திராவிடக் களஞ்சியம் சர்ச்சை

திராவிடக் களஞ்சியம் சர்ச்சை… எதிர்ப்பும் அரசின் விளக்கமும் – பின்னணி என்ன?

சங்கத் தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து திராவிடக் களஞ்சியம் என்று பெயர் சூட்டப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்குக் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. பின்னணி என்ன?

திராவிடக் களஞ்சியம் அறிவிப்பு!

சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 31-ல் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, “சங்கத் தமிழ் நூல்களை சந்தி பிரித்து எளிமைத் தமிழிலும் திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலையும் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியல் பணிகள் கழகத்தின் கூட்டு வெளியீடுகளாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அறிவித்தார்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

வலுக்கும் எதிர்ப்பு!

இந்தநிலையில், சங்க இலக்கியங்களைத் தொகுத்து அவற்றுக்கு திராவிடக் களஞ்சியம் என்று பெயர் வைப்பதா என தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து அவற்றுக்கு திராவிடக் களஞ்சியம் எனப் பெயர் சூட்டப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. தமிழர்களின் அறிவுக்கொடைகளாக இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களை திராவிடக் களஞ்சியம் என அடையாளம் மாற்றம் செய்ய முயலும் திமுக அரசின் செயல் தமிழினத்திற்கு எதிரான மிகப் பெரும் மோசடித்தனமாகும்.

சீமான்
சீமான்

மனு ஸ்மிருதியில் இருந்து எடுத்தாளப்பட்ட திராவிடம் என்பதைக் கொண்டு ஆரியத்துக்கு நேரெதிராக தனித்துவத்தோடு நிற்கும் தன்னிகரில்லா தமிழ் மொழியையும் தமிழ்ப் பேரினத்தையும் அடையாளப்படுத்தும் இழிநிலைக்கு எதிராக கருத்தியல் பரப்புரையும் அரசியல் போரும் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் தமிழின் தொன்மக் களஞ்சியங்களும் இல்லாத திராவிடத்தின் பெயரால் அடையாளப்படுத்தும் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது’’ என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், `தமிழர்களை திராவிடர்கள்’ என்பது, தமிழ்நாட்டைத் திராவிட நாடு’ என்பது, தமிழ் இலக்கணத்தை,திராவிட இலக்கணம்’ என்பது, தமிழர் திருநாளான பொங்கலை திராவிடர் திருநாள்’ என்பது, தமிழ் மாமன்னன் கரிகால் பெருவளவனைத்திராவிட மன்னன்’ என்பது, தமிழர் கட்டடக்கலையைத் திராவிடக் கட்டடக்கலை’ என்பது, தமிழர் நாகரிகமான சிந்துசமவெளி நாகரிகத்தை,திராவிட நாகரிகம்’ என்பது, தமிழ்க் கல்வெட்டுகளை, திராவிடக் கல்வெட்டுகள்’ என்பது, தமிழர் பண்பாடான கீழடியை,திராவிடப் பண்பாடு’ எனத் திரிப்பது என தமிழர்களின் மொழி, இனம், நிலம், கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, நாகரிகம் தொடர்பான தொன்ம அடையாளங்கள் யாவற்றையும் அழித்து, அவற்றின்மீது திராவிட முத்திரை குத்தியது போதாதென்று, தற்போது, தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பதற்கான வரலாற்று பெருஞ்சான்றுகளாகவும், யாராலும் மறுக்க முடியாத தரவுகள் நிறைந்த ஆவணங்களாகவுமுள்ள தமிழ் நூல்களைத் `திராவிடக் களஞ்சியம்’ எனும் பெயரில் அடையாள மாற்றம் செய்ய முயல்வது திராவிடத் திருட்டுத்தனத்தின் உச்சமாகும். இந்த நாடு தமிழ்நாடு; இங்கு வாழும் மக்கள் தமிழ் மக்கள்; மொழி தமிழ்மொழி; அதில் எழுதப்பட்டவை யாவும் தமிழ் இலக்கியங்கள்; அந்த நூல்களைத் தொகுக்கிறபோது மட்டும் எப்படித் திராவிடக் களஞ்சியமாக மாறும் எனும் கேள்விக்கு எவரிடமும் விடையில்லை’’ என்றும் சீமான் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு அறிவிப்பு

இதேபோல், தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், `மனு ஸ்மிருதியிலிருத்து எடுத்தாளப்பட்ட வடச்சொல்லான, ‘திராவிடம்’ என்பதனைக் கொண்டு, ஆரியத்திற்கு நேரெதிராகத் தனித்துவத்தோடு நிற்கும் தன்னிகரில்லா தமிழ்மொழியையும், தமிழ்ப்பேரினத்தையும் அடையாளப்படுத்தும் இழிநிலைக்கெதிராகக் கருத்தியல் பரப்புரையும், அரசியல் போரும் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், தமிழின் தொன்மக் களஞ்சியங்களையும் இல்லாத திராவிடத்தின் பெயரால் அடையாளப்படுத்தும் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. சங்க இலக்கியங்களிலோ, பழந்தமிழ் காப்பியங்களிலோ, தொன்ம இலக்கண இலக்கிய நூல்களிலோ என எங்கும் குறிக்கப்பெறாததிராவிடம்’ எனும் திரிபுவாதச் சொல்லைக் கொண்டு தமிழ் களஞ்சியங்களைக் குறிப்பிடும் திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது.

