அன்புமணி ஆகிய நான்… மாற்றம், முன்னேற்றம், ரோஸ்ட்!

தமிழகத்தை வர்ற தேர்தலுக்கு அப்புறம் பா.ம.க ஆட்சி செய்யும்னு சொல்றது, 40 வருஷ உழைப்பு, ஜெயிச்சிட்டோம்னு கேமராவை ஆன் பண்ணி வைச்சுட்டு அழுறது, அ.தி.மு.க அமைச்சர்களை டயர் நக்கினு சொல்லிட்டு, அப்படியே பல்ட்டி அடிச்சு புகழ்ந்து தள்ளுறது, அன்பு மணி ஆகிய நான்னு பதவியேற்குறது, மைக்கை அவர்கிட்ட இருந்து பிடுங்குங்கனு பதில் சொல்லாமல் மழுப்புறது, சாதியால எவ்வளவு நல்லது இருக்குது தெரியுமானு பேசுறதுனு அன்புமணி வரலாற்று புத்தகத்துல பதிவு பண்ண நிறைய விஷயங்கள் இருக்கு. இந்த வீடியோல அவர் என்னென்ன பண்ணியிருக்கார்னு பார்க்கலாமா?

Anbumani
Anbumani

பா.ம.க அன்புமணி ராமதாஸ் முதல்வராகணும்னு சொல்லிட்டே இருக்காரு. ஆனால், என்னைக்கு அவர் கனவு நிறைவேறும்னுதான் தெரியலை. சமீபத்துல 2026-ல நாங்கதான் ஆட்சி அமைப்போம்னு சொல்லியிருக்காரு. எந்தவித கூட்டணியும் இல்லாமல் தனியாக நின்னு ஜெயிப்போம், அதை நோக்கிதான் பா.ம.க 2.0 திட்டத்தை செயல்படுத்திட்டு இருக்கோம்னு அன்புமணி மைக்கை நீட்டுற இடத்துலயெல்லாம் பதிவு பண்றாரு. எல்லாரும் ஃபோகஸ் பண்ணுங்க, கவனத்தை சிதறவிடாதீங்கனு அன்புமணி நிர்வாகிகளுக்கு ட்ரெயினிங் கொடுத்துட்டு இருக்காரு. இதுக்கு முன்னாடி 2016-லயும் இதையேதான் பண்ணாரு. மாற்றம், முன்னேற்றம், அன்புமணினு தமிழ்நாட்டுல எங்க திரும்புனாலும் இவர் போஸ்டர்தான் அந்த தேர்தல் சமயம் பார்க்க முடிஞ்சுது. அன்புமணி ஒவ்வொரு தடவையும் நான் முதல்வரானால், அடுத்து நம்ம ஆட்சிதான்னு சொல்லும்போதுலாம் அன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும் டயலாக்தான் நியாபகம் வரும். அதுக்கு முன்னாடி பா.ம.க 2.0 அப்டினா என்ன? பா.ம.க -வை சாதிக் கட்சியா பார்க்குறதை முறியடிக்கணும். மது, போதை பொருள்களை ஒழிக்கணும். இப்படியான பல விஷயங்களை அந்த 2.0-ல வைச்சிருக்காரு. அனைவருக்கும் உரிமை. அனைவருக்கும் வளர்ச்சி என்பதுதான் அடிப்படை டேக் லைனாம். எனக்கு தெரிஞ்சு, எந்த 2.0வும் சரியா வரலை. 2.0 உட்பட.

Anbumani
Anbumani

சாதியைப் பத்தி அன்புமணி பேசியதையும் பதிவு பண்ணனும். “சாதி கட்சியா பாக்குறதை முதல்ல மாத்தணும்னு சொன்ன அன்புமணி, “சாதியால அடக்குமுறை நடக்குது. அதை கண்டிக்கிறோம். அதேசமயம் அந்த சாதியால நல்ல விஷயங்களும் இருக்கு. கலாசாரம், பண்பாடு, நாகரிகம் எல்லாம் சாதியில்தான் இருக்கிறது. இதையெல்லாம் நாம் பெருமையாக பார்க்க வேண்டும். இப்படிலாம் பேசுனா, சாதியைப் பற்றி பேசுகிறவன்னு சொல்றாங்க. அதைப் பற்றி கவலைப்பட மாட்டேன். அனைத்து சாதிகளும் சமூகநீதி பெற வேண்டும் என்பதே நோக்கம். சாதியில் நம்முடைய அடையாளங்கள் இருக்கிறது. அடக்குமுறையை தவிர்த்து சாதியில் அழகான விஷயம் நிறைய இருக்கு. உணவு, உடை, பழக்கம்னு ஏகப்பட்ட நல்ல வழக்கம் சாதியில் இருக்கிறது. சாதியில் உள்ள தீமைகளை ஒழிக்க வேண்டும். நன்மைகளை சொல்ல வேண்டும்”னு பேசியிருக்காரு. சுயமரியாதையை நிலை நிறுத்தனும்னு பேசுற யாரும்ம், சாதியை தூக்கி புடிச்சு பேச மாட்டாங்க. புரிஞ்சவன் புரிஞ்சுக்கோ, புரியாதவன், புரிஞ்சவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ.

