அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் ‘மதுகை’ திட்டத்தை சத்யபாமா பல்கலைக்கழகத்தின் பிராண்ட் அம்பாஸடர் நயன்தாரா மற்றும் வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை “சத்யபாமா பிராண்ட் அம்பாஸடர் 2023” என்று சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர்.மரியஜீனா ஜான்சன் அறிவித்தார்.
மதுகை திட்டம்
நயன்தாரா, சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தரின் சிந்தனையில் உருவான “மதுகை – தி ஸ்ட்ரெங்த்” (Madhugai – The Strength) திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன் அவர்களால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. மதுகை என்ற சொல்லுக்கு வலிமை, அறிவு, மதி என்று பொருள். அறியுநர் கொல்லோ வனைமதுகையர் கொல்’ என்கிறது குறுந்தொகைப் பாடல். அதேபோல், சீவக சிந்தாமணியோ,
`வானுயர்மதுகை வாட்டும்’ என்று கட்டியம் கூறுகிறது.

முதற்கட்டமாக இந்தத் திட்டத்தின்கீழ் 15 அரசுப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக வேந்தரால் தேர்வு செய்யப்பட்ட 5 கிராமங்கள் பயனடைகின்றன. அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் அதிக கலோரி சத்துகள் அடங்கிய கிட்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் விநியோகிக்கப்பட இருக்கிறது. இதன்மூலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் இந்த திட்டம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
சத்யபாமா கலாசார விழா – 2023
மாணவர்கள் கல்வியைத் தாண்டி, அவர்களது தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்த ஒரு மேடை அமைத்துக் கொடுக்கும் வகையில் ஆண்டுதோறும் சத்யபாமா கலாசார விழா நடத்தப்படுவது வழக்கம். 2023 பிப்ரவரி 4-ம் தேதி நடத்தப்பட்ட சத்யபாமா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கலாசார விழா 2023, பல்கலைக்கழகத்தின் 35 ஆண்டுகால கல்வித் திறனைக் கொண்டாடியது. சத்யபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன், தலைவர் டாக்டர் மரிய ஜான்சன் மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, ஊக்கப்படுத்தினர். துணைத் தலைவர்கள் திருமதி.மரியா பெர்னாட்டி தமிழரசி, திரு.ஜெ.அருள் செல்வன், செல்வி மரிய கேத்தரின் ஜெயப்பிரியா ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மேலும், இந்த விழாவில் 35 ஆண்டுகால சத்யபாமா பல்கலைக்கழகத்தின் பயணத்தை விளக்கும் வகையில் அசத்தலான லேசர் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றும் பணியாளர்கள் சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன், தலைவர் டாக்டர் மரிய ஜான்சன் அவர்களால் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Your article helped me a lot, is there any more related content? Thanks!