`கலைஞருக்கு கார் நண்பர்; ஸ்டாலினுக்கு உளவாளி; பொதுவாக புத்திசாலி’ – அமைச்சர் பொன்முடி கடந்து வந்த பாதை #MrMinister

தி.மு.க-வைத் தொடங்கிய அறிஞர் அண்ணாவைப் பற்றி வியந்து பேசும் அறிஞர்கள், கல்வியாளர்கள், அண்ணா மிகச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், காதாசிரியர், நாடக நடிகர், அரசியல் விஞ்ஞானி என்றெல்லாம் ஆராய்ந்து பட்டிமன்றம் நடத்துவார்கள். அண்ணாவின் ஒவ்வொரு திறமையைப் பற்றியும் தனித்தனியே ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவார்கள். ஆனால், அண்ணாவைப் பற்றி வியந்து பேசும் எளிய கிராமத்து மனிதர்கள், அவர் டபுள் எம்.ஏ-ப்பா, பெரிய படிப்பாளி என்பார்கள். அதைச் சொல்லும்போது, அவர்களை அறியாமலே, அவர்களுடைய கண்களில் ஆச்சரியமும் ஒரு பெருமிதமும் பொங்கும். ஆனால், தி.மு.க-வில் அண்ணா மட்டுமல்ல… அது தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து, இன்றுவரை, அந்தக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் நிர்வாகிகள் எனப் பலரும் மிகப்பெரிய படிப்பாளிகள்தான். பட்டப்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புக்களை எல்லாம் முடித்த பெரும் அறிவாளிகள் அங்கம் வகித்த… அங்கம் வகிக்கின்ற கட்சிதான் தி.மு.க. அந்தப் பாராம்பரியத்தில் வந்தவர்தான் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி…

பொன்முடி
பொன்முடி

இன்று அந்தக் கட்சியின் சார்பில் அமைந்துள்ள ஆட்சியில், உயர் கல்வித்துறை அமைச்சராக இருக்கக்கூடிய பொன்முடி, அந்தக் கட்சியைத் தொடங்கிய அண்ணாவைவிட ஒரு டிகிரி கூடுதலாக வாங்கியவர். அண்ணா டபுள் எம்.ஏ என்றால், பொன்முடி ட்ரிபிள் எம்.ஏ. எம்.ஏ.வரலாறு, எம்.ஏ.அரசியல் அறிவியல், எம்.ஏ பொதுநிர்வாகம் படித்தவர். அதோடு பி.எட் முடித்து, பி.ஹெச்டி பட்டமும் பெற்ற முனைவர். அதோடு சட்டமும் படித்து முடித்தவர். படித்தவர்கள்தான் அரசியலுக்கு வர வேண்டும்; படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் அரசியல் சுத்தமாகிவிகிடும். எல்லாம் சரியாகிவிடும் என்று ஒரு அபத்த வாதம் காலம் காலமாக முன் வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பாவம் அவர்கள்… அவர்களுக்கு படிப்பைப் பற்றியும் ஒன்றும் தெரியவில்லை; அரசியலைப் பற்றியும் ஒன்றும் தெரியவில்லை என்பதை முகத்தில் அறைந்ததுபோல் சொல்லும் கண் முன் உதாரணம்தான் மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி.

பொன்முடி
பொன்முடி

விழுப்புரம் மாவட்டம், டி.அரியலூரில் பிறந்த பொன்முடி, அந்தப் பகுதியில் மிக மைனாரிட்டி சமூகம் என்பதும் முக்கியமானது. அப்படியான சமூகப்பின்புலத்தில் இருந்து வந்த பொன்முடி, அரசியல் நடத்தும் விழுப்புரம் மாவட்டம் வன்னியர்கள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டம். எந்தக் கட்சியாக இருந்தாலும், வன்னியர்களை கேண்டிடேட்டாகப் போடும் அளவுக்கு வன்னியர் சமூகத்தின் ஆதிக்கம் நிறைந்த மாவட்டத்தில், அந்த பார்முலாவை உடைத்து தனி சாம்ராஜ்ஜியம் நடத்தி வருபவர் பொன்முடி.

பொன்முடி
பொன்முடி

அதிகாரத்தை அடைவதுதான் அரசியலின் இறுதி இலக்கு. அதில் எது தர்மம் என்றால், எது தேவையோ.. அதுதான் தர்மம் என்பதை தன் அரசியலில் அங்குலம் அங்குலமாக நிருபித்துக் காட்டியவர் பொன்முடி. ஏறத்தாழ ஒரு பள்ளிக் கூடத்தில் சமத்துப் பையன், வொயிட் காலர் வாத்தியர் குடும்பப் பின்னணி, கரடு முரடான அரசியல் களத்தில் எப்படி அடித்துப் பிடித்து மேலே வந்தார் என்பதுதான் இந்தத் தொடரின் இன்ட்ரஸ்டிங் பார்ட்… வாங்க சீரிஸுக்குள்ள போவோம்.

வாத்தியார் பிள்ளை மக்குனு சொல்லுவாங்க. பொன்முடியின் அம்மா, அப்பா இரண்டு பேருமே வாத்தியார்கள்தான். அவர் புத்திசாலியா? மக்கா?

உள்ளூர் அரசியலில் செஞ்சி ராமச்சந்திரனைப் பார்த்து வியந்துபோய் இருந்த பொன்முடிக்கு, அரசியலில் மிகப்பெரிய ஆச்சரியங்களையும், அதிகாரத்தையும், செல்வாக்கையும் சென்னைக் காட்டியது அல்லது கற்றுக் கொடுத்தது என்றே சொல்லலாம். அப்படி அவருடைய வாழ்வில் சென்னை எப்படி திருப்புமுனையை ஏற்படுத்தியது தெரியுமா?

சின்னப்பையன் என நினைத்து செஞ்சி அவருக்கு சீட் கொடுத்த சுவாரஸ்யமான பின்னணி கதை தெரியுமா?

கருணாநிதி கணக்கு பொன்முடிக்கு சாதாகமாக அமைந்த கதை தெரியுமா?

தி.மு.க-வின் இளம் பஞ்ச பாண்டவர்கள் பட்டியலில் யாரெல்லாம் இருந்தாங்க?

கலைஞர் குடும்பத்திற்கு பொன்முடி எப்படிப்பட்டவர்?

கலைஞருக்கு கார் நண்பராகவும் மு.க.ஸ்டாலினுக்கு நம்பிக்கைக்குரிய உளவாளியாகவும் இருந்தது எப்படி?

பொன்முடிக்கு வந்த சோதனைகளும் அவரின் சாதனைகளும் என்னென்ன?

இந்த மாதிரி பொன்முடி பற்றிய நிறைய கேள்விகளுக்கு விடை தெரிஞ்சுக்கணுமா? ’Tamilnadu Now’ யூ டியூப் சேனலில் வெளியாகியுள்ள ‘மிஸ்டர் மினிஸ்டர்’ எபிசோடை மறக்காமப் பாருங்க!

Also Read: சிறுவயது முதல் மிசா கைது வரை… மு.க.ஸ்டாலின் சுயசரிதை `உங்களில் ஒருவன்’… சுவாரஸ்யங்கள்!

1 thought on “`கலைஞருக்கு கார் நண்பர்; ஸ்டாலினுக்கு உளவாளி; பொதுவாக புத்திசாலி’ – அமைச்சர் பொன்முடி கடந்து வந்த பாதை #MrMinister”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top