50 ரூபாய் வருமானம் to 3000 கோடி Turnover… போத்தீஸின் 100 வருட வரலாறு!

போத்தீஸ் கடைக்கு கிட்டத்தட்ட 100 வருட கதை இருக்கு.  எமெர்ஜென்ஸி மட்டும் வராம இருந்திருந்தா இந்நேரம் போத்தீஸ் உரக்கடையா இருந்திருக்கும். போத்தீஸ் ஜவுளிக்கடையோட வரலாறு என்னங்குறதைத்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம். அதுல ஒரு சின்ன சீக்ரெட் சொல்றேன். நாம இத்தனை நாள் எதோ ஃபாரின் ப்ராண்டுனு நம்பிட்டு இருக்குற ஒரு பிராண்டு போத்தீஸோடது. அது என்னங்குறதை கடைசில சொல்றேன்.

Pothys
Pothys

ஶ்ரீவில்லிபுத்தூர்ல ஒரு நெசவாளர் குடும்பம். அவங்க வீட்டுல எல்லாருமே தறி நெய்வாங்க. ஒருத்தர் மட்டும் ஜவுளி வியாபாரம் பார்க்குறாரு. அதாவது இவங்க நெய்ததை வாங்கி கடைகளுக்கு வித்துட்டு இருந்தாரு. அவரு பேர் போத்தி மூப்பனார். 1925-வது வருசம் ஶ்ரீவில்லிபுத்தூர்ல பஸ் ஸ்டாண்ட் கட்டுறாங்க. அந்த சமயத்துல அங்க ஒரு கடையை வாடகைக்கு எடுத்து ஜவுளி கடை போடுறாரு போத்தி மூப்பனார். இந்தக் கடை நல்லா போயிட்டு இருக்குது. அவருக்கு மொத்தம் 8 குழந்தைங்க. அதுல நாலு பேர் இறந்திடுறாங்க. மீதி நாலு பேர்ல 3 பொண்ணுங்க. ஒரு பையன். போத்தி மூப்பனாரோட 42 வயசுல பொறந்த அந்த கடைக்குட்டி பேர் சடையாண்டி.

எஸ்.எஸ்.எல்.சி வரைக்கும் படிச்ச சடையாண்டி அதுக்கு அப்பறம் கடையை பார்த்துக்க ஆரம்பிக்குறாரு. 18 வயசுல கல்யாணம் பண்ணிக்குறாரு. அந்த டைம்ல கடையோட ஒரு நாள் வருமானம் 50 ரூபாய்ல இருந்து 100 ரூபாய்தான் வரும். அந்த ஏரியால இருக்குற விவசாயிகள்தான் இவங்க கடைல துணி எடுத்தாங்க. அவங்கள்லாம் அதிகபட்சம் 100 ரூபாய்க்கு துணி எடுப்பாங்க. ஆனா உரத்துக்கு 1000 ரூபாய்க்கு மேல செலவு பண்ணுவாங்க. இதைப் பார்த்த சடையாண்டிக்கு ஒரு ஐடியா வருது. பேசாம உரக்கடை ஆரம்பிக்கலாம்னு நினைக்குறாரு. ஜவுளிக்கடை பக்கத்துலயே உரக்கடை ஆரம்பிக்குறாரு. கொஞ்சநாள் அது போகுது. அப்பறம் ஒரு ஃபைனான்ஸ் கம்பெனி ஆரம்பிக்குறாரு. இந்த சமயத்துலதான் ஒரு பெரிய சம்பவம் நடக்குது. இந்தியால எமர்ஜென்ஸி வருது. இந்த நேரத்துல உரக்கடை, ஃபைனான்ஸ் கம்பெனி எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணிட்டு ஜவுளிக்கடையை மட்டும் ஃபோகஸ் பண்றாரு. இந்த நேரத்துல சடையாண்டியோட பையன் ரமேஷ் பி.காம் படிச்சு முடிக்கிறாரு.

