வாழ்க்கை ஒரு வட்டம்… கீழ இருக்கவன் மேலே போவான்… மேல இருக்கவன் கீழ வருவான் அப்படினு… தமிழ் சினிமாவில் பல ஹீரோக்கள் பன்ச் அடிச்சதை கேட்டிருப்பீங்க… அதுவும் நம்ம அமைச்சருக்குப் பொருந்தும்… எந்த அமைச்சருக்குப் பொருந்தும்? தமிழ்நாடு அரசின் நகர்புற அமைச்சர் கே.என்.நேருதாங்க… அந்த அமைச்சர்.
புல்லட் நேரு… அடகு கடை முதலாளி… மண்டிக்கடை வியாபாரி… ஊராட்சி மன்றத் தலைவர்… எம்.எல்.ஏ… அமைச்சர்… அதுக்கு அப்புறம்தான் மாவட்ட செயலாளர்… அப்டினு, நேருவோட அரசியல் வளர்ச்சி, ஒரு குழப்பமான ஏறுவரிசையில் உச்சத்தை தொட்ட ஒரு இன்ட்ரஸ்டிங் ஸ்டோரி.
தி.மு.க-வில் இவ்வளவு செல்வாக்காக இருக்கும் கே.என்.நேருவின் சொந்த ஊர் திருச்சியில் உள்ள காணக்கிளியனூர். அவருடைய பெற்றோர் நாராயணன் ரெட்டியார்-தனலெட்சுமி அம்மாள். நாராயணசாமி ரெட்டியார், காங்கிரஸ் கட்சியின் அனுதாபியாக இருந்தவர். அதனால், ஜவஹர்லால் நேருவின் நினைவாக, தன் மூத்த மகனுக்கு நேரு என்று பெயர் வைத்தார்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பி.யூ.சி வரை படித்தார். அந்த நேரத்திலேயே அந்த ஊர் மக்களின் அவசர உதவிகளுக்கு நேருவைத்தான் அணுகுவார்கள். புல்லட்டில் வைத்து அவசர உதவி தேவைப்படுபவர்களை அழைத்துச் செல்வது நேருவின் வழக்கம். அப்படியே எளிதில் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதனால், புல்லட் தம்பி, புல்லட் நேரு என்ற அடைமொழி உருவானது.
கல்லூரிப் படிப்பை முடித்த நேரு, அந்தப் பகுதியில் அடகு மற்றும் வட்டிக்கடையும் வைத்து நடத்தினார். அந்தக் கடையில் தி.மு.க-வினருக்கு எளிதில் கடன் கிடைக்கும். காரணம், தொடக்கத்தில் காங்கிரஸ் அபிமானியாக இருந்த நாராயணன் ரெட்டியார், 1970 காலகட்டத்தில், தி.மு.க ஆதரவாளராக மாறி இருந்தார்.
அடகுக்குடை வாசலில் அமர்ந்திருக்கும் நேரு, அந்தப் பகுதியில் கஷ்டம் என்று வருபவர்களுக்கு சிறு அளவில் பண உதவியையும் செய்வார். எப்போதும், 5 ரூபாய், 10 ரூபாய் கட்டுக்களை கையோடு வைத்திருக்கும் நேருவிடம், அந்தப் பகுதி மக்கள் உரிமையாக கைச்செலவுக்கு காசு கேட்டு வாங்கிச் செல்வார்கள்.
Also Read:
பின்னர், அரியநல்லூரில் மிளகாய் மண்டி வைத்தார். அப்போது கிராமத்தில் இருந்து விவசாயிகளிடம் பேசிப் பழகிய அனுபவம், அவருக்கு அரசியலில் மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது. பிறகு, புள்ளம்பாடியில் பால் சொசைட்டி நடத்தினார். இரண்டு வியாபாரத்திலும் கையில் இன்னும் அதிகமாக காசு புரளத் தொடங்கியது.
பணமும் வந்து, ஊரில் நல்ல அறிமுகமும் கிடைத்த புல்லட் நேருவுக்கு, அரசியல் ஆசை வந்தது. அவரது அரசியல் ஆசையின் முதல் வெற்றி, ராஜிவ் காந்தியையும் சோனியா காந்தியையும் ஆச்சரியப்படுத்திய நேருவின் செயல், கருணாநிதி முன்னால் நேரு ஸ்கோர் செய்தது, திருச்சியில் ஏற்பட்ட திருப்பு முனை, அவரின் சர்ச்சைகள், சாதனைகள், பலம், பலவீனம் இவைப் பற்றியெல்லாம் தெரிஞ்சுக்கணுமா? மறக்காம மிஸ்டர் மினிஸ்டர் வீடியோவைப் பாருங்க!