War Room

`வார் ரூம்’ வந்த கதை தெரியுமா… எஸ்.டி.டி என்ன சொல்லுது?

வார் ரூம்’ – பண்டைய அரசுகள் தொடங்கி இன்றைய அரசியல் கட்சிகள் வரை தவிர்க்க முடியாத டாபிக். சரி வார் ரூம்னா என்ன…. அங்க என்ன பிளான் பண்ணுவாங்க… வார் ரூம் எப்படி செயல்படும்.. வார் ரூமோட அடிப்படை என்னா… முதன்முதலா வார் ரூமோட பயன்பாடு எப்போ வந்துச்சு… அண்ணாமலை வார் ரூம் வைச்சுதான் தன்னோட அரசியல் செயல்பாடுகளை விரிவுபடுத்துறார்னு ஒரு தகவலை அவரோட கட்சிக்காரங்களே சொல்லிக்கிட்டு இருக்க இந்த நேரத்துல வார் ரூமோட எஸ்.டி.டி பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.

அண்ணாமலை - காயத்ரி ரகுராம்
அண்ணாமலை – காயத்ரி ரகுராம்

வார் ரூமோட வரலாறு எங்க இருந்து தொடங்குச்சுனு பார்த்தா… முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள்தான் நம்மோட கண்ணு முன்னாடி வந்து நிக்குது. அப்போ இங்கிலாந்து பிரதமரா இருந்த வின்ஸ்டன் சர்ச்சில்தான் முதல்முறையா அபிசீயலா ஒரு வார் ரூமை வைச்சு நடத்திட்டு இருந்திருக்கார். சரி அவரோட வார் ரூம்ல என்ன நடந்துச்சுனு தேடிப்பார்த்தா… தினமும் போர் பத்தின முக்கியமான தகவல்களை வார் ரூம்லதான் அப்டேட் பண்ணுவாங்களாம். குறிப்பா இரண்டாம் உலகப்போர் சமயத்துல தினமும் இங்கிலாந்து ஆர்மியோட ஜெனரல்ஸ் மற்றும் முக்கியமான ராணுவ அதிகாரிகள் போர் பத்தின அப்டேட்ஸை வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு வார் ரூம்லதான் கொடுப்பாங்களாம்.

போர் பத்தின அப்டேட்ஸ் மட்டுமில்லீங்க… அதை வைச்சு போரை அடுத்த கட்டத்துக்கு எப்படி கொண்டு போலாம்னும் அங்கதான் திட்டம் தீட்டுவாங்க. இன்னிக்கும் லண்டன்ல வின்ஸ்டன் சர்ச்சிலோட வார் ரூம் இருந்ததோட நினைவா ஒரு அருங்காட்சியகமே இருக்குனு சொல்றாங்க. சர்ச்சிலோட வார் ரூம் மீட்டிங் 1939ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி முதல்முறையா கூடுச்சாம். கிட்டத்தட்ட 115 முறை அந்த மீட்டிங் நடந்துருக்கதா ஒரு ரெக்கார்டும் இருக்கு. வார் ரூம் என்பது அவசர காலங்களில் உடனடி முடிவெடுக்க அதிகார மையம் கூடும் இடம். அது ஒரு மீட்டிங் ரூம் இல்லை. இன்றைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்பங்கள் வாயிலாக ஒரு விஷயத்தை ஆதி முதல் அந்தம் வரை அலசி ஆராய்ந்து விரைவாக முடிவு எடுக்கக் கூடிய இடமாக வார் ரூம் கருதப்படுகிறது.

