2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகளைத் தமிழக அரசியல் கட்சிகள் ஜரூராகத் தொடங்கிவிட்டன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க – பி.ஜே.பி இணைந்தே சந்தித்தன. இந்த சூழ்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழக பி.ஜே.பி தலைவர் அண்ணாமலை வைத்த ஒரு டிமாண்டைக் கேட்டு எடப்பாடி பழனிசாமி தரப்பு ஜெர்க் ஆகியிருக்கிறார்களாம். அப்படி என்ன டிமாண்ட் வைத்தார் அண்ணாமலை, அதற்கு இ.பி.எஸ்ஸின் ரியாக்ஷன் என்ன என்பது பற்றிதான் இந்த வீடியோவில் நாம பார்க்கப்போறோம்.
பி.ஜே.பி டிமாண்ட்
நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள் ஆங்காங்கே தொடங்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தங்களுடைய வலிமையைக் காட்டுறதும், தங்களுடைய பேர வலிமையை முக்கியமான தோழமைக் கட்சிக்குத் தெரியப்படுத்துறதுக்கான வேலைகளை முன்னெடுத்துட்டு இருக்காங்க. இது தி.மு.க முகாமிலும் நடக்கிறது; அ.தி.மு.க முகாமிலும் நடக்கிறது. குறிப்பா அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் பி.ஜே.பியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இப்போ பி.ஜே.வி Vs தி.மு.க என்றுதான் தமிழக அரசியல் நிலைமை இருக்கு. 2024-லிலும் சரி, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அப்படித்தான் இருக்கும் என்று பேசிட்டு வர்றார்.
Also Read – 500-ல் 149-வது வாட்ச்; லிமிடெட் எடிஷன் – அண்ணாமலை வாட்ச்சில் என்ன ஸ்பெஷல்?!
இதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில், அண்ணாமலை அ.தி.மு.கவுக்கு தகவல் ஒன்றை அனுப்பியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பிக்குத் தமிழகத்தில் 13 சீட்டைக் கொடுத்துவிட வேண்டும். அந்த 13 இடங்களில் நாங்கள் போட்டியிடுவோம். அப்படி எங்களுக்கு 13 சீட்டுகளைக் கொடுக்கவில்லை என்றால், அவங்க 15 சீட்டுகளை எடுத்துக் கொண்டு மீதமிருக்கும் இடங்களை எங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். தேர்தலின்போது கூட்டணிக் கட்சிகள் யார் என்பதை முடிவு செய்து, அவர்களுக்கான சீட்டுகளை நாங்களே பகிர்ந்து அளித்துவிடுவோம். ஒண்ணு எங்களுக்கு 13 சீட்; இல்லாட்டி நீங்க 15 சீட்டுகளை எடுத்துக்கிட்டு மிச்சத்தை எங்ககிட்ட கொடுத்துடுங்க என்பதுதான் அண்ணாமலையின் டிமாண்டாக இருக்கிறது.
இந்தத் தகவல் எடப்பாடி பழனிசாமியின் காதுகளுக்கும் போயிருக்கிறது. அதைக் கேட்டுவிட்டு சிரித்துக் கொண்டே எடப்பாடி பழனிசாமி, `அவங்களே நம்ம கூட்டணில ஒட்டிக்கிட்டுதான் இருக்காங்க. அவங்க நம்ம கூட்டணில ஒரு அங்கம்தானே தவிர கூட்டணிக்குத் தலைமையேற்று நடத்தல. மத்தியில் அவங்க ஆட்சியில் இருக்கலாம்; நாமதான் இங்க பிரதான கட்சி, எதிர்க்கட்சி. போன தேர்தல்ல இவங்க கூட்டணில இருந்ததாலத்தான் ஆட்சியமைக்குற வாய்ப்பே நமக்கு பறிபோச்சு. இவங்க கூட்டணில இல்லாம இருந்தா, நிச்சயம் நாம ஜெயிச்சிருப்போம். நாடாளுமன்றத் தேர்தல்ல அவங்களுக்கு அப்படிலாம் விட்டுக் கொடுக்க முடியாது. அவங்களுக்கு 2 சீட். இருந்தா அவங்க கூட்டணில இருக்கட்டும். இல்லைனே அவங்க தனியாவே போய் பார்த்துக்கட்டும். அவங்களை வைச்சு நாம எந்தவொரு ஆதாயமும் வர வேணாம். அப்படியெல்லாம் நம்மளை மிரட்டிலாம் எதுவும் பண்ண முடியாது என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் கருத்தாக இருக்கிறது. எந்த ஆட்கள் மூலமாக அண்ணாமலை செய்தி அனுப்பினாரோ, அதே ஆட்கள் வழியாக இந்தப் பதிலையும் எடப்பாடி பாஸ் செய்துவிட்டாராம்.
இந்த புகைச்சலுக்கு இடையில்தான் ஓ.பி.எஸ் நடத்தும் போட்டி பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதில், பி.ஜே.பி தரப்பு குறிப்பா அண்ணாமலை தரப்பு ஆர்வம் காட்டு வருகிறார்கள். ஆனால், எதற்கும் அசராமல் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள். அதனால், வரும் தேர்தலில் 2 சீட்கள் என்பது கூடுதலாக 2 இடங்கள் சேர்ந்து நான்கு என்ற அதிகபட்ச எண்ணிக்கையைத் தொடலாம். பி.ஜே.பிக்கு அதிகபட்சம் 4 அல்லது குறைந்தபட்சம் 2 என்பதைத்தான் எடப்பாடி முடிவு செய்து வைத்திருக்கிறாராம். ஐந்து இடங்கள் கொடுப்பதற்குக் கூட வாய்ப்பில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இந்த பேரத்துக்கு ஒத்துவந்தால் மட்டுமே அந்தக் கூட்டணி நீடிக்கும். இல்லையென்றால் எதற்கும் தயார் என்கிற மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறாராம்.
இந்தக் கூட்டணி பஞ்சாயத்து, புது டிமாண்ட் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க. அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.