முன்னணி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் 2021ம் ஆண்டு வெளியிடப்பட உள்ள 41 படங்கள், வெப்சீரிஸ் உள்ளிட்டவைகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
13 படங்கள்
- அஜீப் டஸ்டன்ஸ் (Ajeeb Daastaans) – தயாரிப்பு- கரண் ஜோஹர், இயக்கம் – நீரஜ் கைவன்.
- புல்புல் தரங் (Bulbul Tarang) – சோனாக்ஷி சின்ஹா நடித்திருக்கும் படம்.
- தமாகா (Dhamaka) – கார்த்திக் ஆர்யான் நடித்திருக்கும் படம்.
4.தி டிசிபிள் (The Disciple) – சைத்தன்யா தாம்னே எழுதி இயக்கி எடிட் செய்திருக்கும் மாராத்தி படம்.
- ஹஸீன் தில்ருபா (Haseen Dillruba) – டாப்ஸி பன்னுவின் திரில்லர் படம்.
- ஜாடுகார் (Jaadugar) – ஜிதேந்திர குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் படம்.
- ஜகமே தந்திரம் (Jagame Thandhiram) – தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் படம்.
- மீனாட்சி சுந்தரேஸ்வர் (Meenakshi Sundereshwar) – நடிப்பு – சன்யா மல்ஹோத்ரா
- மைல் ஸ்டோன் (Milestone) – வெனிஸ் திரைப்பட விழாவில் பாராட்டுகளைக் குவித்த படம். இயக்கம் – அயர் சோனி
- நவரசா (Navarasa) – விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கியிருக்கும் ஆந்தாலஜி படம்
- பாக்லெய்ட் (Pagglait) – சன்யா மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகியிருக்கும் காமெடி ஜானர் படம்.
- பெந்த்ஹவுஸ் (Penthouse) – அப்பாஸ் – மஸ்தான் இரட்டை இயக்குநர்களின் திரில்லர் ஜானர் படம்.
- சர்தார் கா கிராண்ட்சன் (Sardar Ka Grandson) – அர்ஜூன் கபூர், நீனா கபூர், ரகுல்ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள படம்.
15 வெப்சீரிஸ்கள்
. அரண்யாக் (Aranyak) – டிஜிட்டலில் ரவீணா டாண்டன் அறிமுகமாகும் கிரைம் திரில்லர்
- பாம்பே பேகம்ஸ் (Bombay Begums) – பூஜா பட் நடித்திருக்கும் பெண்களை மையப்படுத்திய தொடர்
- டிகபுள்டு (Decoupled) – மாதவன் நடித்திருக்கும் இந்தத் தொடர் திருமணமான தம்பதிகளிடையே விவகாரத்து தொடர்பான பிரச்னைகளைப் பேசுகிறது.
- டெல்லி கிரைம்ஸ் – சீசன் 2 (Delhi Crime: Season 2) – எம்மி விருது வென்ற தொடர்.
- ஃபீல்ஸ் லைக் இஷ்க் (Feels Like Ishq) – 7 கதைகள் கொண்ட ஆந்தாலஜி
- ஃபைண்டிங் அனாமிகா (Finding Anamika) – மாதூரி தீட்ஷித் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தொடர்
- ஜமத்ரா: சீசன் 2 (Jamtara: Season 2) – தேசிய விருதுவென்ற இயக்குநர் சுமேந்திர பதியின் படைப்பு.
- கோட்டா ஃபேக்டரி சீசன் – 2 (Kota Factory: Season 2) – ராஜஸ்தானின் கோட்டா பகுதியிலிருக்கும் கோச்சிங் சென்டர்களைக் கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கோட்டா ஃபேக்டரி தொடரின் சீக்வெல்.
- லிட்டில் திங்க்ஸ்: சீசன் 4 (Little Things: Season 4) – மிதிலி பார்க்கர் நடித்துள்ள இந்தத் தொடர் இந்தியாவில் முதலில் தயாரான வெப்சீரிஸ்களுள் ஒன்று.
- மாய் (Mai) – அனுஷ்கா ஷர்மா தயாரிப்பில் 47 வயதுப் பெண்ணின் போராட்டத்தைப் பேசும் இந்த சீரிஸில் சாக்ஷி தன்வர் நடித்திருக்கிறார்.
- மசாபா மசாபா: சீசன் 2 (Masaba Masaba: Season 2) – பேஷன் டிசைனர் மசாபா குப்தாவின் வாழ்க்கை வரலாறு பற்றி பேசும் வெப்சீரிஸ்
- மிஸ் மேட்ச்டு: சீசன் 2 (Mismatched: Season 2) – எழுத்தாளர் சந்தியா மேனன் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட முதல் பாகத்தின் தொடர்ச்சி. இளம் வயது காதலர்கள் பற்றிய வெப்சீரிஸ்.
- ரே (Ray) – சத்யஜித்ரே கதைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸில் மனோஜ் பாஜ்பாய், கிரிராஜ் ராவ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
- ஷீ: சீசன் 2 (She: Season 2) – இம்தியாஸ் அலி மற்றும் திவ்யா ஜோரி திரைக்கதை அமைத்திருக்கும் கிரைம் டிராமா
- யே காலி காலி அன்ஹீன் (Yeh Kaali Kaali Ankhein) – ஸ்வேதா திரிபாதி நடிப்பில் உருவாகியிருக்கும் வெப்சீரிஸ்.
காமெடி ஸ்பெஷல்:
ஆகாஷ் குப்தா ஸ்டேண்ட் – அப் காமெடி ஸ்பெஷல் (Untitled Aakash Gupta stand-up special)
காமெடி பிரீமியம் லீக் (Comedy Premium League)
கபில் சர்மா ஸ்டேண்ட் – அப் காமெடி ஸ்பெஷல் (Untitled Kapil Sharma stand-up special)
பிரசாஸ்தி சிங் ஸ்டேண்ட் – அப் காமெடி ஸ்பெஷல் (Untitled Prashasti Singh stand-up special)
ராகுல் துவா ஸ்டேண்ட் – அப் காமெடி ஸ்பெஷல் (Untitled Rahul Dua stand-up special)
சுமுகி சுரேஷ் ஸ்டேண்ட் – அப் காமெடி ஸ்பெஷல் (Untitled Sumukhi Suresh stand-up special)
ஆவணப்படங்கள்:
கிரைம் ஸ்டோரிஸ்: இந்தியா டிடெக்டிவ்ஸ் (Crime Stories: India Detectives)
ஹவுஸ் ஆஃப் சீக்ரெட்ஸ்: தி புராரி டெத்ஸ் (House of Secrets: The Burari Deaths)
இண்டியன் பிரிடேட்டர்ஸ் (Indian Predator)
சர்ச்சிங் ஃபார் ஷீலா (Searching for Sheela)
ரியாலிட்டி ஷோக்கள்
தி பிக் டே: கலெக்ஷன் 2 (The Big Day: Collection 2)
ஃபேபுலஸ் லைவ்ஸ் ஆஃப் பாலிவுட் வைவ்ஸ்: சீசன் 2 (Fabulous Lives of Bollywood Wives: Season 2)
சோசியல் கரன்சி (Social Currency)