• சட்டப்பேரவைத் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் டிராக் ரெக்கார்டு!

    எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் இருவரின் தேர்தல் வெற்றி, தோல்விகள்.1 min


    EPS Stalin
    ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராகத் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டிருக்கிறார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி ஸ்டாலின் தலைமையில் களம் காண்கிறது. இவர்கள் இருவருக்கும் முதல் தேர்தல் எது… எத்தனை முறை வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

    எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியின் பெயரோடு அறியப்படுகிறார். இவர் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் 7வது முறையாகப் போட்டியிடுகிறார். 1989ம் ஆண்டு முதல் 2021 வரை 7 முறையுமே இவர் எடப்பாடி தொகுதியிலேயே போட்டியிடுகிறார். 2001 தேர்தலில் மட்டும் எடப்பாடி பழனிசாமி போட்டியிடவில்லை.

    • 1989 சட்டப்பேரவைத் தேர்தல் – எடப்பாடி தொகுதி – வெற்றி
    • 1991 சட்டப்பேரவைத் தேர்தல் – எடப்பாடி தொகுதி – வெற்றி
    • 1996 சட்டப்பேரவைத் தேர்தல் – எடப்பாடி தொகுதி – தோல்வி
    • 2006 சட்டப்பேரவைத் தேர்தல் – எடப்பாடி தொகுதி – தோல்வி
    • 2011 சட்டப்பேரவைத் தேர்தல் – எடப்பாடி தொகுதி – வெற்றி
    • 2016 சட்டப்பேரவைத் தேர்தல் – எடப்பாடி தொகுதி – வெற்றி

    2016ம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி தொகுதியில் 42,022 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றிருந்தார். அந்தத் தேர்தலில் பா.ம.க இரண்டாவது இடத்தையும் தி.மு.க மூன்றாவது இடத்தையும் பிடித்திருந்தன. 2021 தேர்தலில் எடப்பாடி தொகுதியில் திமுக சார்பில் 37 வயதான சம்பத்குமார் களம்காண்கிறார்.

    மு.க.ஸ்டாலின்

    ஸ்டாலின்

    தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி ஸ்டாலின் தலைமையில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்க்கொள்கிறது. 1984ம் ஆண்டு முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ஸ்டாலின் இதுவரை 8 முறை களம்கண்டு, இரண்டு முறை தோல்வியடைந்திருக்கிறார். இந்த முறை அவர் களம் காணும் கொளத்தூரில் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார்.

    • 1984 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி – தோல்வி
    • 1989 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி – வெற்றி
    • 1991 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி – தோல்வி
    • 1996 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி – வெற்றி
    • 2001 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி – வெற்றி
    • 2006 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி – வெற்றி
    • 2011 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை கொளத்தூர் தொகுதி – வெற்றி
    • 2016 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை கொளத்தூர் தொகுதி – வெற்றி

    Like it? Share with your friends!

    510

    What's Your Reaction?

    lol lol
    20
    lol
    love love
    16
    love
    omg omg
    8
    omg
    hate hate
    16
    hate

    0 Comments

    Leave a Reply

  • Choose A Format
    Personality quiz
    Series of questions that intends to reveal something about the personality
    Trivia quiz
    Series of questions with right and wrong answers that intends to check knowledge
    Poll
    Voting to make decisions or determine opinions
    Story
    Formatted Text with Embeds and Visuals
    List
    The Classic Internet Listicles
    Countdown
    The Classic Internet Countdowns
    Open List
    Submit your own item and vote up for the best submission
    Ranked List
    Upvote or downvote to decide the best list item
    Meme
    Upload your own images to make custom memes
    Video
    Youtube and Vimeo Embeds
    Audio
    Soundcloud or Mixcloud Embeds
    Image
    Photo or GIF
    Gif
    GIF format
    கோலிவுட்டின் ’அரசியல்’ படங்கள்! ‘சூடா என்ன இருக்கு…’ – வைரல் மொபைல் மீம்ஸ் கலெக்‌ஷன்! காமகோடி பீடம்; கள்வன் பெருமாள் – காஞ்சி காமாட்சி கோயிலின் தலபெருமை! பள்ளி மாணவிகளாக நடித்து பட்டைக் கிளப்பிய “தமிழ் ஹீரோயின்ஸ்” ஹாலிவுட்டில் ஒலித்த “ஏ.ஆர். ரஹ்மான் பாடல்கள்”