தமிழகம் உள்பட புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் என ஐந்து மாநிங்களுக்கான தேர்தல் தேதிகள் அன்று அறிவிக்கப்பட்டன. ஆளும் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளும் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட்டன. அதேபோல், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தோடு கூட்டணி அமைத்து சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகளும், டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் விஜயகாந்தின் தே.மு.தி.க, அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியும் போட்டியிட்டன. சீமானின் நாம் தமிழர் கட்சி தலா 117 ஆண், பெண் வேட்பாளர்களுடன் தனித்துக் களம்கண்டது.
தமிழகத் தேர்தல் பிரசாரத்தின் 25 ஹைலைட் தருணங்கள்!
-
1 ஆ.ராசா சர்ச்சை
சென்னை தேர்தல் பிரசாரத்தில் முதல்வரின் பிறப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்ததாக தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவுக்கு 48 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் தான் பேசியதற்கு ஆ.ராசா வருத்தம் தெரிவித்தார்.
-
2 முதல்வர் கண்ணீர்
சென்னை திருவொற்றியூர் பிரசாரத்தில், முதல்வரான எனது தாயையே எவ்வளவு இழிவுபடுத்தி பேசியிருக்கிறார்கள் என்று கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்ணீர்விட்டார்.
-
3 திமுக விமர்சனமும் முதல்வரின் பதிலும்
ஊர்ந்து போய் முதல்வர் பதவியைப் பிடித்தவர் என்ற தி.மு.கவினரின் தன் மீதான விமர்சனம் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, `ஊர்ந்துபோய் பதவியைப் பிடிக்க நான் என்ன பல்லியா, பாம்பா? நடந்து சென்றுதான் முதல்வர் பதவியை ஏற்றேன்.
-
4 கமலும் நக்கலைட்ஸ் வீடியோவும்
கோவை தெற்கில் போட்டியிட்ட ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனைக் கலாய்த்து நக்கலைட்ஸ் யூடியூப் சேனலில் வெளியான `உன்னால் முடியாது தம்பி’ வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. சர்ச்சையால் வீடியோவை நக்கலைட்ஸ் யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டது. `அறுபத்து ஐந்து வயது வரை சாவகாசமாக இருந்துவிட்டு திடீர் ஞானம் வந்து பொங்கிக்கொண்டு அரசியல் களத்திற்கு வந்தவர்கள் நாங்கள் அல்ல. பதின் பருவக் காலம் தொட்டு அரசியல் களத்தில் நிற்பவர்கள். உங்கள் ஆண்டவருக்கும் மூத்தவர்கள்’ என்று நக்கலைட்ஸ் தரப்பில் விமர்சனங்களுக்குப் பதில் கொடுக்கப்பட்டது.
-
5 எய்ம்ஸ் சர்ச்சை
சாத்தூர் பிரசாரத்தில் ஒரு செங்கலைத் தூக்கிக் காண்பித்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கையோடு தூக்கி வந்திருப்பதாக தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி பேசினார். இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தவே, மதுரை பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமியும் தருமபுரி பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் எய்ம்ஸ் குறித்து விளக்கம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
-
6 தி.மு.கவும் ஐ.டி ரெய்டும்!
சென்னை தேர்தல் பிரசாரத்தில் முதல்வரின் பிறப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்ததாக தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவுக்கு 48 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் தான் பேசியதற்கு ஆ.ராசா வருத்தம் தெரிவித்தார்.
-
7 அ.தி.மு.க-வையும் விட்டுவைக்காத ஐடி ரெய்டு
சென்னை தேர்தல் பிரசாரத்தில் முதல்வரின் பிறப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்ததாக தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவுக்கு 48 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் தான் பேசியதற்கு ஆ.ராசா வருத்தம் தெரிவித்தார்.
-
8 செந்தில் பாலாஜி - அண்ணாமலை சர்ச்சைப் பேச்சு!
சென்னை தேர்தல் பிரசாரத்தில் முதல்வரின் பிறப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்ததாக தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவுக்கு 48 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் தான் பேசியதற்கு ஆ.ராசா வருத்தம் தெரிவித்தார்.
-
9 விஜயகாந்த் பிரசாரம்
சென்னை தேர்தல் பிரசாரத்தில் முதல்வரின் பிறப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்ததாக தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவுக்கு 48 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் தான் பேசியதற்கு ஆ.ராசா வருத்தம் தெரிவித்தார்.
-
10 பிரதமர் மோடி பிரசாரம்
சென்னை தேர்தல் பிரசாரத்தில் முதல்வரின் பிறப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்ததாக தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவுக்கு 48 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் தான் பேசியதற்கு ஆ.ராசா வருத்தம் தெரிவித்தார்.
-
11 தமிழகத்தில் பா.ஜ.க தலைவர்கள்!
பிரதமர் மோடி தவிர பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களும் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டனர். குறிப்பாக கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாகவும் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் குஷ்பு, அரவக்குறிச்சி வேட்பாளர் அண்ணாமலை ஆகியோருக்கு பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள் ஆதரவு திரட்டினர்.
