2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி 159 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்துவிட்டது. அ.தி.மு.க கூட்டணி 75 இடங்களை வென்றிருக்கிறது. இந்த தேர்தலில் கவனிக்கப்பட வேண்டிய கட்சி என்றால் அது நாம் தமிழர்தான். ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை என்றாலும்கூட நாம் தமிழர் கட்சி, போட்டியிட்ட கடந்த தேர்தல்களைவிட இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றிருக்கிறது அந்தக் கட்சி. இந்தத் தேர்தலில் நாம் தமிழர் செய்த சம்பவங்களின் ஹைலைட்ஸைப் பார்க்கலாம்.
-
1 29 லட்சம் வாக்குகள்
234 தொகுதியிலும் போட்டியிட்ட நாம் தமிழர், 2,958,458 வாக்குகள் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இது ஒட்டுமொத்த வாக்குப் பதிவில் 6.85%.
-
2 உயரும் வாக்குவங்கி
2016 சட்டமன்றத்தேர்தலில் 1.07%, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 3.90% இந்தத் தேர்தலில் 6.85% என தேர்தலுக்குத் தேர்தல் வளர்ந்து வருகிறது.
-
3 நோட்டா Vs நாம் தமிழர்
கடந்த தேர்தல்களில் நோட்டாவுடன் போட்டிபோடும் கட்சி என விமர்சிக்கப்படும் நாம் தமிழர் கட்சி, இந்த முறை ஒரு தொகுதியில்கூட நோட்டாவுக்குக் குறைவான வாக்குகள் வாங்கவில்லை.
-
4 10,000-த்துக்கும் மேல் வாக்குகள்
4 தொகுதியில் மட்டுமே 5,000-க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருக்கிறது. 167 தொகுதிகளுக்கு மேல் 10,000-த்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
-
5 மூன்றாம் இடம்
177 தொகுதிகளில் தி.மு.க, அ.தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு தொகுதியில் கூட நான்காவது இடத்துக்கு கீழ் போகவில்லை. அதே நேரம் எந்தத் தொகுதியிலும் இரண்டாம் இடத்தையும் பிடிக்கவில்லை.
-
6 தி.மு.க ஓட்டுகளைப் பிரித்ததா நாம் தமிழர் கட்சி?
நாம் தமிழர் கட்சி, தி.மு.க வாக்குகளைப் பிரிப்பதற்காகவே செயல்படுகிறது என்ற விமர்சனம் அடிக்கடி வைக்கப்படும். உண்மையில் இந்த தேர்தல் டேட்டாவைப் பார்க்கும்போது அ.தி.மு.க-வின் வாக்குகளைப் பிரித்ததாகவே தெரிகிறது. எப்படி?
-
7 வெற்றி வித்தியாசம்
82 தொகுதிகளில் வெற்றி பெற்றவரின் வாக்குகளுக்கும் இரண்டாவதாக வந்தவரின் வாக்குகளுக்குமான வித்தியாசத்தைவிட நாம் தமிழர் பெற்ற வாக்குகள் அதிகம். இதில் 56 தொகுதிகளில் தி.மு.க-வும், 26 தொகுதிகளில் அ.தி.மு.க-வும் வெற்றி பெற்றிருக்கின்றன.
-
8 அ.தி.மு.க வெற்றியைத் தடுத்திருக்கிறது!
அதாவது தி.மு.க வென்ற அந்த 56 தொகுதிகளில் நாம் தமிழரின் வாக்குகள் அ.தி.மு.க-வுக்கு கிடைத்திருந்தால் அ.தி.மு.க வென்றிருக்கும்.
0 Comments