தி.நகர்

‘எல்லாம் ஒரே இடத்தில்…’ – தி.நகர் உருவான வரலாறு!

குறைந்த விலையில் பட்ஜெட் ஷாப்பிங், பொங்கல், தீபாவளி தள்ளுபடி, தி.நகர் ஸ்ட்ரீட் ஷாப்பிங், எல்லாம் ஒரே இடத்தில்-னு இப்படி இப்போ இருக்க இளம் தலைமுறை Vlog-காரர்கள் கலர் கலராக வீடியோ எடுத்து போடுவதற்கு முன்பு இந்த தி.நகர் எப்படி இருந்துச்சு தெரியுமா? தி நகர், மேற்கு மாம்பலம் உருவான கதை, தி நகருக்கு ஏன் இந்த பெயர் வந்தது, எப்படி இருந்த இடம் இப்போ தமிழ்நாடு கார்களுக்கு மட்டும் இல்லாமல் சென்னையை நோக்கி பயணிப்பவர்களுக்கும் ஒரு Shopping Hub-ஆக மாறியது? இதன் பின்னாடி இருக்கும் வரலாறு என்ன? இதெல்லாம் பத்தி தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

தி.நகர் மட்டும் இல்லை, சென்னையில் இருக்கும் பல இடங்கள் முன்பு இருந்த ஏரிகளை ஆக்கிரமித்து உருவாக்கப் பட்ட ஏரியாக்கள் தான். இந்த தி.நகரும் அப்படி அமைக்கப்பட்டது தான். மழைத் தண்ணி தேங்கும் போதே நினைச்சேன்! அப்படின்னு சிலர் யோசிக்கலாம். ஆமா அது தான் உண்மை! Long tank of Mylapore அப்படிங்குற எரியயையும் உள்ளடக்கியது தான் தி.நகர். இதோட வரலாறு 1920 ஆரம்பம் ஆகுது. அப்போ ஆட்சியில் இருந்த நீதிக் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் இப்போ தி.நகரில் இருக்கும் ரோடுகளின் பெயர்களுக்கும் கூட ஒரு தொடர்பு இருக்கு.

தி.நகர்
தி.நகர்

Madras Town planning Act 1920-ங்குற திட்டத்தின் மூலமாகத்தான் இந்த இடம் உருவாக தொடங்குது. மவுண்ட் ரோட்டுக்கு இடது பக்கம் மட்டுமே மக்கள் வாழ்ந்துட்டு வந்து இருக்காங்க. பிறகு மக்கள் தங்குவதற்கு இடம் இல்லாத காரணத்தினால் மவுண்ட் ரோட்டுக்கு இந்த பக்கம், அதாவது வலது பக்கம் இருந்த 77 ஏக்கர் Long Tank of Mylapore அப்படிங்குற எரியயையும், புலியூர்-ன்னு அழைக்கப்படும் இடம், அதாவது இப்போ இருக்க கோடம்பாக்கம், அசோக் நகர், கே.கே நகர் மற்றும் சைதாப்பேட்டை இருக்கும் பண்ணையின் ஓரு பகுதி என சுற்றி வளைத்து 540 ஏக்கரில் தி.நகர் உருவாக்கப்படுது.

மொத்தமா 540 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தைக் கொண்டு பனகல் பூங்கா மற்றும் அதைச் சுற்றி அங்கு வசிக்கும் மக்களுக்கான அங்காடிகள்-னு மெல்ல வளர்கிறது. பனகல் பூங்கா அப்படிங்குற பெயர், பானகல் ராஜா-குற மந்திரியின் பெயர் , இவரும் ஜஸ்டிஸ் கட்சியில் மந்திரியாக இருந்தவர் தான். பனகல் பூங்காவில் இவருக்கு சிலையும் வைக்கப்பட்டுள்ளது. 1923-களில் 1 ஏக்கர் நிலம் 2000 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்பட்டிருக்கு. 540 ஏக்கர் நிலத்தையும் அப்படி தான் 5 லட்சம் ரூபாய்க்கு வாங்கி தி.நகரை உருவாக்குறாங்க.

Also Read – எல்லாரும் கடவுள்தான்.. தமிழ் சினிமாவின் பெஸ்ட் ஃபீல் குட் சீன்கள்!

1924 முதல் 1934 வரை தி.நகருக்கு பெரிதா ஒரு டிமாண்ட் இல்லாம தான் இருந்துச்சு. 1934-க்கு பிறகு சென்னை புற நகர் ரயில் லைன்-கள் அமைக்கப்பட்ட பிறகு தான் தி.நகர் கிரமமாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் ஒரு முக்கிய இடமாக
கருதப்பட்டது. அதே போல இந்த பக்கம் இருந்த மேற்கு மாம்பலம் போன்ற பகுதிகளிலும் வீடுகள் மட்டுமே இருந்தது. 1921-ல் மக்கள் தொகையும் 6 லட்சத்து 30 ஆயிரம் மட்டுமே இருந்ததாம். வெறும் வயல் வெளியாக இருந்த சமயத்தில் மாம்பலம் ஏரியா சென்னையின் ஒரு பகுதியாக கூட இல்லையாம். அந்த இடத்தில் நகர எல்லை…வருக வருக-ன்னு எழுதி இருக்குமாம். 490 ஏக்கர் நிலங்களை பொதுமக்கள் வாங்கி தி.நகரில் குடியேற தொடங்கி இருக்காங்க.