முதல்வர் வேட்பாளராக ராமதாஸ், அன்புமணியை 2016-ல அறிவிச்சாரு. அப்போ, முதல்வராக பதவியேற்பு பண்ற மாதிரி விளம்பரங்கள் வெளியாச்சு. அதுல, “அன்புமணியாகிய நான், பூரணமாக மதுவை ஒழித்து தமிழக மக்களின் நலன் காப்பேன். தமிழகத்தின் வளர்ச்சியை கெடுக்கும் ஊழலை ஒழித்து நிர்வாகத்தை சீர் படுத்துவேன். மக்களின் அடிப்படை உரிமைகளான கல்வி மற்றும் சுகாதாரத்தின் தரத்தை உயர்த்தி இலவச சேவைகளாக்குவேன். வேளாண் புரட்சி செய்வேன். ஒருவீட்டுக்கு ஒருத்தருக்கு வேலை உறுதி செய்வேன். உங்கள் ஒவ்வொருவரையும் சுயமரியாதையுடன் தன்மானத்தோட வாழ வைப்பேன். வாருங்கள் இணைவோம். புதியதோர் தமிழகம் செய்வோம்”னு வீடியோ வெளியிட்ருந்தாரு. இதெல்லாம் அந்தந்த சீசன்ல அவனவன் சாப்பிடுறதுதான, அப்புறம் என்னனு நீங்க கேக்கலாம். அவர் சொன்னதுலாம் நல்ல விஷயம்தான். ஆனால், முதல்வராகவே மாறி பதவியேற்றார் பாருங்க. அதைத்தான் தாங்கிக்க முடியலை. அவங்கவங்க பல வருஷம் கஷ்டப்பட்டு படிச்சு ஐ.பி.எஸ் பாஸ் பண்ணா, நீங்க டிசைன்லயே டி.எஸ்.பி ஆவீங்களோனு டயலாக் வரும்ல அந்த வீடியோவைப் பார்த்த பலரும் அதைத்தான் குறிப்பிட்ருந்தாங்க. அதே மாதிரிதான் இப்பவும் பா.ம.க தலைமையில் 2026-ல் ஆட்சி அமையும்னு மறுக்கா மறுக்கா அன்புமணி சொல்லிட்டு இருக்காரு. ஏங்க, பா.ம.க தலைமைல ஆட்சி அமைப்போம்னு சொல்றோம். இதுல கூட்டணி இருக்கானு கேள்வி கேட்டா, கோபமா வேற கத்துறீங்க.

Anbumani
Anbumani

அன்புமணி நிறைய இடங்கள்ல அழுது சிம்பதியை கிரியேட் பண்ண பார்க்குறாருனு விமர்சனங்கள் எழுவது உண்டு. ஏன்டா, அழுகை சாதாரண உணர்ச்சி. அதைக்கூட மனுஷன் பண்ணக்கூடாதானு கேப்பீங்க. அழலாம். கேமராவை ஆன் பண்ணி, ஆங்கிள்லாம் செட் பண்ணி வைச்சிட்டு அழும்போது, நம்பகத்தன்மை குறையுதுல. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வன்னியர் சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு செய்யப்பட்ட மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவை பெரும்பாலான தமிழக மக்கள் வரவற்று பேசினாங்க. அன்புமணி அப்போ கரெக்டா வீடியோ ஒண்ணு ரிலீஸ் பண்ணாரு. அந்த வீடியோல ஃபோன்ல, “40 வருஷ உழைப்பு, இன்னைக்குதான் நிறைவேறியிருக்கு. இந்த ஒதுக்கீடு முதல் கட்டம்தான். இன்னும் கொஞ்சம் சேர்த்து பிறகு வாங்கிக்கொள்ளலாம்”னு யார்கிட்டயோ பேசுறாரு. இதை நெட்டிசன்கள் மீம் டெம்ப்ளேட்டா போட்டு வைச்சு செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. அ.தி.மு.க-வுடன் கூட்டணி முடிவான பிறகு தேர்தல் பிரசாரங்கள்ல ராமதாஸ் பரபரப்பா இயங்கினார். தர்மபுரி, கடகத்தூர் பகுதியில பிரசாரத்தின்போது, “என்மேல இவ்வளவு அன்பு வைச்சிருக்கீங்க. உங்களுக்கு வாழ்நாள் முழுக்க நன்றிகடன் பட்ருக்கேன்”னு தேம்பி அழ ஆரம்பிச்சிட்டாரு. இப்படி தொடர்ந்து அவர் அழுற வீடியோக்கள் வைரலானதால, அனுதாப ஓட்டுகளை பெற இப்படிலாம் பண்றாருனு பேச ஆரம்பிச்சாங்க. முக்கியமான, சம்பவம் என்னனா, எட்டுவழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவிச்சுட்டு, அ.தி.மு.ககூட சேர்ந்து கூட்டணி வைச்சிட்டு பிரசாரத்துக்கு வந்துருக்கீங்கனு அவர்கிட்ட தொண்டர் ஒருத்தர் கேட்டதும் சர்ச்சையாச்சு. இப்படி, போற இடத்துலயெல்ல எல்லாம் அவரை மக்களும் தொண்டர்களும் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க.

