ஊரே தீபாவளிக்கு ரங்கநாதன் தெருவில் துணி எடுக்கிறது. அங்கிருக்கும் ரெடிமேட் கடைகளில் வேலை பார்க்கும் பெண்கள் எங்கே தீபாவளிக்கு துணி எடுப்பார்கள்..? கேஸுவலாக விசாரிக்காப் போனால்… அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!
ரங்கநாதன் தெருவில் இருக்கும் ஒரு பிரமாண்ட துணிக்கடையில் தீபாவளி வரைக்கும் 50 நாட்கள் லீவு போடாமல் வந்தால் தான் போனஸ். 3000 ரூபாய் கூப்பன் கொடுப்பார்கள் அதில் ட்ரெஸ் எடுத்துக்கொள்ளலாம் அதன் பின்பு அந்த தொகை சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். வேலை பார்ப்பவர்களுக்கென தனியாக எத்தகைய discount ம் கிடையாது. கண்டிப்பாக 3000 கூப்பனை பயன்படுத்தியே ஆகவேண்டும்.

சேர் இருந்தாலும் உட்காரகூடாது. ட்ரெஸ் அடுக்கும் போது மட்டும் 10 நிமிடங்கள் உட்கார்ந்துக்கொள்ளலாம். ஒரு நிமிடம் தாமதமாகவந்தாலும் அன்றைய சம்பளம் கட் செய்யப்படும், ஆனால் வேலை பார்த்து தான் ஆக வேண்டும்.
ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் தான் லீவு எடுத்துக்கொண்டு ஊருக்கு செல்லவேண்டும். தீபாவளி சமயத்தில் ரீசண்டாக லீவு எடுத்து ஊருக்கு சென்றவர்கள் தீபாவளி சமயத்தில் லீவு எடுக்கக் கூடாது. தீபாவளி அன்றும் கடை உண்டு. அன்று மட்டும் கலர் ட்ரெஸ் போட்டு கொள்ளலாம்.
காலை 9 மணிக்கு உள்ளே சென்றால் இரவு பத்து மணிக்கு தான் வெளியில் வர வேண்டும். ஹாஸ்டலில் தங்கி பணிபுரிபவர்கள் தங்கள் குடும்பத்தினரோடு கூட போனில் பேச நேரம் கிடைக்கவில்லை என வருத்ததுடன் தெரிவித்தனர். கடைக்குள் வந்தால் போனை வாங்கி வைத்து விடுவார்கள். தீபாவளி அன்றாவது ஒரு அரை மணி நேரம் கொடுத்தால், பிள்ளைகளுடன் பேசிக்கொள்வோம் என வருத்தத்தை தெரிவித்தனர்.

தீபாவளிக்கு ஆசையாய் அம்மாவை அழைக்கும் குழந்தைகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள். இங்க வேலை பாக்குற எங்களுக்கு தீபாவளியே கிடையாது என கூறினர். அவ்வாறு லீவு கேட்டாலும் தீபாவளி அன்று இரவு 10 மணிக்கு தான் கிடைக்கும் தீபாவளி முடிந்தபிறகு. வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கண்டிப்பாக லீவு எடுக்க கூடாது. உடம்பு சரியில்லாத நிலையில் இருந்தால் கூட கடைக்கு வர வேண்டும்.
அதேநேரம் வேலையாட்களின் நலன் கருதும் சில கடைகளும் இருக்கிறது. ஒரு துணிக்கடையில் அங்கே பணிபுரிபவர்களுக்கு இந்த கடையில் துணிகள் வாங்கினால் 10% வரை தள்ளுபடி அளிக்கப்படும். தீபாவளி அன்று கடை விடுமுறை. போனஸ் அளிக்கப்படுகிறது.
இன்னொரு கடையில் பணியாளர்கள் துணிகள் வாங்கினால் 5% தள்ளுபடி அளிக்கப்படும். தீபாவளி அன்று கடை உண்டு. பாதி அளவு பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். போனஸ் வழங்கப்படுகிறது.