war room
war room

வார் ரூம்ங்குறது நவீன யுகத்தில் வேறுவிதமான பயன்பாடுகளுக்குப் பயன்பட்டுச்சுனுதான் சொல்லணும். தேர்தல் நேரங்கள்ல அரசியல் கட்சிகள் வார்ரூம் அமைப்பது வழக்கம். அங்க என்ன செய்வாங்கன்னா… நம்ம கட்சியோட தேர்தல் பிரசாரம் எப்படி இருக்கணும்… எதிர்க்கட்சிகளை எந்தவிதமா எல்லாம் அட்டாக் பண்ணலாம்… ஆளுங்கட்சியா இருந்தப்ப நம்ம மக்களுக்குப் பண்ண நல்ல விஷயங்கள்னு எல்லாத்தையும் பட்டியல் போட்டு அதை விளம்பரப்படுத்துவாங்க… இப்படி அவங்களோட நடவடிக்கைகள் எல்லாத்துக்குமான மூளையா அந்த வார்ரூம்தான் இருக்கும். சரி எலெக்‌ஷன் முடிஞ்சபிறகு வார் ரூம் என்னாகும்தானே கேக்குறீங்க.. பொதுவா, முக்கியமான நேரங்கள்லதான் வார் ரூமோட பயன்பாடு அதிகமா இருக்கும். ஆனால், தேர்தல் போன்ற சூழ்நிலைகள் முடிந்தபிறகு வார் ரூம் அமைதியாக ஸ்லீப்பர் செல் போல் ஆழ்ந்த நிலைக்குப் போய்டும். மறுபடி எப்போ அப்படியான சூழ்நிலை வருதோ, அப்போ ஆக்டிவாகி மீண்டும் பழைய பன்னீர்செல்வமா பயன்பாட்டுக்கு வந்துடும் வார்ரூம். அங்கதான் எல்லா முக்கியமான முடிவுகளையும் எடுப்பாங்க.

war room
war room

அரசுகளைப் பொறுத்தவரை கேபினட் வார் ரூம்ங்குறது முக்கியமான பங்கு வகிக்கும். அரசின் முக்கியமான கொள்கை முடிவுகள், நலத்திட்டங்கள் பத்தி இங்கதான் கலந்துபேசி முடிவெடுப்பாங்க. அந்த முடிவுகள் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா இருக்கும். அதேநேரம், ஒரு முடிவு பத்தி ஆரம்பம் முதல் இறுதி செயலாக்கம் வரை எல்லாத்தையுமே பேசி வார் ரூம்ல முடிவெடுத்துடுவாங்க.. அந்த முடிவுகளை செயல்படுத்துறதுதான் மத்த துறைகளோட வேலையா இருக்கும். இதுதான் எழுதப்படாத விதி. அது மத்திய அரசாக இருந்தாலும் சரி; மாநில அரசாக இருந்தாலும் சரி, முக்கியமான காலகட்டத்தில் தேவையான சரியான முடிவுகளை எடுக்கும் அதிகாரமிக்க இடமாக வார் ரூம் இருக்கும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள்ல வார் ரூமோட அதிகாரம்ங்குறது ரொம்பவே பவர்ஃபுல்லா இருக்கும்.

Also Read – ‘வீடியோ விவகாரத்துல எதுவும் உதவி வேணுமா!?’ – காயத்ரி ரகுராம் சபரீசன் சந்திப்பில் நடந்தது என்ன?

சமீபத்துல பா.ஜ.கவுல இருந்து விலகுன காயத்ரி ரகுராம், அந்தக் கட்சியோட மாநிலத் தலைவர் அண்ணாமலை வார்ரூம் வைச்சு, தன்னோட எதிர்க்கருத்து கொண்டவர்களுக்கு எதிராக செயல்படுறதா குற்றம்சாட்டியிருந்தாங்க. அதையேதான் பல எதிர்க்கட்சிகளும் அண்ணாமலை மேல குற்றச்சாட்டா முன்வைச்சிருக்காங்க. பா.ஜ.கவோட ஐடி விங் தவிர, அண்ணாமலை தனக்கென தனியாக சென்னை அண்ணா நகர்ல ஒரு டீமை வைச்சு செயல்படுறதா சொல்றாங்க. ஒரு வார் ரூம் செட்டப்ல தனக்கு எதிராகக் கருத்துச் சொல்லும் சொந்தக் கட்சிக்காரர்களுக்கு எதிராகவே பல்வேறு கருத்துகளை இந்த டீம் பரப்புவதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அதேபோல், சோசியல் மீடியாவில் தன்னுடைய இமேஜை பாசிட்டிவாக வளர்த்துக் கொள்ளவும் அண்ணாமலை இந்த வார்ரூம் செட்டப்பைப் பயன்படுத்தி வருவதாகவும் சொல்கிறார்கள். எலெக்‌ஷன் இல்லாத சமயத்திலும் இப்படி ஒரு வார்ரூம் செட்டப் வைத்து அண்ணாமலை செயல்பட வேண்டிய அவசியம் என்ன போன்ற கேள்விகளை எதிர்க்கட்சிகள் வைத்து வருகின்றன. ஆனால், சோசியல் மீடியா ஆக்டிவாக இருக்கும் இன்றைய சூழலில் வார்ரூம் செட்டப் என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கு இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது என்பதுதான் அரசியல் விமர்சகர்களோட கருத்தாக இருக்கிறது.

வார்ரூம் செட்டப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க… அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top