ரஜினி, விஜய்கிட்டலாம் அவரோட ஃபேன்ஸ் ‘குட்டி ஸ்டோரி’ சொல்லுங்கனு கேட்டு உயிரை எடுப்பாங்க. ஆனால், நம்ம அண்ணன் சீமான் வலுக்கட்டாயமாக குட்டி ஸ்டோரி சொல்லி திணற வைப்பார். ஆமை கதைல இருந்து யானைக் கதை வரைக்கும் பல கதைகளைக் கேட்டு நம்ம காதுல ரத்தம் வந்திருக்கும். அந்தக் கதையெல்லாம் கேக்கும்போது அண்ணன்கிட்ட ‘அண்ணே பொய் பேசலாம். ஆனால், ஏக்கர் கணக்குல எல்லாம் பேசக்கூடாது. கொஞ்சமாவது நியாயமா பேசணும்ணே’னு சொல்லத் தோணும். இலங்கை தொடர்பான பல கதைகள் நமக்கு ரொம்பவே பரிச்சயமானதுதான். ஆனால், அதையும்தாண்டி சில கதைகளை அண்ணன் அவிழ்த்து விட்டுருக்கிறார். அந்த வகையில், அண்ணன் சீமான் சொன்ன தரமான கதைகள் பற்றிதான் இப்போ பார்க்கப்போறோம்.

சிவாஜி கதை
இந்தியாவின் சிறந்த நடிகர், சிவாஜி. அவரோட இடத்தை நிரப்ப இன்னொரு நடிகர் இன்னும் வரலை. நம்ம அண்ணன் அவரையும் விட்டு வைக்கல. சிவாஜிக்கிட்ட ‘பசும்பொன்’ கதை சொல்றதுக்கு பாரதிராஜா, சீமானை அனுப்பி வைச்சாராம். படத்தோட கதை சிவாஜிக்கு ரொம்ப புடிச்சதும் நடிக்க சம்மதிச்சிருக்காரு. படப்பிடிப்பு தளத்துல சீமான் எழுதுற வசனம் எல்லாத்தையும் அவங்கப்பா பாரதிராஜா கிழிச்சுப் போட்ருவாராம். அப்புறம் அவருக்கும் எனக்கும் பஞ்சாயத்து நடக்கும். ஒருநாள் சிவாஜி இதை பார்த்துட்டாராம். “என்னடா ராஜா உன்னோட பிரச்னை”னு சிவாஜி கேட்டாராம். “நான் எழுதுறது எல்லாத்தையும் கிழிச்சுப் போட்டுறாரு”னு சீமான் சொல்லியிருக்காரு. “இதெல்லாம் நல்லாருக்கே. ஒண்ணு செய் எங்கிட்ட என்ன வசனம்னு சொல்லிரு. நான் டேக்ல பேசிடுறேன்”னு சிவாஜி சொன்னாராம்.

சீமான் எதாவது ஒரு ஓரத்துல நின்னு அவர் நடிக்கிறதை கவனிச்சுட்டு இருப்பாராம். காட்சி முடிஞ்சதும் அவர் சீமானைத் தேடுவாராம். ஓகேவானு கேட்பாராம். இதை பாரதிராஜா கவனிக்கவே இல்லையாம். ஒரு தடவை கவனிச்சிட்டாராம். நாம ஓகே சொல்றோம். நம்மளத் தாண்டி இவரு யார்க்கிட்ட கேக்குறாருனு பார்த்தாராம். பார்த்தா சீமான் ஓகேனு சொல்லிட்டு இருந்தாராம். ஓ… இதுவேற நடக்குதானு பாரதிராஜா கேட்டுட்டாராம். எவ்வளவோ விஷயங்கள் ஷூட்டிங் ஸ்பாட்ல மெமரபிளா நடந்துருக்கும். அதெல்லாம் விட்டுட்டு நம்பவே முடியாத மாதிரி இப்படி ஒண்ணை சொல்றாரு. என்னத்த சொல்ல?!
ஃபாரீன் கதை
சீமானோட கதைகள் பெரும்பாலும் இலங்கையை மையமா வைச்சுதான் இருக்கும். ஆனால், இது கொஞ்சம் புது ரூட்டு. உருட்டுனு சொல்லல… ரூட்டுனு சொல்றேன். ஏ.சி-லயே பிறந்து, வாழ்ந்தவன்லாம் வெயில்ல வந்து மணிக்கணக்கா நின்னு விசா வாங்க அவ்வளவு கஷ்டப்படுறான். நம்ம அண்ணன் ஒரே வார்த்தைல விசா வாங்கிட்டாரு. சீமானை ரெண்டு தடவை கனடா, அமெரிக்கால கைது பண்ணாங்களாம். விசாரணைக்காக உக்கார வைச்சிருக்காங்க. அந்த அதிகாரி ஆங்கிலத்துல ஒருவார்த்தைக்கூட பேசலையாம். அவரை பார்த்ததும் ஒரு தமிழரை அவர்கூட பேச கூட்டிட்டு வந்தாராம்.

