ஈரோடியன்ஸ்

அடேய் ஈரோடியன்ஸ்.. யார்யா நீங்கலாம்… இவ்வளவு சேட்ட பண்றீங்க?

இன்னைக்கு தமிழ்நாட்டுல பரபரப்பா இருக்கக்கூடிய ஊர்னா, ஈரோடுதான். இவங்க கதையெல்லாம் கேட்டா, கோவை குசும்புக்கு சற்றும் ஈரோடியன்ஸ் குசும்பு சளைச்சதில்லனுதான் தோணுது. அவங்க பேசுற வார்த்தைகள்லாம் கன்னியாகுமரி, கோவைனு எல்லா ஊருக்கும் டஃப் கொடுக்குது. சீவக்கொட்டை, தாவக்கொட்டைனு என்னலாமோ சொல்றாங்க. ரைட்டு ஈரோடுகாரங்க பஸ்ல பண்ற அட்ராசிட்டீஸ், ஸ்லேங் சிக்கல்கள், ஸ்பெஷல் உணவுகள், மாணவர் கேட்ட டவுட் எல்லாத்தையும் பார்ப்போம். 100% ஃபன் இருக்கு.  

ஈரோடியன்ஸ்
ஈரோடியன்ஸ்

முதல்ல பஸ்ல இருந்து ஆரம்பிப்போம். சமீபத்துல ஃபேஸ்புக்ல படிச்ச போஸ்ட்தான் இது..

கோவையிலிருந்து ஈரோடு ஒருத்தர் போய்ருக்காரு. அந்த பஸ்ல வயதான அம்மா ஒருத்தங்க கண்டக்டரிடம், “கருமத்தம்பட்டி வந்திடுச்சா?”னு கேட்ருக்காங்க. “கருமத்தம்பட்டியா? அதுக்கு இன்னும் ரொம்ப தூரம் இருக்கும்மா”னு அவர் சொல்லியிருக்காரு. சரினு சொல்லிட்டு சீட்ல உட்கார்ந்துருக்காங்க. KMCH வந்ததும், திரும்பவும், “கருமத்தம்பட்டி வந்திடுச்சா?”னு கேட்க, “அட.. இன்னும் இல்லைம்மா”ன்றுக்காரு.  சின்னியம் பாளையம் தாண்டியதும், அந்தம்மா, “ஏங்க, கருமத்தம்பட்டி வந்திடுச்சா?”ன்றுக்காங்க. கண்டெக்டர் செம காண்டாகி, “ஐயோ அம்மா.. உங்க இம்சை தாங்கலை. பேசாம கண்ணை மூடிட்டு தூங்கும்மா. ஊரு வந்தா நானே சொல்றேன்”னு சொல்லியிருக்காரு. அந்தம்மாவும் கண்ணை மூடி தூங்கியிருக்கு. பஸ் அவினாசியை தாண்டிக் கொண்டிருந்தது. “கண்டக்டர் சார்.. கருமத்தம்பட்டி வந்திடுச்சா?” – தூங்கி எழுந்த அந்தம்மா கேட்ட்ருக்காங்க. கண்டக்டருக்குத் தூக்கி வாரிப் போட்ருக்கு. “ஐயையோ.. நான் மறந்திட்டேனே. நீ ஏம்மா தூங்கினனு பழியை அந்தம்மா மீது தூக்கிப் போட்ருக்காரு.

பஸ்ல சக பயணிகள் காண்டாகி, “பாவம் அந்தம்மா.. வண்டியைத் திருப்புய்யா.. திரும்ப கருமத்தம்பட்டில கொண்டு போய் அந்தம்மாவ விட்டுட்டு திரும்பி வா”ன்றுக்காங்க. கண்டக்டருக்கு வேறு வழி தெரியல. பஸ்ஸை திருப்பி கருத்தம்பட்டிக்கு வயதான அந்தம்மாவை கூட்டிட்டுப் போய்ருக்காங்க. ஒரு வழியாக சில மணித் துளிகளில் கருமத்தம்பட்டி வந்தது. “எம்மா.. இறங்கும்மா”னு சலிச்சுப் போய் கண்டக்டர் சொன்னதும், சாவகாசமாக எழுந்த அந்தம்மா மேலே இருந்து பையை எடுத்துப் பிரித்து அதிலிருந்து பிரஷர் மாத்திரையை எடுத்துப் போட்டு முழுங்கி தண்ணீர் குடித்து திரும்ப அமர்ந்து தூங்கியிருக்காங்க. “என்னம்மா.. கருமத்தம்பட்டில இறங்கலையா?” – கண்டக்டர் கேட்டதும், “நான் ஏன் கருமத்தம்பட்டில இறங்கணும்? கருமத்தம்பட்டி வந்தவுடனே பிரஷர் மாத்திரை மறந்திடாம போட்டுடுன்னு என் பையன் சொல்லி அனுப்பினான். அதான். நான் ஈரோடுல்ல போகணும்?”னு சொல்லியிருக்காங்க. ஜாலியா இருக்கே. உண்மையா இருக்குமானு விசாரிச்சு பார்த்தா, உண்மைலயே பண்ணிருக்காங்க. லொள்ள பாருங்க.  