Also Read – சன் டிவியின் அந்தக் குரல் யாருடையது தெரியுமா?!

அ.தி.மு.கவை அன்புமணி பிரஸ்மீட் ஒண்ணுல, “எடப்பாடிக்கும் பன்னீர் செல்வத்துக்கும் நிர்வாகம்னா என்ன தெரியுமா? நிதிநிலைனா என்னனு தெரியுமா? ஒண்ணுமே தெரியாது இவங்களுக்கு. ஜெயலலிதா அப்படிலா தேர்வு செய்யலை இவங்களை. ஒண்ணும் தெரியாதவங்களைதான் ஜெயலலிதா அமைச்சர்களாக தேர்வு செய்தாங்க. ஒண்ணுமே தெரியாத மண்ணு இவங்க. கையெழுத்து போடுனா, போடணும். கால்ல விழுனா, விழணும். டயர நக்குனா, நக்கணும். இப்படிதான் ஜெயலலிதா மந்திகளை வைச்சிருந்தாங்க. அப்படிப்பட்ட மந்திரிதான் தமிழ்நாட்டின் முதல் மந்திரி”னு கடுமையா விமர்சனம் பண்ணி பேசியிருந்தாரு. கூட்டணி அமைஞ்ச பிறகு அதே அன்புமணி, “நம்முடைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு நன்மை அளிக்கும் பல திட்டங்களை அறிவிச்சிருக்காரு. எளிமையான விவசாயி முதலமைச்சராக வந்திருக்காரு. நாம் எல்லோரும் சேர்ந்து அவருக்கு ஆதரவளிக்க வேண்டும். இதுதான் நம்மளோட கடமை”னு சில்லறையை சிதறவிட்டு பேசியிருப்பாரு.

இவ்வளவு கடுமையாக அதிமுகவை விமர்சனம் பண்ணிட்டு ஏன் அவங்ககூட சேர்ந்தீங்கனு பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டாங்க. அதுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுறாரு. முதல்வர் பழனிசாமி ஊழல்வாதியா? இல்லையா? ஆமா, இல்லைனு பதில் சொல்லுங்கனு கேட்டதுக்கு பதில் சொல்லாமல், பிரஸ்மீட்டை முடிச்சிட்டு எழுந்து போய்ட்டாரு. கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்கள்கிட்ட இருந்து மைக்க பிடுங்குங்க, தண்ணி கொடுங்க, அவரை கண்ட்ரோல் பண்ணுங்கனு சமாளிச்சுட்டு இருந்த மனுஷன், “மற்ற கட்சிகள்லாம் எதிர்த்து பேசுன கட்சிக்கூட கூட்டணி வைச்சாங்க. அந்த மாதிரிதான்”னு நச் பதில் ஒண்ணை போட்டுட்டு கிளம்பி போய்ட்டாரு.

Anbumani
Anbumani

அன்புமணி ராமதாஸ் பேசுன விஷயங்களுக்கு அவரே முரணாதான் இருப்பாரு. ஒவ்வொரு இடத்துலயும் அவர் பேசுனதை அவ்வளவு விமர்சிக்கலாம். அவர் பேசுனதுல சில சாம்பிள்களைதான் இப்போ சொல்லியிருக்கேன். இந்த நிலைல அவரை அவரே முதல்வராக கனவு வேற கண்டுட்டு இருக்காரு. எல்லாத்தையும் என்னத்தனு சொல்ல?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top