ராம ராஜ்ஜியம், துப்பாக்கி, ரப்பர் ஸ்டாம்ப், ரம்மி.. ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சைகள்!

ராம ராஜ்ஜியம் அமைப்போம், புதிய கல்வி கொள்கைலாம் பாரதியார் கனவு கண்ட இந்தியாவை நோக்கி கொண்டு செல்லும் புரட்சிகரமான திட்டம், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு அவசர தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, இந்திய அரசியல் அமைப்பு திட்டம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சனாதனத்துல சொல்லப்பட்டது, ஆளுநர்னா வெறும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லைனு எக்கச்சக்கமான அரிய கருத்துகளை சொல்லி அப்போப்போ, ஏய், இன்னும் போகலையா நீனு வாங்கி கட்டிக்கிற ஆள்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவரோட சர்ச்சைக் கருத்துகளைதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டால தமிழகத்துல மட்டும் சுமார் 30 பேர் தற்கொலை செய்து கொண்டாதாக செய்திகள் வெளியாகியிருக்கு. இதனால, எதிர்கட்சிகள்ல இருந்து சமூக ஆர்வலர்கள் வரைக்கும் எல்லாருமே இந்த விளையாட்டுக்கு தடை கொண்டு வரணும்னு தொடர்ந்து சொல்லிட்டு இருந்தாங்க. ஏற்கெனவே, கடந்த 2020-ம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு எதிராக அவசர தடை சட்டம் கொண்டு வரப்பட்டுச்சு. 2021-ம் ஆண்டு சட்டப்பேரவையிலும் இயற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிராக ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தாங்க. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த அவசர சட்டம் செல்லாதுனு தீர்ப்பு கொடுத்தாங்க. இதற்கு பிறகும் ஆன்லைன் விளையாட்டுக்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்துட்டே இருந்துச்சு. இந்த நிலைல, தமிழக அரசு மீண்டும் அவசர தடை சட்டம் கொண்டு வந்தது. சட்டப் பேரவையில் இதுதொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அதனை அனுப்பி வைத்தது. ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல், தடை தொடர்பான விளக்கத்தைக் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். தமிழக அரசும் விளக்கம் கொடுத்தாங்க. இதனிடையில் சங்கரன்கோவில் பகுதியில் வடமாநில பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு அனுப்பிய மசோதாவும் காலாவதியானது.

ஆளுநர் ஆர்.என்.ரவி எதுக்கு இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துறாரு? தமிழகத்தில் ரம்மி தொடர்பாக நிகழும் தற்கொலைகளுக்கு அப்போ யார் காரணம்னு மக்கள்தான் முடிவு பண்ணனும்னு அமைச்சர்கள் அவர்மேல கடுமையான விமர்சனங்களை வைச்சிட்டு வறாங்க. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “ரம்மி தடை சட்டம் தொடர்பா ஆளுநருக்கு விரிவாகவே தகவல்களை தெரிவிச்சிருக்கோம். உலக சுகாதார மையம் ரம்மி விளையாட்டு போன்ற ஆன்லைன் சூதாட்டங்கள் நோய்னு சொல்றாங்க. அதை ஒழிக்கதான் நாங்க பாடுபடுறோம். ஆளுநர் ஏன் அதுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டுறாருனு அவருக்கு மட்டும் தான் தெரியும்”னு சொல்லியிருந்தாங்க. அமைச்சர்கள் மட்டுமில்லாமல், டி.டி.வி தினகரன், அன்புமணி, சமூக ஆர்வலர்களும் அவருக்கு எதிராக பல்வேறு கருத்துகளை தெரிவிச்சுட்டு இருக்காங்க. இன்னைக்கு மிகப்பெரிய சர்ச்சையா இருக்குறது ஆர்.என்.ரவியோட இந்த செயல்தான். இதுக்கு முன்னாடி சனாதன தர்மம் பத்தி அவர் பேசுன கருத்துகள் எல்லாமே சர்ச்சையைக் கிளப்பியவைதான். சென்னைல சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் நடந்த விழால பேசும்போது, “பாரதம் என்பதே சனாதன தர்மத்தால் உருவாக்கப்பட்டதுதான். மரத்தில் உள்ள இலைகள், கிளைகள் போல நமது செயல்பாடுகள், கொள்கைகள், எண்ணங்கள் மாறுபடலாம். வேற்றுமையில் ஒற்றுமை என்பதைதான் சனாதன தர்மம் கூறுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டமானது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது”னு அரிய கருத்து ஒன்றை தெரிவிச்சிருந்தாரு.

