குஜராத் மாடல்

குஜராத் மாடல்.. இந்தியாவுக்கே ரோல் மாடல்.. உண்மையா? – ரோஸ்ட்!

இந்தியால எந்தப் பகுதியில தேர்தல் வந்தாலும் பா.ஜ.க தலைவர்கள் உச்சரிக்கும் தாரக மந்திரம், குஜராத் மாடல் ஹே தான். ஆனால், அது என்ன மாடல்னு குஜராத்துக்கே தெரியாதுன்றதுதான் எல்லாருக்கும் தெரிந்த உண்மை. இன்னும் சொல்லப்போனால், 2001-2002 தொடங்கி 2013 வரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி தேசிய அரசியலுக்கு வந்தபோதும், `நாட்டையே நான் குஜராத் மாதிரி வளர்ச்சியடையச் செய்வேன்’னு சொல்லிதான் பிரசாரத்தையே ஸ்டார்ட் பண்ணாரு. சொன்ன சொல் தவறமாட்டான் கோட்டைச்சாமி, தலை கீழாகத்தான் குதிப்பேன்னு, குஜராத் மாடல் மாதிரி இந்தியாவையும் மாத்திட்டாரு. சரி, உண்மைல குஜராத் மாடல்னா என்ன? குஜராத் மாடலுன்ற பெயர்ல பா.ஜ.க சொல்ற விஷயங்கள் எல்லாம் உண்மையா? அலசி.. ஆராய்ந்து.. ரோஸ்ட் பண்ணிடுவோமா?

குஜராத் மாடல்ல பெருசா ஹைலைட் பண்ணி சொல்லப்படுற விஷயம், கரப்ஷன் ஃப்ரி. அதாவது இலவசமா ஊழல் பண்ணிக்கலாம்ன்றதுதான். பா.ஜ.க ஆட்சில எக்ஸாக்ட் மீனிங் எடுத்துகிட்டா பிரச்னையே இல்லை அப்டின்றதுக்கு இது உதாரணம். சரி, ஊழலே இல்லை, அப்படினா என்னனே தெரியாதுனுதான் சொல்லிட்டு இருக்காங்க. ஆனால், அந்த மாநில அரசு நிர்வாகத்துல ஊழல்ங்குறது எவ்வளவு ஆழமா புதைந்து கிடக்குது அப்டின்றதுக்கு, ரெனவேஷன் பண்ணி திறந்து வைக்கப்பட்ட மோர்பி பாலம் 60 பேரை காவு வாங்குன சம்பவத்தை சொல்லலாம். குஜராத் மாடல்னு வாய் நிறைய சொல்றாங்களே என்னனு பார்த்தா, முக்கியமான 3 விஷயங்களை அடிப்படையா வைச்சு கட்டமைக்கப்பட்டது. கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுத்தல், கார்ப்பரேட் முதலீடுகளை ஈர்க்கத் தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், அந்த முதலீடுகளை அதிகரிக்க ஊக்கத்தொகை மற்றும் மானியங்களை வழங்குதல். இந்த அடிப்படைல பார்த்தீங்கன்னா சாலை வசதி, ஏர்போர்ட்டுகள் அப்புறம் கரண்ட் இந்த மூணு டிபார்ட்மெண்டுகளுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுச்சு. இதனால குஜராத் வளர்ந்துச்சுங்குறது உண்மைதான்.

