உ.பி அட்ராசிட்டீஸ் | இப்போலாம் ஃப்ரெண்ட்ஸ் வடிவேலு காமெடி பார்க்குறப்போலாம் ஸ்டாலின் ஞாபகம்தான் வருது. ஒரு கோடி ரூபா கான்ட்ராக்டை இந்த அப்பரசண்டிகளை வச்சிக்கிட்டு நடத்துறதுக்குள்ள பெரும் பஞ்சாயத்துகளை சந்திக்குறாரு. இங்கிட்டு ஒருத்தன் குதிக்குறான், அங்கிட்டு ஒருத்தன் உடைக்குறான்னு எங்கிட்டாவது எவனாவது எழவைக் கூட்டிட்டே இருக்காய்ங்க. சமீபத்துல இந்த பிளாக்ஷீப் பஞ்சாயத்து.
அண்ணா அறிவாலயத்துல இருந்து செயல்படும் பிளாக்ஷிப் டிவி சித்திரம் அலைவரிசைல வந்துக்கிட்டு இருக்கு. இதுல A for அரசியல்ங்குற ஷோல பா.ஜ.கவோட மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ் பி செல்வத்தை பேச வச்சிருக்காங்க. இந்த சம்பவம்தான் தி.மு.க ஆட்களை கொந்தளிக்க வச்சிருக்கு. பிளாக் ஷீப்ல தி.மு.க இன்வஸ்ட் பண்ணப்போறாங்கனு நியூஸ் வந்தப்போவே சோசியல் மீடியால ஆக்டிவா இருக்குற தி.மு.க ஆட்கள் கொஞ்சம் பதட்டமானாங்க. ஏன்னா ஒரு காலத்துல தி.மு.கவையும் ஸ்டாலினையும் பிளாக்ஷீப் ஸ்மைல் வெப் ரேடியோனு இருந்த காலத்துலயே வச்சி செஞ்ச ஃப்ளாஷ்பேக்லாம் இருக்கு. இன்னைக்கு கலைஞர் டிவி குடும்பத்துல இருந்து ஒரு டிவியை இவங்களுக்கு கொடுத்திருக்காங்க. நீங்க தி.மு.க சப்போர்ட் பண்ணலைனாலும் பரவாயில்லை. ஏன்யா எதிர் முகாம் ஆட்களை விடுறீங்கனு உடன்பிறப்புகள் டென்சன் ஆகுறாங்க. அதுலயும் அந்த வினோஜ் பேசுனதுல இருந்து இது தமிழ்நாடு கிடையாது, தமிழகம். இது திராவிட பூமி கிடையாது, ஆன்மிக பூமி அப்படினு புரிஞ்சதுங்கனு ஒரு மாணவர் பேசுன வீடியோவும் வைரல் ஆகுது. தி.மு.கவோட அரசியல் நிலைப்பாடுக்கு அப்படியே ஆப்போசிட்டான ஒரு கருத்தை பேசவிட்ருக்காங்கனா செம்ம தில்லுப்பா உங்களுக்கு.
இந்த மாதிரி சம்பவம் இது முதல் முறை கிடையாது. போன மாசம்கூட ஒரு சம்பவம் நடந்தது. ஒரு பக்கம் கட்சி ஆட்கள் பெண் உரிமை, சமத்துவம், சமூகநீதினு மேடைக்கு மேடை முழங்கிட்டு இருந்தா இன்னொரு பக்கம் கலைஞர் டிவி பகாசுரன் படத்தை வாங்கிருக்கோம் ஃப்ரெண்ட்ஸ்னு தூக்கிட்டு வந்தாங்க. பெண்கள் படிப்புக்கு கலைஞர் எவ்ளோ விஷயம் பண்ணிருக்கார். வேலைக்கு போகணும்னு என்னெல்லாம் திட்டம் கொண்டு வந்திருக்கு தி.மு.க. சமீபத்துல பஸ்ல ஃப்ரீ டிக்கெட்னு சொன்னதும் எத்தனை பெண்கள் சந்தோசப்பட்டாங்க. கொள்கை ரீதியா இதெல்லாம் பண்ணிட்டு பெண்கள் படிச்சா கெட்டு போயிடுவாங்க, சிட்டில வேலை பார்த்தா கெட்டு போயிடுவாங்கனு ஒருத்தர் படம் எடுத்தா அதை வாங்கி ரிலீஸ் பண்றீங்கனு ஏகத்துக்கும் மன உளைச்சலுக்கு ஆளானாங்க உடன்பிறப்புகள்.
