தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ எனும் முன்மாதிரி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்திருக்கிறார். இந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் 1,06,50,000 மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்குக்கே செலுத்தப்படுகிறது.
‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ ஏன் இந்தப் பெயர்?
திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி, தனது ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு சொத்துரிமை, கல்வி வேலைவாய்ப்பு, உள்ளாட்சிகளில் 33% இட ஒதுக்கீடு, பெண்கள் சுய உதவிக்குழுக்கள், கைம்பெண், திருமண நிதி உதவி, கைம்பெண் ஓய்வூதியத் திட்டம், ஐந்தாம் வகுப்பு வரை பெண்களே ஆசிரியைகள், கர்ப்பிணிகள் மகப்பேறு நிதி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை உருவாக்கி நிறைவேற்றிக் காட்டியவர். இதனாலேயே இந்தத் திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்று பெயர் சூட்டியிருக்கிறது தமிழ்நாடு அரசு. சரி இப்படியான மகளிர் உரிமைத் திட்டம் தமிழ்நாட்டுக்கு அவசியமானு கேட்டா… அவசியம்னு சொல்றதுக்கு முக்கியமான 3 காரணங்களை நாம பட்டியலிடலாம்.
மகளிர் உழைப்புக்கு அங்கீகாரம்
இல்லறப் பொறுப்புகளுடன் பணிகளுக்குச் சென்று, அதன்மூலம் தங்கள் குடும்பங்களின் உயர்வுக்கு உழைத்து வரும் மகளிரின் உழைப்பை முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்திலேயே இந்தத் திட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறது. இதனாலதான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பற்றி சட்டப்பேரவையில் பேசுகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஒரு ஆணோட வெற்றிக்காகவும் தங்கள் குழந்தைகளின் கல்வி, உடல் நலன் காக்கவும் இந்த சமூகத்துக்காவும் வீட்டிலும் வெளியிலும் ஒருநாளைக்கு எத்தனை மணி நேரம் அவர்கள் உழைத்திருப்பார்கள். அதற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டிருந்தால், இந்நேரம் நமது நாட்டில் குடும்பச் சொத்துகள் அனைத்திலும் பெண்கள் பெயரும் சட்டம் இயற்றாமலேயே இடம்பெற்றிருக்கும். இப்படி கணக்கில் கொள்ளப்படாத பெண்களுடைய உழைப்பை அங்கீகரிப்பதற்காகத்தான் இந்தத் திட்டம்த்ஜ அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது’’ என்று குறிப்பிட்டிருந்தார். அதுதானே உண்மையும் கூட…! இதனால்தான் இந்தத் திட்டத்துக்கு உதவித் தொகை என்று பெயரிடாமல் உரிமைத் தொகை என்று பெயரிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு.
பெண்களின் வாழ்வாதார மேம்பாடு
பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டுமாயின், அவர்களுக்குப் பொருளாதாரரீதியில் சுதந்திரம் வேண்டும் என்பதே பெண்ணியவாதிகள் காலம்காலமாய் வைத்துவரும் கோரிக்கையின் முக்கிய அம்சம். அப்படியான குறைந்தபட்ச பொருளாதார சுதந்திரத்தை இந்தத் திட்டம் அளிக்கும். உண்மையில் இந்த ஆயிரம் ரூபாயில் ஒரு சிலிண்டரைக் கூட வாங்க முடியாதுதான். அதேநேரம், இந்த குறைந்தபட்ச தொகைகூட மகளிர்க்குப் போய் சேரக் கூடாது என்று எண்ணுபவர்களை என்ன சொல்வது? அதேபோல், இந்த ஆயிரம் ரூபாயில் பெண்கள் தன்னிறைவு அடைந்துவிடப் போவதும் இல்லை. ஆனால், தங்கள் கைகளுக்கே நேரடியாக வந்து சேரும் இந்த ஆயிரம் ரூபாய் மிகப்பெரிய தன்னம்பிக்கை விதையை பெண்களிடம் விதைக்கும். விவசாயப் பணிகள் தொடங்கி பல்வேறு பணிகளிலும் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. சமையல், வீட்டுப் பராமரிப்பு தொடங்கி குழந்தை வளர்ப்பு என ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்காகப் பெண்களின் உழைப்பு என்பது எந்த இடத்திலும் ஆண்களின் உழைப்புக்குக் குறைவானதல்ல. இப்படி தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை இந்த சமூகத்தின் மிகச்சிறிய அலகாக இருக்கும் குடும்பத்தின் வளர்ச்சிக்காகவே செலவிடும் மகளிரின் உழைப்பை அங்கீகரித்து அரசு வழங்கும் இந்தத் தொகை நிச்சயம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கியமான பங்காற்றும்.
சமூக நலப் பாதுகாப்புத் திட்டம்
இதையெல்லாத்தையும் தாண்டி இந்தத் திட்டம் பெண்களுக்கான சமூக நலப் பாதுகாப்புத் திட்டம் என்றே சொல்லலாம். `எல்லார்க்கும் எல்லாம்’ – இதைத்தான் திராவிட மாடல் அரசுனு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொள்கையாகும் நோக்கமாவும் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமில்லாம, உலக அளவில் பார்த்தால், சமூக நீதியை அடிப்படையகாக் கொண்ட அரசாகட்டும் அதன்மூலம் பல்வேறு புதுமையான, புரட்சிகரமான திட்டங்களை நடைமுறைப்படுத்தி சமத்துவ சமூகத்தை உருவாக்குவதில் நீண்ட நெடிய வரலாறு கொண்டது நமது தமிழ்நாடு. அது சாதி, மத வேறுபாடாக இருந்தாலும் சரி, பாலினரீதியிலான ஒடுக்குமுறையாக இருந்தாலும் சரி; அது சமூக வளர்ச்சியைத் தடுப்பவையே என்பதை ஆரம்பத்தில் இருந்தே உணர்ந்த சமூகம் நமது தமிழ்ச் சமூகம். இப்படியான பாகுபாடுகளால் சமூகத்தில் சரிபாதியாக நிறைந்திருக்கும் மகளிர் பல்வேறு இன்னல்களை நூற்றாண்டுகளாக அனுபவித்து வருகிறார்கள். சமூக நலத்துறையின் ESI, PF போன்ற திட்டங்கள் எந்த அளவுக்கு முக்கியமோ வருங்காலத்தில் அதே அளவுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமும் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதே நிதர்சனம். ஊதியம் போன்ற பிரச்னைகளில் இருந்து தொழிலாளர்களுக்கு அந்தந்தத் திட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பை மகளிர்க்கு கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டம் அளிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ள வேண்டாம் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது என்பதை நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஏன் அவசியம்னு நீங்க நினைக்கிறீங்க. அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?