முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையைப் பத்தி தமிழக மக்களுக்கு அறிமுகம் தேவையில்லை. அவரோட ஐபிஎஸ் கரியர் பத்தியும் அரசியல் கரியர் பத்தியும் பெரும்பாலும் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். ஆனால், அவரோட குடும்பத்தைப் பத்தி பெருசா வெளிய தெரியாது. அவரோட பேக்போனா நின்னு எல்லாத்துக்கும் சப்போர்ட் பண்ற வைஃப், ஒரு பெரிய பிஸினஸ் வுமன்கிறது தெரியுமா… இருவீட்டாரோட சம்மதத்தோடு லவ் மேரேஜ் பண்ணிக்கிட்ட அவங்க மனைவியை முதல்முதலா எங்க மீட் பண்ணாரு தெரியுமா? அரவக்குறிச்சி தொகுதில நிக்கப்போறேன்னு சொன்னப்போ, அண்ணாமலைகிட்ட அவங்க கேட்ட ஒரு கேள்வி… இப்படி அவரோட பெர்சனல் பக்கங்கள் பத்திதான் நாம பார்க்கப் போறோம்.

கரூர் அரவக்குறிச்சி பக்கத்துல இருக்க தொட்டம்பட்டிங்குற சின்ன கிராமம்தான் அண்ணாமலையோட சொந்த ஊர். பத்தாவது வரைக்கும் படிச்சிருக்க அப்பா, எளிமையான விவசாயி. சின்ன வயசுல இருந்தே கிளாஸ்ல பிரைட் ஸ்டூடண்டா இருந்த அண்ணாமலைக்கு, என்ஜினீயராகணும்னு கனவு. அதுக்காக, பிரபலமான கோவை பிஎஸ்ஜி காலேஜ்ல மெக்கானிக்கல் என்ஜினீயரிங் சேர்ந்தவருக்கு, சொந்தமா ஒரு பிசினஸ் பண்ணனும்னு ஆசை. அதனால, 2007 என்ஜினீயரிங் முடிச்ச கையோட லக்னோல இருக்க இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் கல்லூரில சேர்ந்தார். இந்த ரெண்டு காலேஜ் லைஃபுமே, அவரோட வாழ்க்கைல முக்கியமான முடிவுகளை எடுக்குறதுக்கு அடிப்படையா இருந்துச்சுனே சொல்லலாம். கோயம்புத்தூர் காலேஜ்ல படிக்கும்போதுதான், தன்னோட எதிர்கால மனைவி அகிலா சுவாமிநாதனை முதல்முதலா மீட் பண்றாரு. நல்ல பிரண்ட்ஸா இருந்த அவங்களுக்குள்ள ஒரு புரிதல் ஏற்பட்டு, காதலா மாறுது. பி.இ முடிச்சுட்டு அவர் லக்னோல படிக்கப்போனப்ப, அவங்க பெங்களூரை Choose பண்ணாங்க. ரெண்டுபேருமே வேற வேற ஊர்ல IIMல படிப்பை முடிச்சாங்க. லக்னோல இருந்த காலகட்டம், அங்க இருந்த மக்களோட நிலைமையைப் பார்த்து, பிஸினஸ்ங்குற ஐடியாவுல இருந்து அவரோட கவனம் சிவில் சர்வீஸை நோக்கி திரும்புச்சு. முதல் முயற்சியிலேயே ஐபிஎஸ்ஸா செலெக்ட் ஆகி கர்நாடகா கேடர்ல வேலையில சேர்ந்தார்.
2021 தேர்தல்ல கிணத்துக்கடவு தொகுதியில நிப்பாருனு எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை, ஏன் அரவக்குறிச்சியைத் தேர்ந்தெடுத்தாருனு தெரியுமா.. இதுக்கான பதிலை அவங்க மனைவியே பிரசாரத்தப்ப சொன்னாங்க… முழுசா படிங்க… அதுக்கான விடை பின்னாடி தெரியும்.

