கிரெடிட் கார்ட் பில், எக்கச்சக்க EMI, சேவிங்ஸா அப்டினா என்னனு யோசிக்குற ஆளா நீங்க..? பணத்தை செலவழிக்குற மாதிரியே கொஞ்ச நேரத்தை செலவு பண்ணி இந்தக் கட்டுரையைப் படிங்க.
கூடுதல் வருமானம், தெளிவான முதலீடு செய்யும் முறை, செலவு செய்யும் முறை… இந்த மூன்றுதான் உங்களைக் கடுமையான நிதிச் சிக்கலில் இருந்து உங்களை வெளிக்கொண்டு வரும்.
Passive Income
முதல்ல ஒரு சின்ன கேள்வி… இந்தக் கேள்விக்கு நீங்கள் பதிலை வெளியே சொல்ல வேண்டாம். உங்களுக்குள்ளவே யோசிச்சுப் பாருங்க…
- நீங்க முழிச்சிருக்கும் போது எவ்வளவு சம்பாதிக்குறீங்க?
- நீங்க தூங்கும் போது எவ்வளவு சம்பாதிக்குறீங்க?
எது தூங்கும் போது சம்பாதிக்குற்தா? தூங்குறதுக்கெல்லாம் சம்பளம் தராங்கன்னு யோசிக்காதீங்க?
நீங்க ஒரு முதலீடு செய்திருந்தால், அந்த முதலீடு நீங்க தூங்கும் போதும் எவ்வளவு சம்பாதிச்சு தருதுங்குறதைப் பொறுத்து தான்… அது சிறந்த முதலீடா இருக்கும்…
9-5 வேலையில் உங்களுடைய உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டு நீங்கள் சாம்பாதிப்பது Active Income. ஆனால், பெரிதாக உங்கள் நேரத்தை விழுங்காத, உங்களுடைய திட்டமிடலின் மூலமாகவும், முதலீட்டின் மூலமாகவும் வரும் வருமானத்தை Passive Income என்கிறார்கள்.
பூமர் அங்கிள்கள் சேமிப்பு, ஓய்வுக்கால முதலீடு மாதிரியான விஷயங்களில் திட்டமிடுவதே 45 வயதுக்கு மேல். ஆனால், இன்றைய மில்லினியல் 2K kids, 40 வயதிலேயே ஓய்வை எடுக்க விரும்புகிறார்களாம். இந்த Passive Income உதவியுடன் 30 வயதிற்குள்ளேயே அடுத்த பத்தாண்டுகளுக்கான சேமிப்பை திட்டமிட்டால், 40 வயதில் நிச்சயமாக ஓய்வெடுக்கலாம்.
இப்போ சொல்லுங்க, “நீங்க தூங்கும் போது எவ்வளவு சம்பாதிக்குறீங்க..?”
“Power Of Compound Effect
பில்கேட்ஸ், எலான் மஸ்க்கு, அதானி, அம்பானின்னு ஊருக்குள்ளாற ஆயிரத்தெட்டு பணக்காரங்க இருப்பாங்க… ஆனா, பில்கேட்ஸே அவரோட இன்வெஸ்ட்மெண்ட் அட்வைசுக்கு போய் நிக்குற ஒரு ஆள் “வாரென் பஃபெட்”
அப்படி வாரென் பஃபெட் என்ன தொழில் செய்றாரு, எந்தக் கம்பெனியின் உரிமையாளர்னுலாம் யோசிக்காதீங்க… எதெல்லாம் நல்ல லாபம் தரும் கம்பெனின்னு அவர் முடிவுக்கு வராரோ, எந்த தொழிலெல்லாம் நல்ல லாபம் தருதோ அத்தனையிலும் அவர் தடம் இருக்கும். அத்தனையும் அவருக்கு சம்பாதித்துக் கொடுக்கும்.
அப்படிப்பட்ட வாரென் பஃபெட்டின் ஒரு “சக்சஸ் சீக்ரெட் ஆஃப் இன்வெஸ்ட்மெண்ட்” என்ன தெரியுமா? “Power Of Compound Effect”
அது என்ன Power of Compound Effect-னு கேக்குறீங்களா? ஒரு சின்ன கதை…
உங்க கிட்ட ஒரு காலி ‘மேஜிக் உண்டியல்’ இருக்கு. அதுல நீங்க முதல் நாள் ஒரு ரூபாயைப் போட்டால் போதும் அது ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் ஒரு முறை அதற்கு முன்பு இருந்ததை விட இரண்டு மடங்காகும். உதாரணமாக இரண்டாவது நாள் 2 ரூபாயாகும், அடுத்த நாள் 4 ரூபாய் ஆகும்.
இப்படி ஒரு ரூபாய், ரெண்டு ரூபாயா மாறுனா, உண்டியல் என்னைக்கு நிரம்புறதுன்னு கேக்குறீங்களா? ஒரு பேனா, பேப்பர் எடுத்து கணக்கு போட்டுப் பாருங்க…
முதல் நாள் – 1
இரண்டாம் நாள் – 2
மூன்றாம் நாள் – 4
நான்காம் நாள் – 8
ஐந்தாம் நாள் – 16
ஆறாம் நாள் – 32
ஏழாம் நாள் – 64
.
