அடிவாங்குறதுக்குனே பா.ஜ.க-ல இருக்கவங்க இவங்கதான்!

சதுரங்க விளையாட்டிலும் சரி, நிஜத்தில் நடக்கும் போர்களிலும் சரி, முதல்ல களமிறங்கறது சிப்பாய்களாதான் இருக்கும். முதல் அடி அவங்களுக்குத்தான் எப்பவுமே விழும். தங்களை முன்கள பணியாளர்கள்னு, சிப்பாய்கள் நினைச்சுகிட்டு இருப்பாங்க, ஆனா, உண்மையில் அவங்க முன்கள பகடைக்காய்கள். அரசியலும் செஸ் மாதிரிதானே, ஒண்ணு வெட்டணும் இல்ல வெட்டுப்படணும். வெட்டுறது முக்கியஸ்தர்களா இருக்கும் ஆனா வெட்டு வாங்குறது இந்த சிப்பாய்கள்தான். எல்லா கட்சியிலயும் இந்தமாதிரி வண்டிக்கு முன்னால வாண்டடா போய்விழுந்து அடிவாங்ன்குறதுக்குனே சிலர் இருப்பாங்க.. அந்தமாதிரி பாஜகவுக்காக கம்புசுத்தும் சில முன்கள சிப்பாய்களைப் பத்திப் பாக்கலாம்.

அர்ஜூன் சம்பத்

அதிதீவிர பாஜககாரங்களைவிட வெகுதீவிர இந்துத்துவவாதியா தன்னை முன்னிலைப்படுத்திக்கிறதுல அர்ஜூன் சம்பத்தை மிஞ்ச இன்னைக்கி தமிழ்நாட்ல ஆளே இல்ல. பான்பராக்கை மென்னு துப்பி யாராவது பொது இடங்களை அசிங்கப்படுத்தி வச்சிருந்தாக்கூட, அது காவி கலர்ங்கிற ஒரே காரணத்துக்காக தம் கட்டி சப்போர்ட் பண்ணுவார் சம்பத். பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுக்கு இவங்களால் ஒரு குண்டுமணி அளவு பயன் இருக்கும்னு தெரிஞ்சா போதும், அவங்களை இமயமலை உயரத்துக்கு உயர்த்திப் பேசுவார். தேசிய புலனாய்வு முகமை NIIAவுக்கு தெரியாத ரகசியங்களைக்கூட அக்குள்ள வச்சுக்கிட்டே சுத்துவார்.

இந்து மக்கள் கட்சி என்ற பெயரில் 1993முதல் அரசியல் கட்சி நடத்திவரும் சம்பத்திற்கு இதுவரை ஒரு வெண்கல கிண்ணம்கூட கிடைச்சதில்லை. சனாதன தர்மப்படி ஆட்சி நடத்தபபடவேண்டும் என்பது அவருடைய கட்சியின் முக்கிய கொள்கைகளில் ஒன்று. ஆனால் நிஜத்தில் சம்பத்தின் கொள்கை எல்லாம் தன்னுடைய பெயர் செய்திகளில் தொடர்ந்து அடிபடவேண்டும் என்பது மட்டுமே. அம்பேத்கருக்கு காவி உடை உடுத்தமாட்டேன் என நீதிமன்றத்தில் போய் வாக்குறுதி தந்ததற்கெல்லாம் அவர் பெருமைதான்படுவார். நீதிமன்ற வாசலில் வ்ழக்கறிஞர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டதை புன்முறுவலோடு ஏற்றுக்கொண்டார். பின்னே அவருக்கு அதானே வேணும்.

சுருக்கமா சொன்னா சம்பத் ஒரு விளம்பர பிரியர். இப்படி சொன்னதுக்காக அவர் கோவிச்சுக்குவார்னு கூட சிலர் நினைக்கலாம். கண்டிப்பா மாட்டார். ஏன் சொல்லுங்க, ஏன்னா இதுவும் அவருக்கு ஒரு விளம்பரம்.

2021 சட்டமன்ற தேர்தல்ல இந்து மக்கள் கட்சியோட தேர்தல் வாக்குறுதியைப் பத்தி உங்களுக்கு ஞாபகப்படுத்தினா அவரோட விளம்பர மோகத்தை புரிஞ்சுக்க முடியும். தேர்தலில் இந்து மக்கள் கட்சி வென்றால், தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1 கோடி கடன் தருவதுதான் அவருடைய தேர்தல் வாக்குறுதிகள்ல ஹைலைட்டே. பில்டப் பண்ணுவதோ பீலா உடுவதோ முக்கியமில்லை. எது பண்ணினாலும் இந்த உலகம் நம்மள உத்துப்பாக்கணும்ங்கிறதான் சம்பத்தோட ஒன்லைன் பாலிசி. சரி, நமக்காக இவ்வளவுதூரம் கம்பு சுத்துறாரே, இவரை கூட்டணியில சேர்த்துக்குவோம்னு பாஜக கனவிலும் நினைக்காது. பழக்கவழக்கமெல்லாம் பத்திரிகை செய்தியோட இருக்கணும்னு நாசூக்கா நறுக்கி விட்றும்.