Pothys
Pothys

ரமேஷ் இந்த பிஸினஸ்க்குள்ள வந்ததும் வயசுக்கு உண்டான வேகத்துல சில விஷயங்களை அதிரடியா பண்றாரு. சின்ன ஜவுளிக்கடையை பெரிய கடையா மாத்தலாம்னு ஶ்ரீவில்லிபுத்தூர் மேலமாட வீதில அவங்க தாத்தாவோட பேர்ல ‘போத்தீஸ்’னு பெரிய கடையா ஆரம்பிக்குறாரு. 9 வருடங்கள் கடுமையா உழைச்சு அந்தக் கடையை டெவலப் பண்ணி அடுத்த பிராஞ்ச் திருநெல்வேலில ஆரம்பிக்குறாங்க. அடுத்து சென்னைல ஓபன் பண்ணலாம்னு ட்ரை பண்றாங்க. ஏழெட்டு வருசம் ட்ரை பண்ணி உஸ்மான் ரோட்டுல ஆரம்பிச்ச கடைதான் இப்போ பிரபலமா இருக்குற போத்தீஸ் கடை. ரமேஷோட சேர்த்து சடையாண்டிக்கு மொத்தம் ஆறு பசங்க. ஒவ்வொருத்தரும் மதுரை, திருநெல்வேலினு ஆளுக்கு ஒரு பிராஞ்ச் பாத்துக்குறாங்க. ஒருத்தர் மட்டும் டாக்டரா இருக்காரு. இன்னைக்கு தமிழ்நாடு முழுக்க 17 ஷோரூம்க்கு மேல இருக்கு போத்தீஸ்க்கு.

Also Read – மனச்சான்று, கீச்சுக்கருத்து, முப்பாட்டன் – சீமான் தமிழுக்கு பண்ண சேவைகள்!

ஒருநாளைக்கு 50 ரூபாய்க்கு வியாபாரம் நடந்த கடையா ஆரம்பிச்சது இன்னைக்கு வருடத்திற்கு மூவாயிரம் கோடி விற்பனை நடக்குது. ஜவுளிக்கடையா ஆரம்பிச்சது சமீபத்துல போத்தீஸ் ஸ்வர்ணமஹால்னு நகைக்கடையும் திறந்திருக்காங்க.  சிவகார்த்திகேயன்ல ஆரம்பிச்சு நயன்தாரா வரைக்கும் ஹிட் நடிகர்கள் பலரையும் வச்சு விளம்பரங்கள் எடுத்திருக்காங்க. உச்சபட்சமா விளம்பரங்கள்லயே நடிக்காம இருந்த கமலை வச்சே விளம்பரம் எடுத்தாங்க. இந்த விளம்பரத்து மூலமா வந்த காசை கமல் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கொடுத்ததா ஒரு தகவல் வந்தது. துணிக்கடைக்குதான் நடிகர்கள் இவங்களோட நகைக்கடை விளம்பரத்துல ரமேஷ் அவரே நடிச்சிருந்தாரு. ‘நீங்களும் லெஜெண்ட் சரவணா அண்ணாச்சி மாதிரி சினிமால நடிக்கப்போறீங்களா சார்?’னு கேட்டா, ‘அதெல்லாம் இல்லீங்க. துணி வாங்குறதைவிட நகை வாங்குறது ஒரு பெரிய செண்டிமெண்ட் நம்ம ஊர்ல. அதனால அந்த பிஸினஸ்ல வரும்போது நானே வந்து சொன்னாதான் மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரும்னு நினைச்சேன். மத்தபடி சினிமா ஆசையெல்லாம் இல்ல’னு சிரிக்குறாரு ரமேஷ்.

Pothys
Pothys

ஒரு சீக்ரெட் சொல்றேன்னு சொன்னேன்ல.. ரொம்ப ஸ்டைலா விளம்பரங்கள் பண்ற ஒரு பிராண்டு, பேரை வச்சிட்டு எதோ ஃபாரின் பிராண்டுனு நினைச்சிருப்போம். ஆனா அது போத்தீஸ்க்கு சொந்தமானது. அது என்ன தெரியுமா? துல்கர் சல்மான் பிராண்டு அம்பாசிடரா இருக்குற Otto.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top