சீமானிசம்-னா என்னனு சீமானே ஒரு இடத்துல விளக்கம் கொடுத்துருப்பாரு. பெரியாரிஸம், அண்ணாயிசம், காந்தியிசம், லெனினிஸம்லாம் சொல்றீங்கள்ல… அப்படி என்னோட பேச்சுகளை மக்கள்கிட்ட கொண்டுசேர்க்க தம்பி ஒருத்தர் எடுத்துப்போட்டதுதான். அது வேற ஒண்ணும் இல்லை கருத்து, கோட்பாடுகள்தான். என்னோட தலைவர் இப்படியெல்லாம் சொல்லியிருக்கார்னு நான் எடுத்து எடுத்து சொல்றேன்ல.. அதை நீங்க பிரபாகரனிசம் வைச்சிக்கலாம். அவர் தம்பி நான் சில கருத்துகளைச் சொல்றேன். இப்ப நான் சொல்றேன் வேரை இழந்த மரமும் வரலாற்றை மறந்த இனமும் வாழாது அப்படினு சொல்றேன். அது சீமானோட கருத்து, கோட்பாடு. உலகத்தில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தத்துவங்களே இல்லை. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது தண்ணீர்தான்னு நான் சொல்றேன். அது ஒரு தத்துவம், கோட்பாடு. இதை சீமானிஸம்னு போடுறான். அவ்வளவுதான். இனிச்சா சாப்பிடு, கசந்தா துப்பிட்டு போ.. அதுல என்ன உனக்கு பிரச்னை… ஒருசில பேர் இவர்லாம் ஒருஇசம்’ ஆகுறதானு… டேய் போடா’னு தன்னோட ஸ்டைல்ல விளக்கம் கொடுத்திருப்பார் சீமான் அண்ணன்..
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்றதுமே நமக்கெல்லாம் அவரின் அசாத்திய சிரிப்புதான் நினைவுக்கு வரும். கட்சி தொடங்கி களமாடுவதாகட்டும், தனியாகத் தேர்தலை சந்திப்பதாகட்டும் தனிக்கென தனி பாணியோடு இயங்கி வருகிறார். சமீபகாலமாக அவரின் பேச்சுகளை சீமானிசம் என்கிற பெயரில் தம்பிகள் அதிகம் பரப்பி வருகிறார்கள். சரி சீமானிஸம் என்ன சொல்கிறதுனு கொஞ்சம் தேடிப்பார்த்தப்போ கிடைச்ச விஷயங்கள்தான் இந்த வீடியோ.
ஒருபுறம் அரசுகளையும் ஆள்பவர்களையும் நோக்கி கூர்மையான விமர்சனங்கள் வைப்பவர் சீமான், அதேநேரம் மறுபுறம் அவர் சொன்ன சில கருத்துகள், சம்பவங்கள் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானது என்பதுதான் நிதர்சனம். சில வீடியோக்கள் எப்போவாவது வைரல் ஆகும். ஆனால், சீமான் பேசும் வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகும். யோசிச்சுப் பார்த்தா அவர் கொடுக்குற சில அபத்தமான ஸ்டேட்மெண்டுகளுக்கு இதுதான் காரணமா இருக்குமோனும் தோணும். ஆமைக்கறி தொடங்கி 60,000 யானைகளை கப்பல்ல கொண்டு போனாங்க வரைக்கும் இதுக்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும். உணர்ச்சிகரமாகப் பேசுவது அவரோட பிரத்யேக ஸ்டைல்.
2010-க்கு முன் மேடைகளில் பெரியாரிய, பகுத்தறிவு, சாதி மறுப்பு பற்றி பேசிக்கொண்டிருந்த சீமான், பின்னாட்களில் வீரத்தமிழர் முன்னணியைத் தொடங்கி முப்பாட்டன் முருகன் என்று மார்தட்டினார். சீமானின் தனிப்பட்ட பிம்பத்துக்கு பெரும் சேதாரத்தை ஏற்படுத்தியது பிரபாகரன் பற்றி அவர் பேசிய கருத்துகள்தான். ஏகே 74 பயிற்சி, இட்லிக்குள் கறி, சாப்பிட்டதைக் குறிப்பெடுக்க ஆள்… இப்படி பிரபாகரனுடனான சந்திப்பு குறித்து வெவ்வேறு சமயங்களில் பேசியது அவருக்கு எதிராகவே திரும்பியது. 2012-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட நாம் தமிழர் கட்சி ஆவணத்தில் இடம்பெற்றிருந்த `தமிழ் பேசும் சாதிகள்தான் தமிழர்கள்’ என்று வரையறை கடும் விமர்சனத்துக்குள்ளானது. தமிழர்கள் என்றால் இன்னார்தான் என்று வரையறை சொல்வதற்கு இவர்கள் யார் என்றெல்லாம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சீமானை சந்திக்க பிரபாகரன் ஒதுக்கியதே 8 நிமிடங்கள்தான் என்று சொன்னார் வைகோ.