சென்னை மயிலாப்பூரில் ராமகிருஷ்ண மடத்தின் நூற்றாண்டு விழாவில் சனாதன தர்மம் பத்து பேசும்போது, “சனாதன தர்மத்துடன் மதத்தை ஒப்பிடக் கூடாது. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு. ஒரு கடவுளை மட்டும்தான் வணங்கணும்னு சொல்றது சனாதன தர்மம் இல்லை. அனைத்து கடவுள்கள் மற்றும் மதங்களுக்கு நமது நாட்டில் இடம் உள்ளது. இங்க மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர் மனுஷங்ககூட சனாதன தர்மத்தைப் பின்பற்றியிருக்காங்க”னு சொன்னாரு. இந்தக் கருத்து பலத்தை சர்ச்சைகளை அரசியல் வட்டாரங்கள், சோஷியல் மீடியால உருவாக்கிச்சு. ஆளுநர் இந்த மாதிரி கருத்துக்களை அந்த பதவியை ராஜினாமா பண்ணிட்டு தைரியமா சொல்லலாம்னு அவரை வறுத்தெடுத்தாங்க. சோஷியல் மீடியாக்கள்லயும் மிகப்பெரிய சர்ச்சையாக மாறிச்சு. கோவைல நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக ஆளுநர் ரவி பேசுனதும் பயங்கரமான சர்ச்சையை உருவாக்கிச்சு. “கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏவிடம் ஒப்படைப்பதில் நான்கு நாட்கள் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. உயர்மட்ட பயங்கரவாத சதித்திட்டத்தில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டது. பயங்கரவாதத்தில் அரசியல் வேண்டாம். பயங்கரவாதிகள் தேச விரோதிகள். அவர்களிடம் தயவு காட்டக் கூடாது. இந்த சம்பவத்தை மேலோட்டமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. சம்பவம் நடந்த சில மணி நேரங்கள்லயே தீவிரவாத தாக்குதல் என்பது தெளிவாக தெரிகிறது. கோயம்புத்தூர் தீவிரவாத தாக்குதல்களுக்கு பெயர்போன இடமாக மாறி வருகிறது” என தெரிவித்தார். ஆதாரங்கள் அழிக்கப்பட்டுச்சு, கோயம்புத்தூர் பத்தி பேசுனதுலாம் பயங்கரமான விமர்சனத்துக்கு உள்ளாகிச்சு.

