்குப் போவாங்க. நாலாவது ஹேர்பின் பெண்ட்ல வாந்தி எடுத்துட்டு வந்து டீ செமயா இருந்துச்சுனு போஸ்ட்டும் போடுவாங்களாம். நான் சொல்லல, ஓம் கிரீம் பாட்காஸ்ட்ல அரசல்புரசலா பேசிக்கிட்டாங்க. அதேமாதிரி ட்விட்டர்ல ஒரு போஸ்ட் பார்த்தேன். கோவைல மீன் மார்க்கெட் பக்கத்துல ஒரு டீக்கடைல பிஸ்கெட் பாட்டில்ல “பிஸ்கெட்டுக்கு இன்னும் பெயர் வைக்கலை”னு போட்ருந்தாங்க. இப்படி அவங்க பண்ண அட்டகாசங்களை ட்விட்டர்ல போய் கோவையன்ஸ்னு டைப் பண்ணிப் பாருங்க. எக்கச்சக்கமா வரும். சரி, சினிமாக்குள்ள போவோம். கோவைனா சொன்னா எந்த செலிபிரிட்டி உங்களுக்கு நியாபகம் வருவாங்க? உங்களுக்கு எப்படினு தெரியலை எனக்கு ஆதிண்ணாதான். அதுவும் “கோவைனா கெத்து” பாட்டுலாம் அல்டிமேட் வைப் கிரியேட் பண்ணிவிடும். கவுண்டமணி, மணிவண்ணன், சத்யராஜ், கோவை சரளா, ஏன், நம்ம லோகேஷ் கனகராஜ்-னு பல லெஜண்ட்கள் கோயம்புத்தூரைச் சேர்ந்தவங்கதான். இவங்க பண்ண அட்ராசிட்டியெல்லாம் சொல்லவே வேணாம்.

இயற்கை அழகும் கோயம்புத்தூர்ல கொஞ்சி விளையாடும். பக்கத்துலயே கேரளா இருக்குறதால அந்த வாசம் கோயம்புத்தூர்லயும் வீசும். அதெல்லாம் இருக்கட்டும். முன்னாடி சொன்ன வார்த்தைக்குலாம் அர்த்தம் எங்கடானு தான யோசிக்கிறீங்க? இதோ சொல்றேன். போசினா மக்குதான், சால் அப்படினா தண்ணி புடிச்சு வைக்கிற குண்டாவாம், செருப்பு தொட்டுட்டு வா – வித்தியாசமா இருக்குல்ல. அதுக்கு செருப்பைக் கால்ல மாட்டிட்டு வான்னு அர்த்தமாம், பொடி சுடுதுனா, வெயில் அடிக்குதாம், பப்ஸ்னா சாதா பப்ஸ்னுதான நினைக்கிறீங்க. அதான் இல்லை. அங்க பப்ஸ்னா குட்டி சமோசானு அர்த்தமாம், தண்ணி நம்பி போகுதுனா என்ன தெரியுமா? தண்ணி நிரம்பி போகுது. அவ்வளவுதான். தொளாவுறதுனா தேடுறதுனு அர்த்தம், மச்சு வீடுனா மாடி வீடு. நீங்க கேட்டதுல வித்தியாசமான கோவை வார்த்தை என்னனு கமெண்ட்ல சொல்லுங்க.

கோவை மக்களே, இவ்வளவு நேரம் நான் பேசுனதுல எதுவும் தப்பா இருந்தா மனசுல வைச்சுக்காதீங். எதுவா இருந்தாலும் நாம பேசி தீர்த்துக்கலாம். கோயம்புத்தூர்னு சொன்னதும் உங்களுக்கு என்ன நியாபகம் வரும்னு கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top