தமிழீழப் பிரச்னையையும் தமிழின உணர்வாளர்களின் எமோஷன்களையும் வைத்து சீமான் பிழைப்பு நடத்துவதாகவும் விமர்சனம் எழுந்தது. ஒரு தடவை இலங்கை நாடாளுமன்றத்திலேயே சீமானைக் குறிப்பிட்டுப் பேசினார்கள்.விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழ் எம்.பி ஒருவர், `இந்தியாவிலே சீமானைப் போல் இங்கே ஒருவர் உருவெடுத்துக் கொண்டிருக்கிறார். ஆமைக்கறி, பூனைக்கறி என்று எம்முடைய தமிழினத்தை வைத்து, தமிழனத்தின் துன்பத்தை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்’ என்று பேசிய வீடியோ வைரலானது.
இப்படியான விமர்சனங்களுக்குப் பல்வேறு இடங்களில் சீமான் விளக்கம் கொடுத்திருக்கிறார். `ஒரு தேசிய இனம்னா என்ன… மொழினா என்ன.. அதன் நிலப்பரப்புனா என்ன.. தாய்நிலம்னா என்ன.. அது தெரியாததுனால சிலரு மேதைத்தனம்.மேதாவித்தனமா பெரிய மானுட நேயம் பேசுறதா சொல்றது… தன் இனத்தை, தன் மொழியை நேசிக்காதவன் மானுடனே இல்லையே… அப்புறம் என்ன மானுட நேயம் பேசுற?? மனிதனாவே பாக்க முடியாதே… பெத்த தாயைப் பட்டினி போட்டு எத்தனை ஆயிரம் அன்னதானம் செஞ்சாலும் பலனில்லை… எனக்கு வந்து என் மொழி முக்கியம்’’ என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டிருப்பாஅர். சீமானிசத்துக்கு கவுண்டர் கொடுக்குறவுங்க எடுத்தாள்ற முக்கியமான பாயிண்ட் கனியன் பூங்குன்றனார் சொன்னயாதும் ஊரே, யாவரும் கேளிர்’ங்குறதைத்தான்.
Also Read – தமிழ் சினிமாவின் ஃபேவரைட் ஃபைட் சீன் ஸ்பாட்.. பின்னி மில் வரலாறு!
சீமான் குறித்து எத்தனையோ விமர்சனங்களை முன்வைத்தாலும், அவரின் நாம் தமிழர் கட்சி தேர்தல் அரசியலில் தனித்துப் போட்டியிடுவது, பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு என அவரின் முற்போக்கான திட்டங்களை நாம் புறந்தள்ளி விட முடியாது. சீமானிசத்தை உண்மையிலேயே முன்னெடுக்க நினைத்தால், அவர்கள் கட்சியினர் முக்கியமான கருதுகோள்களாக முன்வைக்க வேண்டியவை இவைதானோ என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. சொல்லப்போனால், கொள்கைவாத கருத்துகளோடு மக்களோடு சேர்ந்து போராடிய எத்தனையோ தலைவர்கள் இசம் பேசவில்லை என்பதே உண்மை. நா.த.கவும் சீமான் ஆதரவாளர்களும் முன்வைக்கும் சீமானிசம் என்கிற பதம் மட்டும்தான் இருக்கும். இசத்தின் அடிப்படையாக இருக்கும் கொள்கைகள் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருக்கும் என்று விமர்சிப்பவர்களும் உண்டு..
சீமானிசம் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க… அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.
Your blog is a constant source of inspiration for me. Your passion for your subject matter is palpable, and it’s clear that you pour your heart and soul into every post. Keep up the incredible work!