திருவனந்தபுரத்துல நடந்த லோக் ஆயுக்தா தின விழால ஆர்.என்.ரவி பேசும்போது, “ஆளுநர் பதவி அமைப்பு ரொம்பவே முக்கியமானது. லோக் ஆயுக்தா போன்ற அமைப்புகளை வலுவிழக்கச் செய்யும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்படும்போது அதில் பங்காற்றுவதற்கு ஆளுநர்களோட பொறுப்பு முக்கியமானது. ஆளுநர்கள் வெறும் ரப்பர் ஸ்டாம்ப்கள் மட்டுமே இல்லை. அரசியலமைப்பு விதி 200-ன் கீழ் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க, மசோதாவைத் தடுத்து நிறுத்த, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக வைத்திருக்க ஆளுநரருக்க அதிகாரம் இருக்கு. அரசியலமைப்புக்கு இவை உட்பட்டது என உச்ச நீதிமன்றமே சொல்லியிருக்கு”னு பேசியிருந்தாரு. அப்பவும் பயங்கரமான சர்ச்சைகள் அவரோட பேச்சை சுத்தி எழுந்தது. அரசியல் பேசுவதற்கே அவருக்கு அதிகாரம் கிடையாது, உறுப்படியா எதாவது பண்ணுங்கனா எனக்கு என்ன அதிகாரம் இருக்குனு பேசிட்டு இருக்காரு, பா.ஜ.கவோட கைப்பாவையாகதான் ஆளுநர் இருக்காருனு அவர் அதிகாரம் தொடர்பாக நிறைய விவாதங்கள் எழுந்துச்சு. எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு எடுத்த முடிவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றம் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு இந்த காலம் தாழ்த்துதலையும் கருத்தில் கொண்டது என வழக்கறிஞர்கள் குறிப்பிட்டு பேசினர். அதனை அடிப்படையாக வைத்து மற்றவர்களையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது. அப்போது, அரசியல் பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சனம் செய்து பேசினர்.

புதிய கல்வி கொள்கை என்பது பாரதியாரும் பாரதிதாசனும் கனவு கண்ட புதிய இந்தியாவை உருவாக்கும் புரட்சிகரமான ஆவணம், ராம ராஜ்ஜியம் அமைப்போம், துப்பாக்கியை கையில் எடுப்போருக்கு துப்பாக்கியாலயே பதில் கொடுப்போம், பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா என்பது தீவிரவாத இயக்கம், நீட் வந்த பிறகு அரசுப்பள்ளி மாணவர்களோட மருத்துவ சேர்க்கை அதிகமாகியிருக்குனு எக்கச்சக்கமான சர்ச்சைக்குரிய கருத்துகளை ஆளுநர் ரவி தொடர்ந்து சொல்லிட்டேதான் இருக்காரு. அவர் வந்ததுல இருந்து இன்னைக்கு வரைக்கும் அவருக்கும் திமுகவுக்குமான பனிப்போர் நாளுக்குநாள் அதிகாகிட்டேதான் இருக்கு. ஆளுநருக்கு எதிராக நிறைய மீம்ஸ்களையும் பார்க்க முடிஞ்சுது. “இதுவரைக்கும் வாங்குன அடியே ஆரல. இதுக்கிடைல இந்த ஆளுநர் வேற என்னத்தையாவது சொல்லி அடி வாங்கி தறாரு. என்னப் பிரச்னை வந்தாலும் ஆளுநர்கிட்ட மனு கொடுங்க. அடேய், அவனுங்க போட்டு அடிக்கிறதே ஆளுநரைதான். சனாதனம் என்றால் என்னனு தெரியுமா? தெரியாதுனு ஆளுநர் ரவி சொல்றது, ஏய், நீ இன்னும் போகலையா”னு சும்மா பேசும்போதுலாம் அவரை மீம்ஸ் போட்டு வைச்சு செய்றாங்க. ஆளுநர் பதவில இருந்துட்டு மத்தியில் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும் மக்களுக்கு எதிராகவும் செயல்படுறாருன்றதை அழுத்தமாகவே நிறைய பேர் குற்றச்சாட்டா வைக்க தொடங்கிட்டாங்க. இதெல்லாம் எங்க போய் முடிய போகுதுனு தெரியலை.

Also Read – ஹீரோவான ஜமீன்தார் – நடிகர் சத்யராஜ் எனும் மகாநடிகன்!

காலை விடிஞ்சா கண்டன்ட் இல்லைனு யாரையும் ஃபீல் பண்ண வைக்கக்கூடாதுனு எதாவது கண்டண்ட் கொடுக்குறவருதான் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவர் பதவி விலகணும்னு தொடர்ந்து சொல்லிகிட்டேதான் இருக்காங்க. அவரோட பேச்சுகள், செயல்பாடுகள் பத்தி என்ன நினைக்கிறீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top