ஈரோடியன்ஸ்
ஈரோடியன்ஸ்

கொங்கு ஸ்லாங் ரொம்ப வித்தியாசமா இருக்கும். வாய திறந்தாலே டக்னு கண்டுபிடிச்சிடலாம். அப்படி தான் வார்த்தைகள் எல்லாமே இருக்கும். முதல்ல ஒரு வார்த்தையைக் கேட்டு ஷாக் ஆயிட்டேன். என்னனா, அங்க ஊ*புட் திருவிழானு ஒண்ணு கொண்டாடுவாங்களாம். சோஷியல் மீடியால எல்லாரும் அதைப் பத்தி பேசிட்டு இருந்தாங்க. என்னனு தேடிப்பார்த்தா, கார்த்திகை தீபமாம். அடேய், அது ஊ*பு இல்லைடா, கூம்பு திருவிழானு ஈரோட்டுக்காரங்க, அதை சொன்னவங்களை களம் எட்டுல தூக்கிப் போட்டு போளந்துட்டு இருந்தாங்க. துணி தப்புறதுனு ஒண்ணு சொல்லுவாங்க. அப்படினா துணி கீழ விழுறதுனு நினைச்சேன். ஆனால், துணி துவைக்கிறதைதான் அப்படி சொல்றாங்களாம். வியாசாழக்கிழமைக்கு வாடானு வார்த்தை ஒண்ணு பார்த்தேன். அது என்னனா, வியாழக்கிழமையாம். தொறப்புனா என்னனு தெரியுமா? பொறுப்பு துறப்புனு இல்லை. பூட்டுதான். தண்ணி வாத்துட்டு வான்னு சொல்லுவாங்க. இதை ஈஸியா எல்லாரும் கெஸ் பண்ணிடலாம். தண்ணி எடுத்துட்டு வானு சொல்றதுதான். சீவக்கொட்டைனா, ஒவ்வொரு ஊருலயும் ஒவ்வொரு பெயர் இருக்கு. ஈரோடுல வாரியல், துடைப்பக்கட்டையை அப்படி சொல்லுவாங்க. தாவக்கொட்ட, இப்படி ஒண்ணு இருக்கு. பச்சையா பார்த்தா வேற எதாவது தோணும். ஆனால், நாடியைதான் அப்டி சொல்றாங்க. வூடு வலிக்கிறதுனா, வீடு மொழுவுறதுன்னுவாங்கள்ல அதுதான். ரொம்ப ஆச்சரியமா இருந்தது. மொட்டுன்ற வார்த்தைதான். அப்டினா முட்டையாம். ஓசாப்பழம்னு ஒண்ணு வைச்சிருக்காங்க. பயப்படாதீங்க தர்பூசணிதான் இது. நிலபுருசுனா, புஸ்வானம். நிலச்சக்கரம்னா, தரச்சக்கரம். கதவு நீக்குனா கதவைத்திற இப்படி ஸ்லேங்லயே பல சேட்டைகளை பண்ணி வைச்சிருக்காங்க. வித்தியாசமா நீங்க நினைக்கிற வார்த்தைகளை கமெண்ட்ல மென்ஷன் பண்ணுங்க. நாங்க தெரிஞ்சுக்குறோம்.  