கலைஞர் டிவியாச்சும் இப்போதான் அடிவாங்குது. சன் டிவிலாம் ஆரம்பிச்சதுல இருந்து அடிவாங்கிட்டு இருக்கு. என்னதான் நடுநிலை சேனல்னு காமிச்சுக்கிட்டாலும் மூட நம்பிக்கைகளை விதைக்குற மாதிரி சீரியலாச்சும் போடாதீங்கப்பானு உ.பிஸ் எவ்வளவோ சொல்லிப்பார்த்து டயர்டாகி இவன் நம்மூட்டு சேனலே கிடையாதுடானு விட்டாங்க. காலைலயான சுப்ரபாதம் போட்டு ஆரம்பிக்குறது, ராமாயணம், விநாயகர்னு பக்தி சீரியல் போடுறது, இருக்குற எல்லா பிற்போக்குத்தனங்களும் வர்ற மாதிரியான சீரியல்கள்னு முழுக்க முழுக்க தி.மு.க கொள்கைக்கு நேரெதிரான சேனலாதான் சன் டிவி இருக்கு. சமீபத்துல ஜீ டிவில சின்னப் பசங்க பெரியார் கெட்டப் போட்டு பண்ண நிகழ்ச்சி செம்ம வைரல் ஆச்சு. முதல்வரே கூப்பிட்டு பாராட்டுனதெல்லாம் நடந்தது. இதெல்லாம் சன் டிவி பண்ணிருக்கணும்னு அப்பவே திட்டிட்டு இருந்தாங்க.
Also Read -பேரைச் சொன்னாலே சும்மா கெத்துதானே… எமோஷனல் `புல்லட்’ ஸ்டோரீஸ்!
கலைஞர் டிவி, சன் டிவிலாம் இப்படி பண்ணிட்டு இருக்க நேனு மட்டும் என்ன இழிச்சவாயலுவானு தினகரனும் இந்த க்ளப்ல ஜாயின் பண்ணிருக்கு. சமீபத்துல தினகரன் வாங்குன கட்சி ஆட்கள்லாம் ஷாக் ஆகுற மாதிரி ஒரு மேட்டர் வந்தது. உத்திரப்பிரதேசம் : எழுச்சி இந்தியாவின் வழிகாட்டி, வளர்ச்சியின் புதிய அத்தியாயம்னு ரெண்டு பக்கத்துக்கு யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்து ஒரு நியூஸ். அரசு கொடுத்த விளம்பரம் அது. திராவிட மாடல், திராவிட மாடல்னு இப்போதான் அந்த பேரை ரெஜிஸ்டர் பண்ணிட்டு இருக்காரு ஸ்டாலின், இந்த நேரத்துல உ.பி மாடல்னு நீங்களே கிளப்பிவிடுறீங்களே நியாயமாரேனு அறிவாலயம் சைடு ஒரே புலம்பல் குரல்தான்.
இன்னும் மிச்சம் இருக்குறது முரசொலி மட்டும்தான். அதையாச்சும் மிச்சம் வைங்கடா அப்ரசண்டிகளானுதான் ஸ்டாலின் மைண்ட் வாய்ஸா இருக்கும்னு நினைக்கிறேன். ஏங்க இப்படி பண்றீங்கனு காரணம் கேட்டா கட்சி வேற, சேனல் வேற.. கொள்கை வேற பிசினஸ் வேறனு சொல்வாங்க. மேல இருக்குறவங்க கடைபிடிக்குற கொள்கை கீழே சேனல்ல இருக்குற நிர்வாக ஆட்களுக்கு எப்படி தெரியாம நடந்த எரர்னு சொல்வாங்க. அதுசரி அமைச்சர்களுக்கே கொள்கை என்னானு தெரியாம வாயைவிட்டு மாட்டிக்குறாங்க. ஆனா எத்தனை காரணங்கள் சொன்னாலும் இதனால கடுப்பாகப் போறது என்னவோ உ.பி-க்கள் என்றழைக்கப்படுகிற கட்சித் தொண்டர்கள்தான். அது இவங்களுக்குப் புரிஞ்சா சரி.