சென்னைனாலே கெத்துதான் தல… 5 காரணங்கள்!

“என்னடா ஊரு இது. எங்கப்பாரு கூட்டம், டிராஃபிக், வெயில். எப்படிதான் இங்க வாழ்றாங்களோ. என்ன பாஷை பேசுறாங்க. தடுக்கி விழுந்தா தூக்கி விடக்கூட எவனும் வரமாட்டான்” – சென்னையைப் பத்தி முதல்ல நம்மள்ல பல பேர் கேள்விபட்ட விஷயம் இதுவாதான் இருக்கும். நிறைய படங்கள்லகூட சென்னையை “இதெல்லாம் ஒரு ஊரா?”ன்ற மாதிரியான வசனங்கள்தான் இருக்கும். சென்னைல நிறைய விஷயங்கள் மாறிடுச்சு. ஆனால், மாறாத ஒரு விஷயம் சென்னையைப் பத்தி இப்படி புரளி பேசுறது. பேசுறவங்க எல்லாரையும் வாழ வைக்கிறது சென்னைதான். ஒண்ணுமே இல்லாமல் வெறும் சர்டிஃபிகேட்ஸ தூக்கிட்டு வந்தவங்களை மிகப்பெரிய கம்பெனில வேலைல உட்கார வைச்சு கார், பைக், வீடுனு செட்டில் ஆக வைச்சது சென்னைதான். சினிமால யாரையுமே தெரியாமல் வந்தவங்களை மிகப்பெரிய டைரக்டராகவும் ஹீரோவாகவும் ஆக்கியது சென்னைதான். லட்சம் பேர் லட்சம் குறைகள் சொல்லலாம். என்னைப் பொறுத்தவரைக்கும் சென்னை எப்பவுமே செம கெத்துதான். ஏன்? அதுக்கான ஐந்து காரணங்களைதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.

சென்ட்ரல்
சென்ட்ரல்

சென்னைக்கு வந்து வேலைலயே இல்லைனா காலேஜ்லயே சேர்ந்து கொஞ்சம் நாள்ல எல்லாரும் சொல்ற டயலாக், “மொதல்ல இந்த ஊரை விட்டு போணும்” அப்டின்றதுதான். மாநகரம் படத்துல கேப்ல சார்லியும் ஸ்ரீயும் பேசுற சீன் ஒண்ணு வரும். அந்த சீன்ல மெட்ராஸ் படத்துல வந்த, “எங்க ஊரு மெட்ராஸு இதுக்கு நாங்க தானே அட்ரஸு”னு பாட்டு ஓடும். அதைப் பார்த்து கடுப்பாகி ஸ்ரீ, சார்லிகிட்ட, “அண்ணா, இந்தப் பாட்டை தயவு செய்து ஆஃப் பண்றீங்களா?” அப்டின்னுவாரு. அடுத்து கான்வர்சேஷன் ஸ்டார்ட் ஆகும். அப்போ ஸ்ரீ, “இந்த ஊரே அப்படிதான்”னு சொல்லுவாரு. “சார், நானும் இந்த ஊருக்கு புதுசுதான். ஒருசில பேர் பண்றதை வைச்சு மொத்த ஊரையும் குத்தம் சொல்ல முடியாதுல. நான் எதுக்கு சொல்றேன்னா, நம்மள மாதிரி இந்த ஊருக்கு பொழப்பு தேடி வந்தவங்கதான் ஜாஸ்தி. அப்படி இருக்கும்போது ஊரை குத்தம் சொல்லி பிரயோஜனம் இல்லேல சார். அதுவும் இல்லாமல் இந்த ஊருக்கு வந்து நல்லா சம்பாதிச்ச அத்தனை பேரும் வாய்கூசாம இந்த ஊரை திட்டுவானுகளே தவிர, ஒருத்தன்கூட ஊரை காலி பண்ணி போகமாட்டாணுங்க. அது இந்த ஊரு ராசி”ன்னுவாரு.