கோவை, ஈரோடு, நாமக்கல் ஏரியாக்களை சொன்னாலே, உணவுதான் எனக்குலாம் டக்னு நியாபகம் வரும். குறிப்பா காரசாரமா அவங்க பண்றதை பார்க்கும்போதே எச்சி ஊரும். பொதுவா நம்ம ஊர்கள்ல எல்லாம் நான் வெஜ் பண்ணா நிறைய மசாலாலாம் அள்ளிப்போட்டு பண்ணுவோம். ஆனால், அவங்க சிம்பிளான மசாலாவைப் போட்டு மஜா பண்ணுவாங்க. கிள்ளு கறி, ஆசாரி சிக்கன், சிந்தாமணி வறுவல் எல்லாம் அமுக்கு டுமுக்கு அமால் டுமால் டேஸ்ட்தான். மரப்பாலம் முதலியார் மெஸ்னு ஒண்ணு இருக்கு. நிறைய பேருக்கு தெரியும். அங்க கொத்துக்கறினு ஒண்ணு வைப்பாங்க. சொல்லும்போதே, மைண்டு மெஸ்ஸுக்கு போய்ட்டு வருதுங்க. கொங்கு நாட்டைப் பத்தி பேசிட்டு பள்ளிப்பாளையம் சிக்கனை சொல்லாமல் இருந்த வெட்டிருவாங்கனு வேற சொன்னாங்க. ரைட்டு அதையும் மென்ஷன் பண்ணியாச்சு. மட்டன் சாப்ஸ், சிக்கன் சாப்ஸ்னு நான் வெஜ் மெனுல எல்லாமே அங்க ஃபேமஸ்தான். நான் வெஜ் பிரியர்களுக்கு மதுரைக்கு அடுத்து ஈரோடுலாம் சொர்க்க பூமி. வெஜ் பிரியர்களுக்கு கட்டிப் பருப்பு ஒண்ணு வைப்பாங்க. செமயா இருக்கும். இப்படி ஈரோடுல எங்க போனாலும் தரமான உணவுகளை சாப்பிடலாம்.

Also Read – நார்த் இந்தியன்ஸ் vs சவுத் இந்தியன்ஸ்.. எவ்வளவு பஞ்சாயத்து?

எல்லாருக்கும் ஊர்திருவிழா ரொம்பவே புடிக்கும். ஆனால், மாரியம்மன் திருவிழானு பெயர் சொன்னாலே நமகு டக்னு நியாபகம் வர்றது ஈரோடுதான். ஊருக்கே மாஸா இருந்து அருள் கொடுக்குறது பெரிய மாரியம்மன்தான். பங்குனி மாசம் இங்க நடக்குற விழா அந்த மாவட்டத்துலயே பெரிய திருவிழாதான். ஊர் விட்டு வேற ஊருக்குப் போனவங்கள்ல தொடங்கி ஃபாரீன்ல இருக்குறவங்க வரைக்கும் இந்தத் திருவிழாக்கு வர ஏங்குவாங்க. அப்படி சிறப்பா நடக்கும். அந்தியூர்ல வருஷம் தோறும் நடக்குற குதிரை சந்தை இந்திய அளவில் ஃபேமஸ்னே சொல்லலாம். அவ்வளவு பிரம்மாண்டமா நடக்கும். பல்வேறு கால்நடைகள் இங்க பார்வைக்கு கொண்டு வருவாங்க. அதைப் பார்க்கவே கூட்டம் களைகட்டும். ஈரோடு புத்தகத்திருவிழாவும் இங்க ஃபேமஸ். பெரியார் மண்ணுனு நம்ம நிறைய பேர் மார்தட்டிக்கிறோம். அந்தப் பெருமை ஈரோட்டுக்கு இன்னும் கொஞ்சம் அதிகமா இருக்கும். அதுனால, ஈரோடு புத்தகத் திருவிழா அவரோட சிந்தனைகளை எடுத்துச் சொல்றதுல்கான விஷயமா பார்க்கப்படுது. ஈரோடு விவாசாய ஊர். அதுனால எங்கப் பார்த்தாலும் பச்சைப் பசேல்னு கண்ணுக்கு குளிர்ச்ச்சியா இருக்கும். அதேமாதிரி நெசவுத்தொழிலும் இங்க இன்னுமே இருக்கு. ஈரோடு பக்கத்துல பவானி பகுதியில் ஜமுக்காளம் கையாலயே நெய்றாங்க. உலக அளவில் தமிழர்கள் எங்கலாம் இருக்காங்களோ, அங்கலாம் இந்த ஜமுக்காளமும் இருக்கும்னு சொல்லலாம். 3, 4 பேர் சேர்ந்து ஒரு ஜமுக்காளத்தை நெய்வாங்க. கல்யாணம் பேசுறதுல தொடங்கி குழந்தை பிறந்து பார்க்க வரது வரை இந்த ஜமுக்காளத்துல உட்கார்ந்து பேசுறது இன்னும் நிறைய இடங்கள்ல நடந்துட்டுதான் இருக்கு. ஏரி, ஆறு, அருவினு சுற்றுலா தலங்களும் எக்கச்சக்கமா இருக்கு. இன்னும் ஈரோடு பெருமையை சொல்லிட்டே இருக்கலாம். சரி, கடைசியா ஒரு எழுத்தாளர் புலம்பலோட ஆஃப் பண்ணிக்கலாமா?