சீமானோட பேச தமிழர் வேணும்னு அவங்களுக்கே தெரியுதாம். இதென்ன பிரமாதம்… அமெரிக்க விசா வாங்க தூதரகம் போயிருக்காரு. டையெல்லாம் கட்டிட்டு எல்லாரும் நின்னுருக்காங்க. இவர் சாதாரணமா போயிருக்காரு. ஒரு அம்மா உட்கார்ந்துருக்காம். அவரோட ஃபைல்ஸ்லாம் கொடுத்துட்டு வணக்கம்னு சொன்னாராம். உடனே, ஹேப்பி ஜர்னினு சொல்லி அப்ரூவ் ஆயிடுச்சாம். ‘அவங்களுக்கு தெரிஞ்சுருக்கு அமெரிக்காவை எழுதி கொடுத்தாலும் இவன் இருக்கமாட்டான்’னு சொல்றாரு. ஆமா, இவர் எதுக்கு அமெரிக்கா போனாரு?
கலைஞர் கதை
கலைஞர் இறந்த பிறகு இந்தக் கதையை சீமான் ஒரு மேடைல சொன்னாரு. இதுக்கு தி.மு.க தலைவர்கள் சீமானை வைச்சும் செஞ்சாங்க. சீமான் சொன்ன அந்தக் கதை என்னனா… “கலைஞரின் ஆட்சிக் காலத்துல என்னோட தலைவரை சந்திச்சுட்டு வந்தேன். சில தகவல்களை அவர்கிட்ட சொல்லச் சொல்லியிருந்தாரு. அவர்கிட்ட நேரம் கேட்டிருந்தேன். அதுக்கு முன்னாடிலாம் நான் அவரோட செல்ல மகன். அவர் பக்கத்துல உட்காரும்போது அவர் பாக்கெட்ல இருந்து பேனா எடுத்து எழுதிட்டு திரும்ப வைப்பேன். அவ்வளவு பக்கத்துல இருந்த ஒருத்தனை இவ்வளவு பெரிய எதிரி ஆக்கிட்டாரு”னு சொல்லுவாரு.

சுப.வீ இதுக்கு ஒரு செம ரிப்ளை கொடுத்தாரு. “சீமான் ‘வாழ்த்துகள்’னு ஒரு படம் எடுத்தாரு. அப்போ டைட்டில்ல ‘க்’ வருமா?னு அவருக்கு டவுட் வந்துச்சு. அதை கலைஞரைப் பார்த்து தெளிவு பண்ண முடிவு பண்ணாரு. கலைஞர்கிட்ட கூட்டிட்டு போனேன். அவரும் தெளிவுபடுத்திட்டாரு. எனக்கு தெரிஞ்சு அவங்க ரெண்டு பேரும் சந்திச்ச தருணம் அதுதான். அதுக்கப்புறம் அவங்க சந்திச்சதா எனக்கு நினைவு இல்லை. பேனா எடுத்து எழுதுனதுலாம் பொய்”னு சொல்லிட்டாரு.

சினிமா, அரசியல் சார்ந்து சமூகத்துக்குத் தேவையான பல கருத்துகளை பேச வேண்டிய அவசியம் எப்போதும்விட இப்போது அதிகமாயிருக்கு. இந்த நேரத்துல ஈழ மக்களோட துன்பத்தை கொஞ்சமும் மதிக்காமல் அதுதொடர்பான கதைகளை சொல்றதையும் இல்லாத பொல்லாத கதைகள் சொல்றதையும் தவிர்க்கலாம்ணே!
சீமானோட கதைகள்ல உங்களை அதிகமா கோவப்படுத்துன கதை எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read: ஆசியாவின் அதிசயன் Jackie Chan… எல்லாருக்கும் டபுள்ஸ் இருக்கு; இவருக்கு இல்ல!





Heya i’m for the first time here. I came across this board and I in finding It truly useful & it helped me out a lot.
I’m hoping to present one thing back and help others such as you helped me. https://w4i9o.mssg.me/