Salem: சேலத்தில் 5 பேரைப் பலிகொண்ட சிலிண்டர் விபத்து… என்ன நடந்தது?

கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை பொக்லைன் இயந்திரத்தின் உதவியோடு சுவரில் துளையிட்டு தீயணைப்புத் துறையினர் மீட்டனர். 1 min


சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்திருக்கிறது. இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

சேலம் விபத்து
சேலம் விபத்து

சேலம் விபத்து

சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் வசித்து வருபவர் பத்மநாபன். தீயணைப்புத் துறையில் பணியாற்றிவரும் இவரது வீட்டில் இன்று காலை 6.45 மணியளவில் சமையல் செய்துகொண்டிருந்தபோது சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் பத்மநாபன் வீட்டோடு சேர்த்து அருகிலிருந்த இரண்டு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. வீடு இடிந்த விபத்தில் மூதாட்டி ராஜலட்சுமி (80) இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். சிலிண்டர் வெடித்த வீட்டை ஒட்டி இருந்த மேலும் இரண்டு வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தீயணைப்பு வீரர்களுக்கு உதவியாக, 50-க்கும் மேற்பட்ட போலீஸார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் விபத்து
சேலம் விபத்து

பலி எண்ணிக்கை உயர்வு

கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை பொக்லைன் இயந்திரத்தின் உதவியோடு சுவரில் துளையிட்டு தீயணைப்புத் துறையினர் மீட்டனர். கட்டட இடிபாடுகளில் இருந்து நாகசுதா, வெங்கட்ராஜன், தனலட்சுமி, மோகன்ராஜ், உஷாராணி, லோகேஷ் உள்ளிட்ட 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மூதாட்டி ராஜலட்சுமி உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தீயணைப்புப் படை வீரர் பத்மநாபன், தேவி, கார்த்திக் ராம், எண்ணம்மாள் ஆகியோர் உயிரிழந்தனர். இதனால், சேலம் சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5- ஆக உயர்ந்திருக்கிறது. சம்பவம் தொடர்பாக சேலம் செவ்வாய்ப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

Also Read :Chennai Rains: 2021 நவம்பரில் அதிக மழைப்பொழிவு இருக்கப்போகிறதா… வானிலை நிலவரம் சொல்வதென்ன?


Like it? Share with your friends!

343

What's Your Reaction?

lol lol
3
lol
love love
30
love
omg omg
24
omg
hate hate
30
hate

Web desk

0 Comments

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format
`காந்தி, அம்பேத்கர், பெரியார் படங்கள் தெரியும்… இந்த தலைவர்கள் படங்களை தெரியுமா?’ – இந்தியாவின் டாப் 10 பயோபிக் படங்கள் `குரலைக் கேட்டாலே பக்தி பொங்கும்!’ – எல்.ஆர்.ஈஸ்வரியின் டாப் 10 அம்மன் பாடல்கள் `இதெல்லாம் இல்லாம எங்க படமே இல்லை!’ – தமிழ் சினிமா டைரக்டர்களின் டிரேட் மார்க் அடையாளங்கள்! Money Heist-க்கு எண்டே கிடையாது டா! – மணி ஹெய்ஸ்ட் மீம் ரிவ்யூ RainCoat: `அட, இப்படியெல்லாமா ரெய்ன் கோட் இருக்கு..!?’ – விநோத டிசைன்கள்