ராகுல் காந்தி

ராகுல் காந்தி தக்லைஃப் சம்பவங்கள்!

நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன். அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயார்’ – ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோது அவர் சொன்ன வார்த்தைகள் இவை.  உண்மையில் அவர் கொடுத்த விலை கொஞ்சம் பெருசுதான். பொதுவா பா.ஜ.க அல்லது ஆர்.எஸ்.எஸ் ஒரு கட்சியோட தலைவரை பழி வாங்கணும்னு நினைச்சா நேரடியா அவரை அட்டாக் பண்ணமாட்டாங்க. அதே கட்சில இருக்குற துணைத் தலைவர், கூட இருக்குற ஆட்களைத்தான் டார்கெட் பண்ணுவாங்க. மம்தா பானர்ஜி, ஜெயலலிதானு இதுக்கு பல உதாரணங்களை பார்க்கலாம். ஒரு சின்ன அவதூறு வழக்கை வச்சி இவ்வளவு பெரிய கட்சியோட தலைவரை டைரக்டா அட்டாக் பண்றது இதுதான் முதல் முறை. குழிக்குள்ள தள்ற ஸ்கெட்ச் வேணா பி.ஜே.பியோடதா இருக்கலாம். ஆனா அந்தக் குழியே பத்து வருசத்துக்கு முன்னாடி ராகுல் தோண்டினதுங்குறதுதான் வரலாற்று விநோதம். கடந்த சில வருடங்கள்ல ராகுல் காந்தி என்னெல்லாம் தக் லைஃப் சம்பவங்கள் பண்ணிருக்காரு. அதெல்லாம் அவருக்கு பாசிட்டிவா திரும்புச்சா நெகட்டிவா திரும்புச்சாங்குறதுதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

ராகுல் காந்தி

2013-ல சுப்ரீம் கோர்ட் ஒரு ஜட்ஜ்மெண்ட் கொண்டு வர்றாங்க. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இரண்டு வருசத்துக்கும் மேல சிறை தண்டனை பெற்றா அவரை உடனடியா தகுதி நீக்கம் பண்ணனும்னு சுப்ரீம் கோர்ட் சொல்லுது. அப்போ பிரதமரா இருந்த மன்மோகன் சிங் தலைமையில நாடாளுமன்றத்துல இந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரா ஒரு மசோதா கொண்டு வர்றாங்க. அதன்படி அவரை தகுதி நீக்கம் பண்ண மாட்டாங்க. ஆனா தேர்தல்ல மட்டும் போட்டியிட முடியாதுனு அதோட அதிகாரத்தை குறைக்கிறாங்க. அந்த டைம்ல ராகுல் காந்தி ஒரு பிரஸ்மீட்டை கூட்டி இந்த மசோதாவை ‘கம்ப்ளீட் நான்சென்ஸ்’னு திட்டினது மட்டுமில்லாம, பத்திரிகையாளர்கள் முன்னாடி அந்த மசோதாவோட நகலை கிழிச்சு எறிஞ்சாரு. அன்னைக்கு அவர் கிழிச்சதுதான் இன்னைக்கு அவருக்கு வில்லனா வந்திருக்கு. அந்த மசோதா நிறைவேறி இருந்தா இந்நேரம் ராகுல் தகுதி நீக்கம் நடந்திருக்காது. அப்போவே இதுக்கு பாசிட்டிவாவும் நெகட்டிவாவும் விமர்சனங்கள் வந்தது. ராகுலோட அந்த செயல் பிரதமரை அவமானப்படுத்துற மாதிரினும் சொன்னாங்க. இந்த மாதிரி அப்பப்போ எதையாச்சும் அதிரடியா பண்றதை வழக்கமா வச்சிருக்காரு ராகுல்.

Also Read – பல்கேரியா விவேகம்… காஷ்மீர் லியோ… டேய் எப்புடிறா?!

