ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘G Square’ நிறுவனத்தில் கடந்த வாரம் வருமான வரித்துறை சோதனை நடந்தது. ஜி ஸ்கொயர் நிறுவனம் முதல்வரின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான நிறுவனம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனடிப்படையில்தான் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

நில பத்திரங்கள், வங்கி பரிவர்த்தனைகள் என வருமான வரித்துறை அதிகாரிகள் 50க்கும் மேற்பட்ட குழுக்களாக ஒரு வாரமாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை குறித்து பல தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது ஜி ஸ்கொயர்.
இச்சோதனையில் 3.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக வந்த செய்தியை மறுத்துள்ள ஜி ஸ்கொயர் நிறுவனம், இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று கூறியுள்ளது. அதோடு இது போன்ற சோதனைகள் வழக்கமான ஒன்றுதான் என்று சொல்லும் G Square, எங்கள் நிறுவனத்துக்கும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கோ அல்லது அவர்களின் குடும்பத்தினருக்கோ எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதை இந்த வருமான வரி சோதனை நிரூபித்துள்ளது என்றும் விளக்கம் கொடுத்துள்ளது.
0 Comments