.
.
பத்தாவது நாளில் 512 ரூபாய் இருக்கும்.
பதினைந்தாவது நாளில் அது 16384 ரூபாயாக இருக்கும்.
எத்தனை நாள்களில் ஒரு லட்ச ரூபாய் அந்த உண்டியலில் சேர்ந்திருக்கும் தெரியுமா?
18வது நாளில்.
அடுத்த 3 நாளில் அது 1048576 – பத்து லட்சமாக மாறி இருக்கும்.
அடுத்த நாள் அது 20 லட்சமாக மாறி இருக்கும்.
25வது நாள் அது ஒரு கோடி ரூபாயாக மாறி இருக்கும்.
31வது நாள் நூறு கோடியைத் தாண்டி இருக்கும்.
இதைத்தான் Power Of Compound Effect என சொல்கிறார்கள்.
வாரென் பஃபெட்டின் சொத்து மதிப்பு உயர்ந்ததும் இந்த முறையில் தான்.
20-4-10 Rule
சம்பாதிக்குறதெல்லாம் எங்கே போகுதுன்னு தெரியலையேன்னு யோசிக்குறீங்களா? உங்களைச் சுத்திப் பாருங்க… என்னென்ன பொருள்கள் வாங்கி வச்சிருக்கீங்க? அதுல எத்தனை பொருள்கள் உண்மையாவே தேவை… எவ்வளவு பயன்படுத்துறீங்கன்னு யோசிச்சுப் பாருங்க…
வீடோ, காரோ அல்லது ஐபோனோ நீங்கள் எந்தப் பொருளையும் வாங்கும் போது இந்த 20-4-10ரூலை பாலோ பண்ணுங்க.
அது என்ன 20-4-10?
முதல்ல இருக்க 20 – ஒரு பொருளை நீங்க வாங்கும் போது முதலில் செலுத்த வேண்டிய Downpayment எப்போதும் 20% மாக இருக்க வேண்டும். 1 Rupee down payment, 0 Down payment மாதிரியான வலைகளில் சிக்காதீர்கள். இது நல்லது தானே… அப்புறம் ஏன் இப்டி சொல்றோம்னு யோசிக்குறீங்களா? ஏன்னு விளக்கமா இன்னும் கொஞ்ச நேரத்துல பாப்போம்.
அடுத்தது 4
மீதித் தொகைக்கு நீங்க கட்ட வேண்டிய Loan Duration எப்போதும் 4 ஆண்டுகளைத் தாண்டாமல் இருக்கனும்.
அடுத்தது 10
ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்த வேண்டிய emi தொகை உங்களுடைய சம்பளத்தில் 10% தாண்டக்கூடாது.
ஏன் இந்த ரூலை ஃபாலோ பண்ணனும்? ஒரு சின்ன கணக்கு போட்டு பாப்போம் வாங்க.
முதலில் 20-4-10 ரூல் பாலோ செய்யாம கணக்கு போடுவோம்.
மாதம் ‘ஒரு லட்சத்து ஐம்பதாயிரம்’ ரூபாய் வருமாணம் வாங்கும் நீங்க, 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை, Zero Down Payment-ல் 5 வருட லோன் போட்டு நீங்க வாங்கப் போறீங்க?
அப்போ நீங்க செலவு செய்ய வேண்டிய தொகை என்ன தெரியுமா?
இப்போ 20-4-10 ரூல் பாலோ செய்து கணக்கு போடுவோம்.
7 லட்ச ரூபாய்க்கான 20% down payament ஆக 1,40,000 போக மீதம் 5,60,000 ரூபாய்க்கு நான்கு ஆண்டுகளுக்கு நீங்கள் லோன் போட்டு கார் வாங்கும் போது நீங்கள் செலுத்த வேண்டிய வட்டி தொகை 83000 தான். நீங்கள் 20-4-10 விதியை ஃபாலோ செய்யாமல் விட்டால் செலுத்த வேண்டிய வட்டி தொகை 1,31,000.
இந்த விதியில் ஏதோ ஒன்றை உங்களால் பின்பற்ற முடியாவிட்டாலும் அந்தப் பொருளை வாங்குவதற்கான சரியான நிதிச்சூழல் உங்களிடம் இல்லை. கொஞ்சம் பொறுத்திருங்கள்.
சம்பாதிக்குறது மட்டுமில்லை, அதைத் தெளிவா முதலீடு செய்வதும், சரியான வழியில் செலவு செய்வதும் தான் ஆரோக்கியமான நிதிப் பழக்கமாக இருக்கும்.
Also Read – Personal Loan: பெர்சனல் லோன் எடுக்கப் போறீங்களா… இதையெல்லாம் செக் பண்ணிக்கோங்க பாஸ்!