ஆகவே, சங்கத்தமிழ் இலக்கியங்களை திராவிடக்களஞ்சியம்’ என அடையாளப்படுத்தும் கொடுந்தீங்கான இப்போக்கை உடனடியாகக் கைவிட்டு, அவற்றை,தமிழ்க்களஞ்சியம்’ என்றே குறிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்” என்று வலியுறுத்தியுள்ளார். முன்னாள் எம்.எல்.ஏவும் நடிகருமான கருணாஸ், சங்கத்தமிழ் நூல்களுக்குத்திராவிடக் களஞ்சியம்” என்று இனமறைப்புத் தலைப்புக் கொடுக்காதே! “தமிழ்க் களஞ்சியம்” என்றே வெளியிடு!’’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசு என்ன சொல்கிறது?

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, “கால்டுவெல் தொடங்கி செம்மொழித் தமிழ் வரை காலகட்ட நூல்கள் மட்டுமே திராவிடக் களஞ்சியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டையும் போட்டு சிலர் குழப்பிக் கொள்ளக் கூடாது; மற்றவர்களையும் குழப்பக் கூடாது. சங்க இலக்கியங்களை தற்போதைய தலைமுறையினரும் புரிந்துகொள்ளும் வகையில், சந்தி பிரித்து செம்பதிப்புகளாக வெளியிடுவது என்பது ஒரு அறிவிப்பு. திராவிடக் களஞ்சியம் என்பது மற்றொரு அறிவிப்பு. இதில், கால்டுவெல் காலத்தில் இருந்து தற்போது அஸ்கோ பார்ப்லோ, ஆர்.பாலகிருஷ்ணன் வரையிலான ஆய்வறிஞர்களின் கட்டுரைகள் இடம்பெறும்’’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

தி.மு.க விமர்சனம்

இதுகுறித்து தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், `தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்திராவிட மாடல் ஆட்சி’ என்று சொல்வதைப் பார்த்து, `திராவிடத்துக்குள் வர முடியாதவர்கள்’ காய்ச்சல் அடைவதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால், மற்ற சிலருக்கும் அதைப்பார்த்து கோபம் வருவது அர்த்தம் அற்றது.

முரசொலி தலையங்கம்
முரசொலி தலையங்கம்

தமிழ்த் தேசிய பேரியக்கம் என்ற அமைப்பின் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை என்பது தமிழ்நாட்டின் நூற்றாண்டு கால அரசியல் வரலாற்றை மட்டுமல்ல; மொழிப்புலமை அறியாத தன்மையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அண்மைகாலமாக தமிழ் – தமிழர் – தமிழ்நாடு என்ற இயற்கையான சொற்களுக்கு மாற்றாகதிராவிட’’ என்ற வடசொல்லைப் புகுத்தி வருகிறார். தமிழ்நாட்டு வளர்ச்சியைக் குறிப்பதற்குக் கூட அவர், `திராவிட மாடல்’’ என்று பெயர் சூட்டினார். அண்மையில் நடந்த சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் பரப்புரையில்திராவிடம்’, திராவிடர்’ என்ற சொற்களை அதிகம் பயன்படுத்தாமல்,தமிழர்’ என்ற சொல்லையே அதிகம் பயன்படுத்தினார் ஸ்டாலின். ஆனால், முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்’’ (I belong to Dravidian Stock) என்று அறிவித்துக் கொண்டார். தமிழர்களிடம் வாக்கு வாங்கும்வரை அவர்களின் அசல் இனப்பெயரைச் சொல்லுவது, வாக்கு வாங்கி வெற்றிபெற்ற பின்னர்திராவிடத்தை’த் திணிப்பது என்ற தந்திரமாகத்தானே இதைப் பார்க்க முடிகிறது!’’ என்று சொல்லியிருக்கிறார் பெ.மணியரசன்.

திராவிட என்பதை வடசொல் என்பது வேர்ச்சொல் அறியாதவர் கூற்றாகத்தான் இருக்க முடியும். திராவிட மொழிநூல் ஞாயிறு’ தேவநேயப் பாவணர் அவர்கள்.திராவிடம்’ என்பது தமிழ்ச்சொல்லே என்றுதான் நிறுவி உள்ளார். திராவிடம் என்பது தென்சொல்லே என்று அவர் நிறுவி உள்ளார்’’ என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி உங்கள் கருத்து என்ன.. கமெண்டில் சொல்லுங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top