அப்போ, குஜராத் மாடலுன்றதே கார்ப்பரேட் காவல்தானா? பிஸினஸ், உள்கட்டமைப்பு ஒரு பக்கம் பெரிய அளவுல வளர்ச்சியடைஞ்சது. இந்தியாவுலேயே அதிகமான கண்டெய்னர்ஸை ஹேண்டில் பண்ண துறைமுகம் குஜராத்லதான் இருக்கு. ஜிடிபி வளர்ச்சி பார்த்தாலும் குஜராத் முன்னாடிதான் நிக்குது. எல்லாரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் உண்மையான வளர்ச்சினு சொல்வாங்க. வெஸ்ட் பெங்கால்ல டாடா தொழிற்சாலை பெரிய பிரச்னைகளைச் சந்திச்சுட்டு இருந்தப்போ மூணே வார்த்தைல ரத்தன் டாடாவுக்கு மோடி ஒரு மெசேஜ் தட்டியிருந்தார். அது என்ன தெரியுமா? `Welcome to Gujarat’ – இதான் மோடியோட மெசேஜா இருந்துச்சு. அதுக்கப்புறம் குஜராத்ல டாடா தொழிற்சாலை அமைய, அரசாங்கமே கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய் அளவுக்கு மானியம் கொடுத்துச்சு. ஒரு வார்த்தை ஒரு லட்சம் கேள்வி பட்ருப்போம். மூணு வார்த்தை முப்பதாயிரம் கோடி கேள்வி பட்ருக்கீங்க? குஜராத மாடல் ஹேல இருக்கு. ஒரு ஏக்கர் ரூ.1 தொடங்கி அங்க தொழிற்சாலைக்கு நிலம் ஒதுக்கப்பட்டுச்சு. மானியத்தைப் பொறுத்தவரை நீங்க எந்த அளவுக்கு அதிகமா இன்வெஸ்ட் பண்றீங்களோ, அந்த அளவுக்கு டிஸ்கவுண்டும் இருக்கும். இதேமாதிரி கிட்டத்தட்ட 20 வருஷங்களா குஜராத் கவர்மெண்ட் முதலீடுகளை ஈர்க்குறதுக்காக வைக்குற ‘வைப்ரண்ட் குஜராத் சம்மிட்’ பத்தின டீடெய்ல்ஸ், அவங்க சொல்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்னு நிறைய விஷயங்களையும் டேட்டா மூலமா பல எக்ஸ்பர்ட்ஸ் கேள்வி கேட்டிருக்காங்க. கேள்விக்குலாம் நம்ம குஜராத் மாடல்கள் வாயத் திறக்கலையே.. பாயிண்டு வரட்டும், பாயிண்டு வரட்டும்னு இன்னும் வெயிட் பண்றாங்க.

“வளர்ச்சிக்கான வரையறையாக எதை சொல்லுவிங்க? தமிழ்நாட்டின் தனிநபர் வருவாய் குஜராத்தை விட 10,000-ல் இருந்து 15,000 குறைவுதான். நிதி மேலாண்மையில் குஜராத் சிறப்பாக செயல்படுகிறது. மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் 100% பள்ளிக்கு செல்கிறார்கள். பள்ளிக்கு போகாத 15 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளே தமிழ்நாட்டில் இல்லை. அதேவேளையில், குஜராத்தில் 15 முதல் 20% பெண்கள் பள்ளிக்கூடமே போவதில்லை. இது எந்த மாதிரி வளர்ச்சி? அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் ஆயிரம் பேருக்கு 4 டாக்டர்கள் இருக்காங்க. அதே குஜராத்தில் ஆயிரம் பேருக்கு ஒரே ஒருடாக்டர்தான் இருக்கிறார். இதில் எந்த சமூக நிலையை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்? GDP மட்டுமே வளர்ச்சியை நிர்ணயிக்காது’’. திராவிட மாடல் Vs குஜராத் மாடல்ங்குற விவாதம் 2022-ன் ஆரம்பத்துல எழுந்தப்போ தமிழ்நாடு நிதியமைச்சரா இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொன்னது இது. அந்நிய நேரடி முதலீடு (FDI) விஷயத்தை எடுத்துக்கிட்டீங்கன்னா, `அதிகப்படியான அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் குஜராத்தான் இந்தியாவோட Growth Engine’னு பிரதமர் மோடி குறிப்பிட்டிருப்பார். ஆனா, களநிலவரமே வேற. 2000 – 2015 வரையில் இந்தியா ஈர்த்த அந்நிய நேரடி முதலீட்டு விவரங்களா ஆர்பிஐ வெளியிட்டிருந்த டேட்டாவை எடுத்துப் பார்த்தா, மகாராஷ்டிரா, ஹரியானா, கர்நாடகா, தமிழ்நாட்டுக்கு அடுத்து 5-வது இடத்துலதான் இருந்துச்சு குஜராத். இதுல கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் இந்த 15 வருஷங்கள்ல 13 வருஷங்கள் குஜராத்தோட முதலமைச்சரா இருந்தவர் மோடி. இதெல்லாம் கேட்கும் போது நமக்கு மோடிகிட்ட கேட்கணும்னு தோணுறது ஒரே கேள்விதான்.. என்ன சிம்ரன் இதெல்லாம்?

வர்த்தகத்தைத் தவிர்த்துப் பார்த்தீங்கன்னா, பள்ளிக்கல்வி, உயர்கல்வினு எஜூகேஷன் சைடு, சுகாதாரத்துறை சைடு பார்த்தா, வீக்கான அரசு மருத்துவமனைகள், குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகம்னு எக்கச்சக்க குளறுபடிகள் கொண்ட மாநிலம் குஜராத். கொரோனா டைம்ல அதிகப்படியான இறப்புகள் அகமதாபாத்ல நிகழ்ந்ததும், நீங்க க்யூர் ஆகிட்டீங்கன்னு அகமதாபாத் சிவில் ஹாஸ்பிட்டல்ல இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட கணபதி மக்வானா பஸ் ஸ்டாப்ல பிணமா மீட்கப்பட்டது செய்திகள்ல வெளியாச்சு. ஆகஸ்ட் 2018 கணக்குப்படி குஜராத்ல இருக்க அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களோட எண்ணிக்கை 1,474. பின்தங்கிய மாநிலமான பீகார்லயே இதை விட அதிகமா 1,899 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கு. இதுல என் வீட்டுல குண்டு பல்பானு ஷாக் வேற!

