தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த விவசாயக் குடியானவர் ஓட்டக்காரத்தேவர்; அவரது மனைவி பழனியம்மாள் தம்பதியினரின் மூத்த மகனாக 1951-ஆம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி பிறந்தவர் ஓ.பன்னீர்செல்வம். இவர்களின் குலதெய்வம் பேச்சிமுத்து. அதனால், ஓட்டகாரத்தேவர்-பழனியம்மாள் தம்பதி, அவர்களுக்குப் பிறந்த முதல் பிள்ளைக்கு பேச்சி முத்து என்று பெயர் வைத்தனர். ஆனால், வீட்டில் அந்தப் பிள்ளையை பன்னீர்செல்வம் என்று வேறு பெயர் வைத்து அழைத்தனர். அந்தப் பெயர்தான் பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போதும் கொடுக்கப்பட்டது. பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் பி.யூ.சி படித்துவிட்டு, பி.ஏ.,பொருளாதாரத்தை ‘உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கவுதியா’ கல்லூரியில் போய் படித்தார்.
நட்பு, காதல், மோதல், கேலி, கிண்டல் என நவரசங்களும் கொட்டிக்கிடக்கும் கல்லூரியிலும் பேச்சிமுத்து அமைதியான மாணவர். கல்லூரிப் பருவத்துக்குரிய உற்சாகத் துள்ளல் எதுவும் அவரிடம் இருக்காது. மதிய உணவு இடைவேளையில்கூட சக மாணவர்களுடன் சேர்ந்து சாப்பிடமாட்டார். யாரும் இல்லாத இடமாகப் பார்த்து, தனியாகப்போய் சாப்பிடுவதுதான் பன்னீரின் வழக்கம். கல்லூரியில் இப்படி ஒரு மாணவர் படித்தார் என்ற தடமே இல்லாதவகையில் கல்லூரிப் படிப்பை முடித்த பன்னீர், பெரியகுளம் கைலாசநாதர் கோயில் அருகே, தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமாக இருந்த நிலத்தில் விவசாயம் பார்க்கத் தொடங்கினார்.
அதில்பெரிய பிடிபாடு இல்லை. வேறு ஏதாவது தொழிலும் கைவசம் இருந்தால்தான் குடும்பத்தை ஓட்ட முடியும் என்று முடிவெடுத்தவருக்கு, பெரியகுளத்தைச் சுற்றி ‘டீ ஸ்டால்’களுக்கு பால் கிராக்கி இருப்பது தெரியவந்தது. அதனால், அந்தக் கடைகளுக்கு மாட்டுப்பால் சப்ளை செய்யலாம் என்று முடிவெடுத்தார் பன்னீர். அதற்காக தங்கள் நிலத்திலேயே பால்பண்ணை ஒன்றை அமைத்தார். பால்பண்ணை அமைக்க ஜாமீன் கையெழுத்து போட்டவர் பன்னீரின் நண்பர் விஜயன். பெரியகுளம் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் டீக்கடைகளுக்கு பால் சப்ளை செய்ததுபோக, எஞ்சிய பாலை என்ன செய்யலாம் என்று யோசித்தவர், அதை விற்றுக் காசாக்கத் தனியாக ஒரு டீ கடையையும் ஆரம்பித்தார். அந்த கடையின் பெயர் ‘பி.வி கேண்டீன்’. பி – என்பது பன்னீர்செல்வம் என்ற பெயரின் முதல் எழுத்து; வி – என்பது வங்கிக் கடனுக்கு ஜவாப்தாரியான நண்பர் விஜயனின் பெயரில் உள்ள முதல் எழுத்து. பன்னீர் ஆரம்பித்த டீக்கடை இப்போதும் இருக்கிறது… ஆனால், அந்தக் கடையில் பி.வி.கேண்டீன் என்ற பெயர் இப்போது இல்லை.
பால்பண்ணை, டீக்கடை என பிஸியாக இருந்த சிவாஜி ரசிகரான ஓ.பன்னீர்செல்வம், எப்படி எம்.ஜி.ஆரின் தொண்டர் ஆனார்… பெரியகுளம் நகராட்சி மன்ற உறுப்பினர் தொடங்கி அவர் எப்படி தமிழகத்தின் முதல்வரானார்… 2001 செப்டம்பர் 21-ம் தேதி தமிழக முதலமைச்சராக முதல்முறையாக அவர் பதவியேற்றபோது நிகழ்ந்த சம்பவங்கள் தெரியுமா… முதலமைச்சரானதும் ஜெயலலிதா ஓ.பி.எஸ்-ஸுக்குப் போட்ட முக்கியமான மூன்று கட்டளைகள் என ஓ.பி.எஸ் வளர்ந்த விதம் பற்றி பேசுகிறது `Mr.Thalaivar’ சீரிஸின் இந்த எபிசோடு… மேலே சொன்ன எல்லா கேள்விகளுக்குமான விடைகளைத் தெரிஞ்சுக்க மிஸ் பண்ணாம முழுசா பாருங்க..!
Also Read – இதுக்கெல்லாமா போஸ்டரு… மதுரையின் போஸ்டர் கலாட்டா!
ixx98y
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?