அதுல ஒண்ணுதான் நாடாளுமன்றத்துல மோடியை கட்டிப்பிடிச்சது. மோடி அரசுக்கு எதிரா நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தப்போ ரொம்ப தீவிரமா பேசுன ராகுல்காந்தி டக்குனு யாரும் எதிர்பார்க்காத டைம்ல நேரா போய் மோடியை கட்டிபிடிச்சாரு. மோடிக்கே லைட்டா ஷாக்கு. என்னயா நடக்குதுனு பா.ஜ.க, காங்., ஆட்களும் திகைச்சுப் போனாங்க. கட்டிபிடிச்சது மட்டுமில்லாம பிரியா வாரியர் ஸ்டைல்ல கண்ணடிச்சது வேர்ல்டு லெவல்ல வைரல் ஆனது. எலெக்சன் டைம்ல சென்னைல ஒரு காலேஜ்க்கு ராகுல் காந்தி வந்தப்போ ஒரு பொண்ணு ஏங்க மோடியை கட்டிப்பிடிச்சீங்கனு கேட்டது. அதற்கு ராகுல், ‘அன்புதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. எல்லா மதமும் அன்பைத்தான் போதிக்கின்றன. நான் கட்டிப்பிடித்த அன்று பிரதமர் மோடி, என்னைப் பற்றியும், எனது அப்பா, எனது பாட்டி என எல்லோர் பற்றியும் தூற்றிக் கொண்டிருந்தார். அவர் என் மேல் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தார். யார் வெறுப்பை உமிழ்வார்கள் தெரியுமா..? யாருக்கு அன்பு கிடைக்கவில்லையோ அவர்கள்தான் வெறுப்பை உமிழ்வார்கள்.’ அப்படினு அன்பு ஜெயிக்கும்னு நம்புறியானு அர்ச்சனா மாதிரி பேசிட்டு போனார்.  

ராகுல் காந்தி

தேர்தல் பிரசாரங்கள்ல இந்த மாதிரி எக்கச்சக்க தக்லைஃப் சம்பவங்கள் பண்ணிருக்காரு. ராகுல் காந்தி பேச்சை தங்கபாலு கொடூரத்துக்கு டிரான்சிலேட் பண்ண, ஒரு ஸ்கூல்ல மாணவியையே மொழிபெயர்ப்பாளரா பேச வச்சார். வில்லேஜ் குக்கிங் சேனலோட சேர்ந்து காளான் பிரியாணி சாப்பிட்டதை நம்ம எல்லாருமே பார்த்திருப்போம். அடுத்த சில நாள்லயே கேரளா யூடியூபர் ஒருத்தரை மீட் பண்ணி அவர்கூட கடலுக்கு போன ராகுல்காந்தி திடீர்னு கடலுக்குள்ள குதிச்சு ஸ்விம்மிங்கை போட்டதெல்லாம் நடந்தது.

சமீபத்துல காங்கிரஸ் பண்ண மிகப்பெரிய சம்பவம்னா பாரத் ஜோடா யாத்திரைதான். இந்தியா முழுக்க கிட்டத்தட்ட 3500 கிலோமீட்டர் நடந்தே கடந்தார் ராகுல். போற இடத்துல எல்லாம் உண்மைல மக்கள் மத்தில அவருக்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் வந்தது. இவரும் ஓடுறது, ஆடுறதுனு செம்ம எனர்ஜியா இருந்தார். இந்தியா முழுக்க பிரபலமான தேசிய தலைவர் இவ்வளவு ஃப்ரெண்டிலியா, எல்லாரும் ஈசியா அணுகுற மாதிரி அந்த பயணத்துல இருந்தது ஒரு ஆச்சர்யம். அதைவிட ராகுலோட அப்பா, பாட்டி எல்லாருமே திவீரவாதத்தால இறந்தவங்க அப்படிப்பட்ட குடும்பத்துல இருந்து எந்த தயக்கமும் இல்லாம கூட்டத்துல கலந்து வர்றாருனு ஆச்சர்யப்பட்டவங்களும் உண்டு. ராகுல் காந்திகிட்ட இருக்குற ஒரு பெரிய ப்ளஸ் இதுதான். ஃப்ரெண்ட்லியான டோன்ல பேசுறது பழகுறதுனு மக்களோட ரொம்ப ஈசியா கனெக்ட் ஆகிடுறாரு. அவர் பண்ற சம்பவங்களுக்கெல்லாம் நல்ல பேர் கிடைக்கும். ஆனா அதையெல்லாம் தக்கவச்சிக்கிறதோ அதை ஓட்டா மாத்துதையோ காங்கிரஸ் பண்ணாது. இந்த பாரத் ஜோடா யாத்திரையும் அப்படி ஒரு சம்பவம்தான்.

