விஜய் கட்சிக்கொடியையும் பாட்டையும் வைச்சு இவங்க பண்ற அலப்பறை இருக்கே… மனசாட்சியே இல்லையாடா… பைபிள், ஜாதகம், ஸ்பெயின் நாடு, ஃபெவிகால் டப்பா எல்லாத்தையும் தூக்கிட்டு வந்துருக்கீங்க? எவ்வளவு ட்ரோல் வந்தாலும் மறுக்க முடியாத உண்மைகள்னு சிலது இருக்கு. அதுவும் என்னானு கடைசில பார்ப்போம். வெயிட் கரோ!
1) தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடி – ஒரு விவிலியப் பார்வை.
புனிதப் போர் காலகட்டத்தில் இரட்சிப்புக் குழுவின் கொடியில் சிவப்பும் மஞ்சளுமே இடம்பெற்றிருந்தது. இதில் சிவப்பு நிறம் இயேசுவின் குருதியையும் மஞ்சள் நிறம் பரிசுத்த ஆன்மாவையும் குறிக்கிறது.
இக்கொடியில் 28 நட்சத்திரங்கள் உள்ளன. விவிலியத்தில் 28 என்பது முக்கியமான எண். பழைய ஏற்பாட்டை எழுதியவர்கள் 28 பேர். பைபிளில் ‘அல்லேலூயா’ எனும் சொல் 28 முறை வருகிறது. இயேசுவைப் பாவங்களை நீக்கும் ஆட்டுக்குட்டியாக 28 முறை குறிப்பிடுகிறார்கள்.
இக்கொடியிலுள்ள 28 நட்சத்திரங்களுள் ஐந்து மட்டும் ஒளிர்கின்றன. The book of psalms ஐந்து பாகங்களாகத்தான் பிரிக்கப்பட்டுள்ளது. ஐந்து என்பது பிதாவின் கருணையையும் ஆணையையும் குறிப்பதாகும்.

விவிலியத்தைப் பொறுத்தவரை யானை என்பது அதிகாரத்தின், ஆட்சியின் குறியீடு.
இதெல்லாம் இணைந்து தமிழகத்தைக் காத்து வாகை சூடுவதே கட்சியின் மைய நோக்கம்.
கொய்யால என்னம்மா கூவியிருக்கான் பாருங்க. நமது மீட்பர் – விஜய் அண்ணன்தான்.
2) தா.வெ.க: (22.08.2024) கொடி அறிமுகம் – ஜாதகம்
பூசத்தில் பிறந்த விஜய் அவர்கள் அவரின் திரிஜென்ம தாரை நாளான உத்திரட்டாதியில், அவரின் பாக்கியாதிபனான குருவின் ஆதிக்கம் நிறைந்த வியாழக்கிழமையில் லாபாதிபனான சுக்கிரன் ஹோரையில்….. செவ்வாய்(சிவப்பு) + குரு(மஞ்சள்) + சனி (வாகைமலர்) + புதன்( ரேவதி – இரண்டு யானை) ஆதிக்க கொடியை அறிமுகம் செய்திருக்கிறார்…
இது அவரின் அரசியலுக்கு அதிக வலு சேர்க்கும் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தும்….
3) கொடி ரெஃபரன்ஸ்
ஃபெவிகால் டப்பா பார்த்துருக்கீங்களா? அங்க இருந்துதான் யானையை எடுத்துருக்காங்க. பாருங்கனு சிங்க முத்து காமிக்கிற மாதிரி போஸ்ட், ஸ்பெயின் நாட்டு கொடிய பார்த்துருக்கீங்களா… அதுதான் ரெஃபரன்ஸ். விஜய்க்கும் ஸ்பெயினுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குனு போஸ்ட், (சும்மா கூகுள்ல போய் ஸ்பெயின் கொடினு போட்டா விஜய் கொடி வருதுடா), கேரளா போக்குவரத்து துறையோட லோகோ பார்த்துருக்கீங்க… போய் பாருங்க… ஷாக் ஆயிடுவீங்க. ரெண்டு யானை அப்படி மாஸா நிக்கும். இதெல்லாம்விட அல்டிமேட். இனிமேல் எங்களை மின்சார கனெக்ஷன் உள்ள உயிரினத்தின் பெயரை சொல்லி கூப்பிடக்கூடாது. யானை அப்டினுதான் கூப்பிடணும் ஓகேவானு வீராப்பா செந்தில் நிக்கிற போஸ்ட்லாம் ஆல் டைம் பெஸ்ட்டு. கீபோர்டுல அந்தக் கலர் கொடியை வைச்சு, இனிமே அண்ணனின் இதயத்தில் குடியிருப்பவர்கள் இதைதான் அனுப்புவாங்கனு எமோஜி ரெஃபரன்ஸ். எப்படிடா யோசிக்கிறீங்க?