-
12 சர்ச்சையில் சிக்கிய லியோனி
கோவை பிரசாரத்தில் பேசிய தி.மு.க-வின் திண்டுக்கல் ஐ.லியோனி, வெளிநாட்டுப் பசுவின் பாலைக் குடிப்பதால் பெண்கள் உடல் எடை கூடுவதாகப் பேசியது சர்ச்சையானது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த சூழலில், கட்சியின் மரபை மீறிப் பேசக்கூடாது என்றும் பிரசாரத்தில் கண்ணியம் காக்க வேண்டும் எனவும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கட்சியினரை அறிவுறுத்தி அறிக்கை வெளியிட்டார்.
-
13 கோவையில் மையம் கொண்ட கமல்ஹாசன்
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன், நடை பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். கூட்டம் அதிகமான நிலையில், அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட காலில் ஒருவர் மிதித்துவிட்டார். இதனால், மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வெடுத்த கமல், பின்னர் ஊன்றுகோலுடன் சில நாட்கள் பிரசாரம் செய்தார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் பா.ஜ.க-வின் வானதி சீனிவாசன் விரைவில் நலம்பெற வாழ்த்தி பூங்கொத்து அனுப்பியது வைரலானது.
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகையின்போது இஸ்லாமியர் ஒருவரின் செருப்புக் கடையை மூடச் சொல்லி பா.ஜ.கவினர் தாக்கியதாகத் தகவல் வெளியானது. அந்தக் கடைக்குச் சென்ற கமல், அங்கிருந்து செருப்பு ஒன்றை வாங்கினார். -
14 திண்டுக்கல் சீனிவாசன் காமெடி
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தேர்தல் பிரசாரத்தின் போது, `உங்க கணவர் வெளியூர் போய்ட்டா கவலைப்படாதீங்க, நாங்க இருக்கோம்...’ `ஒரு சிலிண்டர் விலை ரூ.4,500...’, `துணை முதல்வர் ஓ.பழனிசாமி’, `பெட்ரோல் ஊற்றாம அடுப்புப் பற்ற வைக்க முடியும்...’ என்று பல இடங்களில் பேசி கிச்சுக்கிச்சு மூட்டினார். அவரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிரிக்கவைத்து சிந்திக்க வைப்பவர்’ என்று கூறி சமாளித்தார்.
-
15 அ.தி.மு.க கதையை முடித்துவிடுங்கள்!
விழுப்புரம் பிரசாரத்தில் பேசிய அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், `எடப்பாடி பழனிசாமி கம்பெனி காந்தி நோட்டை நம்பியே தேர்தலில் நிற்கிறது. இங்குள்ள அமைச்சர் 200 கோடியை பதுக்கி வைத்துக் கொண்டு வாக்குக்குப் பணம் கொடுக்க இருக்கிறார். அதை வாங்கிக் கொண்டு அ.தி.மு.க கதையை முடித்துவிடுங்கள்’ என்று பேசினார். அதேபோல் மற்றொரு பிரசாரத்தில், `இப்போது நடப்பது மக்களாட்சியே அல்ல; குருட்டு அதிர்ஷ்டத்தால் வந்த ஆட்சி’ என்று பேசியிருந்தார். விழுப்புரம் பேச்சு தொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
-
16 வன்னியர் இடஒதுக்கீடு
திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ` வன்னியர் உள் இடஒதுக்கீடு நிரந்தரமானது அல்ல; தற்காலிமானதுதான் என முதல்வரே சொல்லிவிட்டார். சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பின்னரே உண்மையான இடஒதுக்கீடு செய்யப்படும்’ என்று பேசியது கூட்டணிக் கட்சியான பா.ம.கவை கொதிக்க வைத்தது. அதேபோல், போடியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேசியதும் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தவே, `நான் முதல்வரிடம் பேசிவிட்டேன். இட ஒதுக்கீடு நிரந்தரமானதுதான்’ என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி பல இடங்களில் விளக்கமளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
-
17 அ.தி.மு.கவைப் புகழ்ந்த ராமதாஸ்
கடந்த காலங்களில் ஊழல் விவகாரத்தில் அ.தி.மு.க மீது மிகக்கடுமையான விமர்சனங்களை முன்வைத்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இந்தத் தேர்தலில் அக்கட்சியினரை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினர். `நார்வே, ஸ்வீடன் போல தமிழகம் சொர்க்கபுரியாக மாற அ.தி.மு.க-வுக்கு வாக்களியுங்கள்’ என்று ராமதாஸும், `முதலமைச்சர் வேட்பாளராக இருப்பவர் ஒரு சாமானியர். எடப்பாடி பழனிசாமி வென்றாக வேண்டும். நெற்றியில் வியர்வை சிந்தும் அவர் ஒரு விவசாயி’ என்று பிரசாரம் செய்தார்.