பொதுவா நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்குறது எதிர்கட்சியோட வேலையாதான் இருக்கும். ஆனா ஒரு எதிர்கட்சித் தலைவரை கண்டிச்சு ஆளுங்கட்சியே நாடாளுமன்றத்தை முடக்குனது ராகுல் காந்தி விஷயத்துலதான். சமீபத்துல லண்டனுக்கு போன ராகுல்காந்தி அங்க இந்தியா பத்தி பேசிருந்தார். ‘இந்தியால ஜனநாயகம் ரொம்ப மோசமான நிலைல இருக்கு. ஆர்.எஸ்.எஸ் எல்லா அதிகார மையத்திலும் ஊடுருவிருக்கு. உக்ரைன்ல எப்படி பதட்டம் நிலவுதோ அந்த மாதிரி இந்தியால லடாக்ல பதட்டம் நிலவுது’ அப்படினு பேசிருந்தார். இதைத்தான் பா.ஜ.க கண்டிச்சு நாடாளுமன்றத்தையே நாலு நாள் முடக்குனாங்க. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டா மட்டும் போதாது. நாட்டை விட்டே வெளியேறனும்னுலாம் கோரிக்கை வச்சாங்க.

ராகுல் காந்தி

இப்போ ராகுல் காந்தி மேல வந்திருக்குற வழக்குகூட 2019-ல அவர் பேசுனதுக்கு இப்போ கேஸ் போட்டிருக்காங்க. எல்லாத் திருடன்கள் பேர்லயும் மோடி இருக்குனு அவர் பேசியதை மோடி சமூகத்தையே அவமதிச்சுட்டாருனு வழக்கு போட்டு, அதுக்கு  அவசர அவசரமா தீர்ப்பு கொடுத்து, தகுதி நீக்கம் பண்ணினு ரெண்டு நாள்ல எல்லாமே முடிச்சிட்டாங்க. இது ஒண்ணும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை. தீர்ப்பு கொடுத்தது மாவட்டம் நீதிமன்றம் இன்னும் பெரிய நீதிமன்றங்களுக்கு போனா ஒண்ணுமில்லாமப் போகும்தான். ஆனா 2013-ல அந்த மசோதா கொண்டு வந்தப்போ இதே பாயிண்டைத்தான் சொன்னாங்க. ஒரு சின்ன நீதிபதி நினைச்சா ஒருத்தர் பதவியை பறிக்க முடியுற மாதிரி இருக்குனு. அதோட அர்த்தம் இன்னைக்கு ராகுலுக்கு புரிஞ்சிருக்கும். ராகுல் பண்ற சம்பவங்கள் பல நேரங்கள்ல அதிரடியா இருக்கு. சில நேரங்கள்ல அவரோட முதிர்ச்சியின்மையைக் காட்டுது. அதுக்கு இதைவிட பெஸ்ட் எக்ஸாம்பிள் இருக்க முடியாது.

9 thoughts on “ராகுல் காந்தி தக்லைஃப் சம்பவங்கள்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top