கதிர்னு ஒரு ரைட்டர் இருக்காரு. அவர் பெயரிடப்படாத புத்தகம்னு ஒண்ணு எழுதியிருக்காரு. ஒருநாள் ஒரு காலேஜ் பையன் அவருக்கு ஃபோன் பண்ணி, “உங்க பெயரிடப்படாத புத்தகத்தை ப்ராஜெக்டுக்கான எடுத்துருக்கேன். கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?”னு கேட்ருக்கான். அவ்ரு உடனே ஆர்வமா, “நான் என்ன ஹெல்ப் பண்ணனும்?”னு கேட்ருக்காரு. “அதைக் கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ண முடியுமா?”னு அந்த தம்பி கேட்டதும், இவரு ஷாக் ஆகி, “புரியல தம்பி… என்ன எக்ஸ்ப்ளெய்ன் பண்ணனும்?”னு கேட்க, “புக் எழுதியிருக்கீங்கள்ல, அதுல என்னாலம் இருக்கோ, அதெல்லாம் சொல்லுங்க. எக்ஸ்ப்ளெய்ன் பண்ணினா எழுதிக்குவேன்”ன்றுக்கான். என்ன படிக்கிறீங்கனு இவர் கேட்டதுக்கு, தமிழ் லிட்ரேச்சர் வேறயாம். 

பெயரிடப்படாத புத்தகம்
பெயரிடப்படாத புத்தகம்

காலேஜ் “லைப்ரரில கண்ல பட்டுச்சு எடுத்து படிச்சேன். அப்படியே ப்ராஜெட்க்கு யூஸ் பண்ணிக்கலாம்னு நினைச்சு எடுத்தேன்”னு சொல்லியிருக்கான். திரும்பவும் நான் என்ன பண்ணனும்னு இவர் கேட்க, ”இந்த புக் பத்தி சொல்லுங்க”ன்றுக்கான். “புக் படிச்சிட்டீங்ளா?”னு கேட்க, “சில கதைகள் படிச்சிருக்கேன்”ன்றுக்காரு. இவர் நெஞ்சை புடிச்சுட்டு உட்கார்ந்துருக்காரு. ஏன்னா, அது கதை புக்கே இல்லையாம். பையன் இவரை விடுறதா இல்லை. “நீங்க ஜல்லிக்கட்டு பத்தி சொல்லுங்க”ன்றுக்கான். எதே ஜல்லிக்கட்டுலாம் இருக்கானு இவரே கன்ஃபியூஸ் ஆகியிருக்காரு. ஏதோ முடிவோடதான் இருக்கான்னு, புக்கை எடுத்து எந்தக் கட்டுரைனு கேட்டு ஹெல்ப் பண்ண போய்ருக்காரு. “தம்பி.. எழுதி ஏழெட்டு வருசம் ஆச்ச்ய். திடீர்னு கேட்டா என்னனு சொல்றது. அந்தக் கட்டுரையை படிச்சாச்சா?”ன்றுக்காரு. அதெல்லாம் விடுங்க புக்கைப் பத்தி சொல்லுங்கனு விடாப் புடியா நிக்க, இவரு படிச்சாலே புரியும்ன்றுக்காரு. உடனே அந்தப் பையன், “ரெண்டு பக்கம் படிச்சேன் சார். ரொம்ப பெருசா இருக்கிறதால உங்களையே கேட்டுக்கலாம்னு ஃபோன் பண்ணேன்”ன்றுக்கான். அதுக்கு இவரு, ”தம்பி… பேட்டரி டௌனா இருக்கு. பிறகு பேசுவமா… அதுக்குள்ள ஒருமுறை மிச்சத்தையும் படிச்சிடுங்க”ன்றுக்காரு.  பாவம்யா ரைட்டர்ஸ்.  உங்க கொங்கு குசும்புக்கு அளவே இல்லேல?

1 thought on “அடேய் ஈரோடியன்ஸ்.. யார்யா நீங்கலாம்… இவ்வளவு சேட்ட பண்றீங்க?”

  1. தண்ணி வாத்துட்டு வானு சொன்னா அதுக்கு குளித்துவிட்டு வா என்று அர்த்தம். நானும் ஈரோட்டுகாரியாக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top