சென்னையில் மிகப்பிரபலமான துணிக்கடை ஒன்று. அங்கு தீபாவளி அன்று கடை முழுவதுமாக செயல்படும். போனஸ் கிடையாது. கட்டாயமாக விடுமுறை கிடையாது. விடுமுறை வேண்டும் என சேல்ஸ் கேர்ள்ஸ் கேட்டால் தகாத வார்த்தைகளால் திட்டியே விடுமுறையானது வழங்கப்படுகிறது. சிறிதளவு கூட மரியாதையாக நடத்துவது கிடையாது என வருத்ததுடன் தெரிவித்தனர்.
தீபாவளி அன்று ஒரு ஸ்வீட்டோ ஒரு நல்ல சாப்பாடோ ஒன்றுமே கிடையாது. வீட்டிற்கும் விடமாட்டார்கள். எல்லா நாட்களிலும் குடும்பத்த விட்டு பிரிஞ்சு இருக்கோம். நல்ல நாட்களில் கூட லீவு தரமாட்டாங்க என வேதனையுடன் தெரிவித்தனர்.
கடைக்கு வரும் கஸ்டமர்களால் பணியாளர்களுக்கு அமர்வதற்க்கு இருக்கை கொடுங்கள் என கம்ப்ளைண்ட் கொடுக்கப்பட்டது. அதன் மூலம் இருக்கைகள் வழங்கப்பட்டாலும் பெயருக்கு மட்டுமே அங்கு இருக்கும். அதில் அமர கூடாது என ஸ்ரிட்டாக ரூல் போடப்பட்டுள்ளதாம்.

சாப்பிடும் சாப்பாடுகளில் புழுக்களும், பூச்சிகளும் கிடக்கும் அதனை முறைப்படிகூட சமைத்து தர மாட்டர்கள். இந்த உணவு பிடிக்கவில்லை என்றாலும் வெளியில் சென்று சாப்பிட அனுமதிக்கமாட்டார்கள்.
Also Read: நிஜ ரௌடி கத்தமாட்டான். துல்கர் ஏன் பான் இந்தியா ஸ்டார்?
தீபாவளிக்கு நீங்க எங்க ட்ரெஸ் எடுப்பீங்கனு கேட்டதுக்கு, துணிக்கடைகளில் வேலைபார்க்கும் பெரும்பாலானவர்களின் பதில், ட்ரெஸே எடுக்க மாட்டோம் என்பது தான். வீட்டுல தாங்கமுடியாத கஷ்டம் அத சரி பண்றதுக்காக தான் இதையெல்லாம் பொறுத்துகிட்டு இங்க வேலை செய்யுறோம் அப்படினு சொன்னாங்க.
இங்க எங்களுக்கு இருக்குற ஒரே பிளஸ் பாயிண்ட் பிஎஃப் பிடிப்பாங்க. அது ஒரு அமௌண்டா எங்க கைக்கு வரும். அது ரொம்ப யூஸ் ஃபுல்லா இருக்கும் அது ஒண்ணுக்காகத்தான் நாங்க இங்க கஷ்டபடுறோம்னு சொன்னாங்க.

ரங்கநாதன் தெருவின் பளபள கடைகளில் வேலைபார்ப்பவர்கள் சந்திக்கும் அவலங்களை மையமாக வைத்து வந்த ‘அங்காடித்தெரு’ படம் வெளியாகி பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிறது. இன்றும் அதே நிலையே தொடர்கிறது என்பதுதான் சோகம். அங்கு வேலை பார்ப்பவர்களின் பாதுகாப்பு கருதி இதைச் சொன்னவர்களின் விபரமும் கடையின் பெயர்களையும் குறிப்பிடாமல் தவிர்த்திருக்கிறோம். அடுத்த முறை நீங்கள் இந்தக் கடைகளுக்குச் சென்றால் அங்கு வேலை பார்ப்பவர்களிடம் ஆறுதலாக பேசுங்கள் அது ஒன்றுதான் நம்மால் செய்ய முடியும்.



Tham gia cộng đồng game thủ tại Go88 để trải nghiệm các trò chơi bài, poker phổ biến nhất hiện nay.
iwin – nền tảng game bài đổi thưởng uy tín, nơi bạn có thể thử vận may và tận hưởng nhiều tựa game hấp
Với giao diện mượt mà và ưu đãi hấp dẫn, MM88 là lựa chọn lý tưởng cho các tín đồ giải trí trực tuyến.