சார்லி பேசுறதைக் கேட்டுட்டு ஸ்ரீ செம கடுப்பாய்டுவாரு. “நடுரோட்டுல போட்டு ஒருத்தனை அடிச்சா ஏன்னு கேக்க ஒருத்தன் வரமாட்டான். கோடி பேர் இருக்கானுங்கனுதான் பேரு. இதுக்கு நீங்க சப்போர்ட் பண்றீங்க”ன்னுவாரு. கொஞ்சம்கூட யோசிக்காமல், “நாம கேட்ருக்கோமா சார்? நாம கேட்டாதான் நமக்கு நடக்கும்போது கேப்பாங்க இல்லையா?”னு சார்லி கேப்பாரு. இந்த சீனை வைச்சே நம்மளோட கேள்விக்கு நாம பதில் சொல்லிக்கலாம். சென்னைல அடிபட்டு கீழ் விழுந்து கிடக்கும்போது மத்த ஊர் காரங்க எல்லாம் நமக்கு எதுக்கு வம்புனுதான் பெரும்பாலும் ஒதுங்கி போவாங்க. அவங்களை குறை சொல்லல. நம்ம சொந்த ஊரு இல்லைன்ற ஒரு பயம். எல்லாத்தையும் மீறி கமல் ஸ்டைல்ல “த்தா பாத்துக்கலாம்னு உங்களை தூக்கி கொண்டு போய் ஹாஸ்பிடல்ல சேக்குறவன்கிட்ட, “நீங்க எந்த ஊரு?”னு கேட்டா சென்னைனுதான் மேக்ஸிமம் பதில் வரும். பாசக்காரங்கயா சென்னைக்காரங்க. சென்னைல வெள்ளம், புயல்லாம் வந்தப்ப ஊரு, பேரு பார்க்காம உதவி பண்ணாங்க. எல்லாத்தையும் தாண்டி எல்லா மாவட்டங்கள்லயும் தலித் மக்களை ஒடுக்கிதான் இன்னைக்கும் வைச்சிருக்காங்க. ஆனால், அவங்களையும் அவங்க லைஃப் ஸ்டைலயும் அவங்க கலைகளையும் கொண்டாட தொடங்கியிருக்குறது சென்னைலதான். ஸ்டில் நகரத்துல சாதி, மதம் பார்க்குற பிரச்னைகள் எல்லாமே இருக்கு. ஆனால், கம்பேரிட்டிவ்லி சென்னை எவ்வளவோ பெட்டர். இப்போ சொல்லுங்க, சென்னைல நாம சொல்ற ஹியூமானிட்டி இல்லையா?

மெரினா
மெரினா

ஊரு விட்டு ஊரு வந்தாதான் சாப்பாடு, அம்மாப்பா, ஊரோட அருமை எல்லாம் புரியும்னு சொல்லுவாங்க. கண்டிப்பா அது உண்மைதான். உணவுன்ற விஷயத்தை முதல்ல எடுத்துப்போம். மதுரைக்குப் போனால், கறிதோசையும் ஜிகர்தண்டாவும்தான் சாப்பிடதோணும். கோவில்பட்டிக்குப் போனால் கடலை மிட்டாயை தான் மனசு தேடும், தஞ்சாவூர் போனால் காபி குடிக்கத்தான் மனசு ஏங்கும் இதெல்லாமே சென்னைல அதே சுவையோட கிடைக்கும். வேற எந்த ஊர்லயும் இந்த விஷயத்தைப் பார்க்க முடியாது. அதே மாதிரி ஒரு குட்டி இந்தியா சென்னைனு சொல்லலாம். ஏன்னா, இந்திய அளவுல ஃபேமஸா இருக்குற உணவுகளும் இங்க கிடைக்கும். நாம ரெகுலரா சாப்பிடப் போற கடைல இருக்குற அண்னன் நமக்கு வணக்கம் வைக்கிறது. உரிமையா நேத்து ஆளக்காணுமேனு கேக்குறதுலாம் வரம்தான். அம்மாப்பா நம்மக்கூடவே இல்லையேன்ற ஏக்கம் சென்னைக்கு வந்து கொஞ்சம் நாள் நம்ம கூடவே இருக்கும். ஆனால், கொஞ்சம் நாள் பழகி ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து சுத்த ஆரம்பிச்சிட்டோம்னு வைங்க. சென்னை நமக்கு சொர்க்கமா மாறிடும். நம்ம ஃப்ரெண்ட்ஸே நமக்கு எல்லாமாவுமாய் அம்மாப்பாவா, சொந்தக்காரனா, ஊர் ஃப்ரெண்டா மாறிடுவான். “சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா”னு பாடுறதுக்கு அப்போ சென்னையும் வொர்த்தான இடமாதான் நமக்கு தெரியும். அதேமாதிரி நம்ம ஊர்லயே இருந்துட்டு அங்க இருக்குறவங்கள பார்த்தா ஒரு கிக் வராது. ஆனால், சென்னை வந்துட்டு எதார்த்தமா நம்ம ஊர்க்காரங்கள பார்த்தோம்னா ஒரு சந்தோஷம் வருமே அது வேற லெவல்ல இருக்கும்.