இடையில் தனது காதல் பத்தி ரெண்டு வீட்லயும் பேசி, அவங்க சம்மதத்தோட திருமணம் முடிக்கிறாரு. அவங்களுக்கு அர்ஜூன், ஆராதனானு ரெண்டு குழந்தைகள் இருக்காங்க. ஆரம்பத்துல இருந்தே பிஸினஸ் சைட்ல ஸ்ட்ராங்கா இருந்த அகிலா, படிச்சு முடிச்ச பிறகு ஆதித்யா பிர்லா குரூப்போட இன்சூரன்ஸ் பிரிவுல இன்டர்னா ஜாய்ன் பண்ணி, கரியரை ஆரம்பிச்ச அவங்க, அதுக்கப்புறம் மும்பை ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் சில ஆண்டுகள் மேனேஜர் லெவலிலான வேலை பார்த்த பிறகு, மீண்டும் பெங்களூரு திரும்பி 2013-ல் ஹெச்.பி நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். கர்நாடகாவில் அண்ணாமலை பணியாற்றிய சமயங்களில் அவருக்கு உறுதுணையாக நின்றார். ஒருகட்டத்தில் ஐபிஎஸ் வேலையை ராஜினாமா செய்ய முடிவெடுத்து, பொது வாழ்வில் ஈடுபடப்போவதாகச் சொன்னபோதும், அந்த முடிவை ஆதரித்ததோடு குடும்பத்தையும் பார்த்துக் கொள்கிறேன் என தோள் கொடுத்தவர் அகிலாதான். அண்ணாமலை தன்னோட மனைவி, குழந்தைகள் மேல் மீடியா வெளிச்சம் படுவதை விரும்பாதவர். கட்சி நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் தம்பதியாக அவர்களைப் பார்க்க முடியாது. அதேநேரம், சட்டமன்றத் தேர்தலப்ப அரவக்குறிச்சி தொகுதில அவருக்காக அகிலா பிராசாரம் செய்தார். அந்தப் பிரசாரத்தின்போது அவர் ஓப்பனா பேசுன விஷயம்தான் ஹைலைட்டே..

அகிலே பேசும்போது, `கிணத்துக்கடவு தொகுதிலதான் அவர் நிப்பாருன்னு நாங்களாம் நினைச்சோம். தொகுதிப் பங்கீட்டுக்காக சென்னை போனவரு, அரவக்குறிச்சில நிக்கப்போறதா சொன்னாரு. அதைக் கேட்டவுடனே எங்களுக்கெல்லாம் ஒரே ஷாக். பா.ஜ.கவுக்கு ரொம்ப வாக்குகள் கம்மியா கிடைச்ச தொகுதியாச்சேனு யோசிச்சோம். அதுக்கு அவரு, ‘அரசியல்ங்கிறது மக்கள் பணி, நம்ம ஊருக்கு நம்ம மக்களுக்கு எதையும் செய்யாம, வேற எங்கபோய் சாதிச்சாலும் அதுக்கு அர்த்தம் இருக்காது. என்னோட அரசியல் அரவக்குறிச்சில இருந்துதான் தொடங்கணும்’ அப்டினு சொன்னாரு. அப்போ நான் கேட்டேன், ’ஒரு ஊர்ல பிறந்துட்டாலே, தலைவனாகுற தகுதி எல்லாத்துக்கும் வந்துடுமா? நமக்குனு ஒரு தொலைநோக்குப் பார்வை இருக்கணும். அப்படி அரவக்குறிச்சிக்கு என்ன செய்யப்போறீங்க’னு கேட்டேன். மக்களுக்குத் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்கணும் உள்ளிட்ட 3 விஷயங்களை என்கிட்ட அவர் சொன்னாரு’ என்று சொன்னார்.

இளைஞர்களை நல்ல தலைவர்களாக உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் ‘WE the leaders foundation’ என்கிற அமைப்பை அண்ணாமலை தொடங்கியிருக்கிறார். அதேபோல், பெங்களூரில் அண்ணாமலையும் அவரது மனைவி அகிலாவும் இணைந்து ’CoRE Talent and Leadership Development Private Limited’ என்கிற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்கள். இதன் நிறுவனர் அண்ணாமலை என்றாலும், அந்த நிறுவனத்தை முழுமையாகப் பார்த்துக்கொள்வது அவரது மனைவி அகிலாதான். புராஜக்ட் மேனேஜ்மெண்ட், கன்சல்டிங் போன்ற சேவைகளை இந்த நிறுவனம் அளித்து வருகிறது. அரசியலில் முழு கவனத்தையும் செலுத்தி வரும் தனது காதல் கணவர் அண்ணாமலைக்குப் பின்னால் BackBone ஆக நின்று எல்லாவகையிலும் சப்போர்ட் செய்து வருகிறார் அகிலா.
Also Read – `ஒரே படம்… மொத்த நெகட்டிவிட்டியும் க்ளோஸ்’ – மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன்’ மேஜிக்!
0 Comments