4) பகுஜன் சமாஜ் பஞ்சாயத்து
தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் யானை. அந்த சின்னத்தை படத்தை த.வெ.க கொடியில் பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது. அதுனால, கொடில இருந்து சின்னத்தை நீக்கனும்னு கேஸ் போடப்போற மாதிரி சொல்லியிருக்காங்க. ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே எண்ட் கார்டு போட்டா எப்படியா? கொஞ்சம் கேப் விடலாம்ல! – அப்படினு நான் சொல்லல, ஃபேன்ஸ் பேசிக்கிறாங்க.
5) பாட்டு ரொம்பவே நல்லாருக்கு. எங்கேயும் பாஸிட்டிவ் வைப்ஸ்தான்.
விவேக் வரிகள்ல தமன் இசையமைச்சிருக்குறதா தகவல்கள் சொல்லுது. சினிமா பாட்டுக்கு இணையா இருக்கு. அண்ணன் பாட்டு அல்டிமேட்டுனு மீண்டும் நிரூபிச்சிருக்காரு. ஆனால், ஒரு கூட்டம் எப்பவுமே எங்க கட்சிப்பாடல் – நெஞ்சிக்குள்ள குடி இருக்கும் … எங்க சனம் வெறித்தனம்… ! ஒன்னா உசுரா இருப்போம் ... வெறித்தனம் ! வெறித்தனம் ! .புள்ளிங்க இருக்காங்க வேற என்ன வோனும்தான்னு சொல்றாங்க. இதைப் பத்தி தொடர்ந்து விவாதிப்போம். விசில் போடுங்க.
ஒரு புறாவுக்கு போரான்ற மாதிரி, ஒரு கட்சியக்கொடியை அறிமுகப்படுத்துனதுக்கு இவ்வளவா? எப்பவுமே கொள்கைகள், நடவடிக்கைகள் இதெல்லாம் வைச்சுதான் கட்சிகளை செய்வாங்க. ஆனால், சாதாரண கொடி, பாட்டுக்கு இவ்வளவு அக்கப்போர் ஆகாதுடா. இன்னும் என்னலாம் வரப்போகுதோ… இலுமினாட்டி கேங்க் வேற இருக்கு.
எல்லாத்தையும் தாண்டி விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சப்போவும் கட்சி பெயர் சரியில்லை, கொடில கலர் நல்லால்லனு ஏகப்பட்ட ட்ரோல்ஸ் ஓடிச்சு. அதேதான் விஜய்க்கும் இப்போ நடக்குது. ஆனால், விஜய் கொடுத்த பேச்சு ரொம்ப நிதானமா இருந்துச்சு. கட்சிக்கொடிக்கு பின்னாடி ஒரு வரலாறு இருக்கு, அதை கொள்கைகளோட சொல்றேன்னு சொன்னதுலாம் அவர் எவ்வளவு பேலன்ஸா இருக்குறாருன்றதைக் காமிக்குது. என்ன நடக்குதுனு வெயிட் பண்ணி பார்ப்போம்.
Also Read – தவெக கொடி யானைக்கு சிக்கல்?… விலங்குகளை சின்னங்களாக வைத்திருக்கும் கட்சிகள்!
Simplywall I really like reading through a post that can make men and women think. Also, thank you for allowing me to comment!
Tech to Force I’m often to blogging and i really appreciate your content. The article has actually peaks my interest. I’m going to bookmark your web site and maintain checking for brand spanking new information.
أنابيب ABS في العراق تعد شركة إيليت بايب في العراق من الرواد في إنتاج أنابيب الـ ABS، التي تُقدّر لقوتها وصلابتها ومقاومتها للصدمات والمواد الكيميائية. تم تصنيع أنابيب الـ ABS لدينا وفقًا لأعلى المعايير، مما يضمن موثوقية وأداءً طويل الأمد في تطبيقات متنوعة. باعتبارها واحدة من أفضل وأكثر شركات تصنيع الأنابيب موثوقية في العراق، تلتزم شركة إيليت بايب بتقديم منتجات تلبي احتياجات عملائنا. لمزيد من المعلومات المفصلة حول أنابيب الـ ABS الخاصة بنا، تفضل بزيارة elitepipeiraq.com.
Lois Sasson I like the efforts you have put in this, regards for all the great content.
Isla Moon I like the efforts you have put in this, regards for all the great content.
Buen contenido, complementa bastante la información que leí recientemente en otro artículo sobre el mismo tema.
Mat6tube I like the beneficial details you offer in your content
Znáte nějaké metody, které by pomohly omezit krádeže obsahu? Rozhodně bych ocenil
2週間で世界各地から100万人以上が参加した世界最大のバーチャルイベントです。現行の制度では、負担上限額が医療保険の高額療養費制度と一致していないため、同一の医療・先輩の侮辱されたといふことは、第一口惜(くや)しかつた。自然(おのづ)と外部(そと)に表れる苦悶の情は、頬の色の若々しさに交つて、一層その男らしい容貌(おもばせ)を沈欝(ちんうつ)にして見せたのである。特別:個人設定で検索オプションを設定したり、外部検索ツールを使用してより高度な検索を行うこともできます。