நாம சென்னைக்கு வந்ததுக்கு அப்புறம் எந்த ஊருக்கு போனாலும் சர்வைவ் ஆயிடலாம்னு ஒரு கான்ஃபிடண்ட சென்னை நமக்கு கொடுக்கும். அதேமாதிரி சேலம்னு சொன்னா, அங்க நமக்கு ஒரு ஃப்ரெண்ட் இருப்பான், கோயம்புத்தூர்னு சொன்னா, அங்க நமக்கு ஒரு ஃப்ரெண்ட் இருப்பான், மதுரைனு சொன்னா, அங்க நமக்கு ஒரு ஃப்ரெண்டு இருப்பான். தமிழ்நாட்டுல இருக்குற எல்லா மாவட்டங்கள்லயும் நம்மளுக்கு நண்பன் கிடைப்பான். இதெல்லாம் சென்னையைத் தவிர வேற எங்கயும் சாத்தியம் ஆகாத விஷயம். நம்ம ஊர்லயெல்லாம் நேரம் போகலை டக்னு போய் ஒரு படம் பார்க்கணும்னா 2 மைலுக்கு அங்க போகணும். ஆனால், சென்னைல டக் டக்னு வேலையை முடிச்சிடலாம். சினிமா மட்டுமில்ல பார்க், மால், கடற்கரை இப்படி ஏகப்பட்ட என்டர்டெயின்மென்ட் விஷயங்கள் இருக்கு. இதெல்லாம் நேரத்தை வீணாக்குறதுனு நீங்க நினைச்சீங்கனா, இலக்கிய வட்டங்கள் நிறைய நடக்கும். மிகப்பெரிய அரிய புத்தகங்கள் கொண்ட லைப்ரரிகள் இருக்கு. இங்கையெல்லாம் போய்கூட உங்க நேரத்தை பயனுள்ளதா மாத்தலாம். ஒண்ணுமே இல்லை சும்மா சுத்தனும்னாலும் நீங்க சுத்தலாம். 10 ரூபாய் இருந்தா பஸ்ல சுத்தலாம். 100 ரூபாய் இருந்தா பைக்ல சுத்தலாம். 500 ரூபாய் இருந்தா ஹாயா ஏ.சி போட்டு கார்ல சுத்தலாம்.

கத்திப்பாரா
கத்திப்பாரா

ஹாஸ்டல் வாழ்க்கை, மேன்ஷன் வாழ்க்கை – இப்படி சென்னைல நாம பண்ற ஒவ்வொரு விஷயமும் எதாவது ஒண்ணை கத்துக்கொடுத்துட்டேதான் இருக்கும். ஒவ்வொருத்தரோட மேன்ஷன் கால கதைகளையும் ஹாஸ்டல் கால கதைகளையும் உருட்டி தெரட்டுனாலே ஒரு படம் பண்ணிடலாம். எல்லாத்தையும்விட முக்கியமான விஷயம் வேலை. ஒண்ணுமே இல்லாமல் கத்துக்குட்டியா நீங்க சென்னைக்கு வந்தாக்கூட. எதையாவது உங்களுக்கு கத்துக்கொடுத்து, ஒரு வேலையை வாங்கி தந்துரும். என்ன அதுக்கு கொஞ்சம் டைம் ஆகலாம். இல்லைனா, நீங்க கத்துக்குறதுக்கு கொஞ்சம் லேட் ஆகலாம். ஆனால், வேலை உறுதி. இன்னைக்கும் “என் பையன் சென்னைல வேலை பார்க்குறான்”னு ஊர்ல பெருமையா பேசுற பெத்தவங்களை நாம பார்க்க முடியும். இப்படி உங்களை மட்டுமில்ல உங்க பெத்தவங்களையும் சேர்த்து பெருமைப்படுத்தின ஊர்யா இந்த சென்னை. அதனால, இந்த இனிமேல் இந்த சென்னையைப் பத்தி தப்பா பேசாதீங்க. சென்னைல இருக்கோம்னு கெத்தா ஃபீல் பண்ணுங்க!

சரி, சென்னை கெத்துனு நீங்க ஏன் ஃபீல் பண்றீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top