TASMAC

டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்திருக்கும் 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை ஜூன் 21-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்திருந்த நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் புதிதாகப் பொறுப்பேற்ற அரசு, கடந்த மே 10-ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கை அமல்படுத்தியது. தொற்றுக் குறைவதற்கேற்ப அதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் ஊரடங்கு வரும் 14-ம் தேதி முடிவடைகிறது. இந்தசூழலில், தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்திருக்கும் 27 மாவட்டங்களில் சில கூடுதல் தளர்வுகளோடு ஊரடங்கு உத்தரவு வரும் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றுப் பரவல் அதிகம் இருக்கும் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்குத் தளர்வுகள் அளிக்கப்படவில்லை.

Lock Down
Lock Down

27 மாவட்டங்களுக்கான தளர்வுகள் என்னென்ன?

  • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்க அனுமதி.
  • சலூன்கள், பியூட்டி பார்லர்கள் ஆகியவை 50% வாடிக்கையாளர்களுடன் ஏசி இன்றி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
  • அரசு பூங்காக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் நடைபயிற்சிக்கு காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை அனுமதி.
  • மிக்சி, கிரைண்டர், டிவி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதுநீக்கும் கடைகள், சர்வீஸ் சென்டர்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கலாம்.
  • செல்போன் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கலாம்.
  • பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட நிர்வாகப் பணிகளுக்கு அனுமதி.
  • தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் மோட்டார் சைக்கிளில் செல்ல விரும்பினால் இ-பாஸ் பெறுவது கட்டாயம்.
  • ஐ.டி உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 20% பணியாளர்கள் அல்லது 10 நபர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top