இப்படி ஒரு பக்கம் தி.நகர் உருவாகிட்டு இருந்த அப்போ இன்னொரு பக்கம் பாண்டி பஜார் ஏரியா-வும் வளர்ந்துட்டு இருந்துச்சு. பாண்டிச்சேரி இருந்து வந்த பாண்டி செட்டியார் இதற்கு பாண்டி பஜார் என்ற பெயரை வைத்தார்-ன்னு சொல்றாங்க. ஆனா அந்த பெயர் வைக்கப்பட்ட காரணம் சரியா தெரியல.

இவை இல்லாம இப்போ மிகப்பெரிய கமெர்ஷியல் இடமாக இருக்கும் ரங்கநாதன் தெருவில் வீடுகள் தான் இருந்ததாம். இதன் பெயர் காரணம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் ரங்கநாதன் தான். அதன் நினைவாக வந்த பெயர் தான் இப்போ நாம் பார்க்கும் ரங்கநாதன் தெரு.

இதனை தவிர்த்து ஜஸ்டிஸ் கட்சியில் இருந்த பல ஆளுமைகளின் பெயர்கள் தி.நகர் முழுக்க இருக்கும் தெருக்களுக்கு வைக்கப்பட்டிருக்கு. உதாரணத்திற்கு GN செட்டி சாலை, உஸ்மான் ரோடு, டி.ம் நாயர் ரோடு, தணிகாசலம் ரோடு, போன்ற பெயர்கள் எல்லாம் இப்படி வந்தது தான். சென்னைக்கு புதுசா வரும் சிலருக்கு தியாகராய நகர் தான் தி.நகர்-ன்னு கூட தெரியாது. சர்.பிட்டி தியாகராய செட்டி யாருன்னு பார்த்த இவரும் ஜஸ்டிஸ் கட்சியை நிறுவியவரில் ஒருவர் தான். காட்சிகளின் பொறுப்புகளில் இருந்தவர்கள் பெயர்கள் மட்டும் இல்லாம தி.நகர் உருவாக்கப்பட்டப் போது பாதாளம் தோண்டும் போது மண் சரிந்து விழுந்து இறந்த நாதமுனி மற்றும் கோவிந்து ஆகியவர்களின் பெயர்களும் தெருக்களுக்கு வைக்கப்பட்டு இருக்கு.

தி.நகரில் 1940-யில் முதலில் தொடங்கப்பட்ட கடை நல்லி சில்க்ஸ் தான். 1939-ஆம் ஆண்டு நாயுடு ஹால் முதன் முதலில் உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடையாக நிறுவப்பட்டது. சாப்பாடு கடை-ன்னு பார்த்த உட்லண்ட்ஸ் மற்றும் கீதா கபே போன்ற கடைகள் தான் முதலில் ஆரம்பிக்கப்பட்டுச்சு.

தி.நகர்
தி.நகர்

மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குடியேற பள்ளிகளும் திறக்கப்பட்டது. ஹோலி ஏஞ்சல், ராமகிருஷ்ணா ஸ்கூல், சாரதா வித்யாலயா, PSBB போன்ற பள்ளிகளை திறந்தனர். அதே போல மக்கள் மைலாப்பூர் வரை சென்று கச்சேரிகள் பார்த்துட்டு வந்ததால். வாணி மஹால் 1945-ஆம் ஆண்டு சித்தூர் நாகையா எனும் ஆந்திர நடிகரும் அவரோடு இருந்த சிலரும் நிலம் வாங்கி கட்டியது.

இப்படியாக தி.நகர் இன்று 5 ரூபாய் பொருள் விற்கும் சிறிய கடைகளில் தொடங்கி 50,000-க்கு பொருள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் வரை பல அங்காடிகள் கொண்டு, கொண்டாட்ட நாட்களில் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு பின்னால் பல கடைகளில் வேலையும் செய்யும் தொழிலாளர்களின் வியர்வையும் உள்ளது. தி.நகர் பண்டிகை நாட்களில் தள்ளு முள்ளாட இவர்களும் ஒரு காரணமாக இருக்கின்றனர். உங்களுக்கு தி.நகர் ஏன் ஸ்பெஷல், தி.நகர் வந்தா நீங்க என்னென்ன பொருள் வாங்குவிங்க-ன்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top