Also Read – `சைத்தான் சைக்கிள்ல வர்றான்…’ சிக்னலில் சிக்கிய சிக்கலான காமெடி கதைகள்

கம்பு சுத்துறதுல அர்ஜுன் சம்பத் டபுள் MA டிகிரி வாங்கிருக்காருன்னா, நம்ம வேலூர் இப்ராஹிம் அதுல பிஹெச்டியே பண்ணிருக்கார்.. அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் சம்பந்தம் இருக்குறதை நம்ம வேலூர் பாயை வச்சி நம்பலாம். பாஜகவின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் என்ற பதவியை தந்திருக்கும் இப்ராஹிடம் இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த ஆலோசனையா கேட்பார்கள்? அவருக்கு தரப்பட்டிருக்கும் ஒரே அஜெண்டா ஊர் ஊராக போய் சிற்பான்மையினரை வம்பிழுப்பது. சிறுபான்மையினருக்காக பாஜக எவ்வளவோ செய்திருக்கிறது என இவர் மைக்கில் பாசிட்டிவாக பேசினாலும், அது ஸ்பீக்கரில் வெளியாகும்போது நெகட்டிவாகதான் காதில்போய்விழும். எங்கேனும் ஏதேனும் வெடிசத்தம் கேட்டால் போதும், மத தீவிரவாதம் தலைதூக்குகிறது, உளவுத்துறை தோல்வி ஐயகோ என மந்திரம் ஓத தொடங்குவார்.

இவரைப்போலவே பாஜகவுக்கு கிடைத்த மற்றொரு மாற்றுமத சிப்பாய் டெய்சி சரண். அட நம்ம பாசமலர் டெய்சி சரணைத்தான் சொல்றேன். சிறுபான்மை அணி தலைவரான டெய்சிக்கும், ஒபிசி அணியில் இருந்த திருச்சி சிவாவுக்குமான அந்த டெலிபோன் உரையாடலும், அதற்குப்பிறகு டெய்சி தந்த பேட்டிகளையும் பார்த்தா, அட அட அடா என்னம்மா கட்சியை வளர்த்திருக்காய்ங்கன்னுதான் தோணும்.

Daisy
Daisy

நிர்வாகிகள்மேல புகார்கள் வராத கட்சியே இருக்க முடியாது. புகார் வந்த நிர்வாகிகள்கிட்ட விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவாங்க. ஈயம் பூசுன மாதிரியும் பூசாத மாதிரியும் அவுங்களும் ஒருவகை விளக்கத்தை கொடுத்துட்டு கட்சிப்பணியை தொடருவாங்க. ஆனா, டெய்சி – சிவா ரெண்டு பேருக்குமான காரசாரமான உரையாடலைவிட அதுக்கு அவங்க கொடுத்த விளக்கம்தான் விவகாரமாயிடுச்சு. அப்படி ஒரு விளக்கத்தை இந்தியாவிலேயே ஏன் வேர்ல்டுலயே யாரும் கொடுத்திருக்க மாட்டாங்க. கேசவ விநாயகம்னு ஒரு கேரக்டர் பிஜேபியில இருக்கு, அவருதான் ஆல் இன் ஆல் அழகுராஜாங்குற சிதம்பர ரகசியம் அம்பலமானதும்கூட டெய்சி தொடர்ச்சியா எழுதிகிட்டு வர்ற விளக்கவுரையில இருந்துதான்.

அடிப்படையில் மருத்துவரான டெய்சி, youtubeல் தந்த மருத்துவ குறிப்பு வீடியோக்களுக்கு இருந்த வரவேற்பை பாத்துட்டு அவங்களுக்கு பாஜகவுல போஸ்டிங் போட்டாங்க. ஆனா தமிழக பாஜகவை பொறுத்தவரை இந்த லைக் பண்றது, ஷேர் பண்றதெல்லாம் கொஞ்சம் எசகுபிசகா இருக்கும். மேடையில் இருந்த சசிகலா புஷ்பாவிடம் பாஜக நிர்வாகி ஒருவர் நடந்துகொண்டது மாதிரி கடந்த கால வரலாறு அப்படி. அடிகொடுத்த திருச்சி சூர்யா கட்சியிலிருந்து கழண்டுகொண்டார். சப்போர்ட் பண்ண வந்த காயத்ரி ரகுராம் கழட்டிவிடப்பட்டார். ஆனால், இவ்வளவு களேபரத்திற்குப் பிறகும், சும்மா பேசிகிட்டு இருந்தோம் மாமான்னு அசால்ட்டு காட்டுனாங்க பாருங்க டெய்சி, அங்க நிக்கிறாங்க.

இதுல சோகம் என்னன்னா, கசமுசலாயலம்ல சாரி கமலாலயத்துல முக்கிய பொறுப்புல இருக்குறவங்கமேல விழவேண்டிய அடி எல்லாம் வேற முதுகுல விழுந்திருக்கு. திமுகவில இன்னமும் அதே பழைய கொள்கை பிடிப்போட இருக்குற வெகுசிலர்ல ஒருத்தரான திருச்சி சிவாவின் மகன் சூர்யா, பிறப்பால் கிறிஸ்தவரான டெய்சி சரண், பிறப்பால் இஸ்லாமியரான வேலூர் இப்ராஹிம் மாதிரி சிப்பாய்கள் இருக்கும்வரை அண்ணாமலையாருக்கு அரோகராதான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top