Also Read – `உங்ககூட பேசுனது மகிழ்ச்சியா இல்ல…’ ஜெயலலிதா பிரஸ்மீட் அலப்பறைகள்!

1960கள்ல தனி மாநிலமா மாறுன காலத்துல இருந்தே பிஸினஸ் வைஸ் பார்த்தா குஜராத்தோட வளர்ச்சிங்குறது டிஃபரண்டாவேதான் இருந்தது. காரணம், அங்க இருக்க பிஸினஸ் கம்யூனிட்டீஸ். அமெரிக்க மோட்டல் பிஸினஸில் கில்லி படேல் சமுதாயத்தினர்தான். சௌத் ஆப்பிரிக்காவுல மேமன்ஸ், ஆப்பிரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதிகள்ல இருக்க தான்சானியா – கென்யாவோட பொருளாதாரத்தில் அங்கே கோலோச்சும் குஜராத்திகள் முக்கியமான பங்கு வகிக்கிறாங்க. அதேமாதிரி, இஸ்ரேலோட டைமண்ட் பிஸினஸ்ல உள்ளூர் ஹாஸிடிக் யூதர்களுக்கு மிகப்பெரிய போட்டியே குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பலன்பூரி ஜெயின் சமூகத்தினர்தான். அவ்வளவு ஏன் இந்தியாவை எடுத்துக்கிட்ட ஜவுளித் தொழிலோட மையமே சூரத்தான். கொச்சிக்குப் போனா அங்க இருக்க ஸ்பைஸ் மார்க்கெட்ல பல பெரிய கடைகளோட ஓனர்ஸும் குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்டவங்கதான். இப்படி பிஸினஸில் மிகப்பெரிய பூர்வீகம் கொண்டவங்க அவங்க. ஆனால், பா.ஜ.ககாரங்க சொல்ற மாதிரி இவங்க யாருக்குமே குஜராத் மாடல் உண்மையிலேயே உதவுச்சுனு நினைக்கிறீங்களா?

குஜராத் மாடல் எப்படிப்பட்டதுங்குறது லேட்டஸ்டா ஒரு எக்ஸாம்பிளை எடுத்துக்கலாம். கொலை வழக்கு ஒண்ணுல ஜெயில்ல இருந்த 27 வயசான சந்தன்ஜி தாக்குர் ஜாமீன் வேணும்னு கோர்ட்ல மனு போடுறார். இதை விசாரிச்ச குஜராத் ஹைகோர்ட், என்னப்பா சொல்ற உனக்குத்தான் 3 வருஷத்துக்கு முன்னாடியே பெயில் கொடுத்தாச்சுல்ல.. இன்னுமா நீ ஜெயில்ல இருக்கனு அதிர்ச்சியாகியிருக்கு. என்னடானு விசாரிச்சுப் பார்த்ததுல கொரோனா பீக்ல இருந்த டைம்ல 2020 செப்டம்பர் வாக்குல அவரோட பெயில் ஆர்டரை குஜராத் கோர்ட் ரெஜிஸ்டார், ஜெயில் நிர்வாகத்துக்கு மெயில்ல அனுப்பிருக்காங்க. இதுல முக்கியமான விஷயம் என்னான்னா, கோர்ட் சார்புல அனுப்புன மெயிலோட அட்டாச்மெண்டை அங்க இருந்த அதிகாரிகள் யாருக்கும் ஓப்பன் பண்ணவே தெரியலையாம். சரி கீழ் கோர்டுக்கும் அனுப்புனோமே நீங்க என்ன பண்ணீங்கனு கேட்டதுக்கு, அங்க இருந்தும் அதேபதில்தான். இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சியான குஜராத் ஹைகோர்ட், `இது மிகப்பெரிய Eye Opener’னே ஸ்டேட்மெண்ட் கொடுத்ததோட, பாதிக்கப்பட்டவருக்கு அரசு சார்புல ஒரு லட்ச ரூபாய் இழப்பீட்டை 14 நாட்களுக்குள்ள கொடுக்கணும்னு உத்தரவு போட்டிருக்காங்க. இப்படி குஜராத் மாடல்னு சொல்லி எல்லாரையும் ஏமாத்திட்டு திரியுறாங்க.

https://fb.watch/nviOwBAz70/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top