-
18 விருதாசலத்தில் பிரேமலதா
விஜயகாந்த்தை எம்.எல்.ஏவாக்கி அழகுபார்த்த விருதாசலத்தில் போட்டியிட்ட தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா, முழுக்க முழுக்க அங்கேயே முகாமிட்டு வாக்கு சேகரித்தார். `கலவர பூமியை அமைதியாக மாற்றியவர் கேப்டன்..’ என்று கூறியதோடு ஆளுங்கட்சியையும் எதிர்கட்சியையும் கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்தார். அவரது சகோதரர் எல்.கே.சுதீஷின் மனைவிக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தநிலையில், பிரேமலதாவையும் பரிசோதனைக்கு அழைத்தது சுகாதாரத் துறை. `பிரசாரத்தைத் தடுக்கும் நோக்கில் அரசு செயல்படுவதாக பிரேமலதா குற்றம்சாட்டிய நிலையில், அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ரிசல்ட் நெகட்டிவாக வந்தது.
மறுபுறம் அ.தி.மு.கவை மிகக் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், பிரசாரத்தின் பிற்பகுதியில் என்ன காரணமோ தெரியவில்லை தி.மு.க பக்கம் விமர்சனக் கணையை மாற்றிக்கொண்டார். -
19 உதயசூரியனுக்கு வாக்குக் கேட்ட சீமான்!
சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவறுதலாக உதயசூரியனுக்கு வாக்குக் கேட்ட வீடியோ வைரலானது. `என் அன்புக்குரிய சொந்தங்கள், என் அருமை உடன் பிறந்தார்கள், பெருங்கனவோடு நிற்கிற இந்த பிள்ளைகள், எளிய மக்கள் உங்களின் பிள்ளைகள் எங்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்’ என்று கூறிய பின்னர் சுதாரித்து விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் என்று பேசியது விவாதப்பொருளானது.
-
20 `தங்கக் காசு’ பா.ஜ.க
காரைக்கால் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் ராஜசேகரன் சார்பில் பெண்களுக்கு ஒரு கிராம் தங்கக் காசும், ஆண் வேட்பாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சோதனையில் பிரதமர் மோடி படம் அச்சிடப்பட்ட அட்டையுடன் கூடிய 141 தங்கக் காசுகள், 95,000 ரூபாய் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
-
21 வைரலான பத்மப்ரியா பிரமாணப் பத்திரம்!
மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பத்மபிரியா தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தை தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்து 3.03 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்தனர். முதலமைச்சர் எடப்பாடியின் பிரமாணப் பத்திரத்தை 6,879 பேரும், தி.மு.க தலைவர் ஸ்டாலினின் பிரமாணப் பத்திரத்தை 4,351 பேரும் பதிவிறக்கம் செய்திருந்தனர். அதேநேரம் கமல்ஹாசனின் பிரமாணப் பத்திரத்தைப் பதிவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 15,563, சீமானுக்கு இந்த எண்ணிக்கை 10,261 ஆகும்.
-
22 கமலும் விமானமும்!
பிரசாரத்துக்கு கமல் விமானத்தில் பயணிப்பது குறித்து விவாதம் எழுந்த நிலையில், தனது விமானப் பயணங்களை சொந்த செலவில் செய்வதாக அவர் விளக்கமளித்தார். மேலும், `அரசியல் விளையாட்டுக்கு வந்ததால் ரூ.300 கோடி அளவுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஊழல் செய்பவர்கள் ஜெயிலுக்குச் சென்றாலும் ஷாப்பிங் செய்யுமளவிற்கு வசதியாக உள்ளனர்’ என்று கமல் பேசியதும் வைரலானது.
-
23 நமீதாவும் குஷ்புவும்
ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் குஷ்பு, ஆட்டம் பாட்டத்துடன் பிரசாரத்தைத் தொடங்கினார். திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியை எதிர்பார்த்து அங்கு பணியாற்றி வந்தார் குஷ்பு. கடைசி நேரத்தில் மாற்றி அறிவிப்பு வெளியானது. மனம்தளராத குஷ்பு ஜாகையை ஆயிரம் விளக்குக்கு மாற்றினார். சைகையில் அவர் வாக்கு சேகரித்த வீடியோ வைரலானது.
தமிழகம் முழுவதும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக நடிகை நமீதா செய்த பிரசாரம் வைரலானது. அண்ணாமலைக்கு ஆதரவாக `உங்கள் சோந்த தொகுதி, சோந்த வேட்பாளர்’ எனப் பேசியது, வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக, `மச்சான்ஸ் மறக்காம தாமைரைக்கு வோட் போடுங்க’ என்று பேசியது போன்றவை வைரலாகின. -
24 கட்சியில் இணைந்த 4 மணி நேரத்தில் சீட்
மதுரை திருப்பரங்குன்றம் தி.மு.க எம்.எல்.ஏவான டாக்டர் சரவணனுக்கு அக்கட்சி சீட் வழங்கவில்லை. இதையடுத்து பா.ஜ.க-வில் அவர் இணைந்த 4 மணி நேரத்தில், மதுரை வடக்கு தொகுதி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். அதேபோல், அ.தி.மு.க-வில் வாய்ப்புக் கிடைக்காத முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ சந்திரசேகரன் ஆகியோர் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகவே சுயேச்சையாகக் களம்கண்டனர்.
-
25 விராலிமலை சென்டிமெண்ட்
விராலிமலை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் - தி.மு.க சார்பில் பழனியப்பன் ஆகியோர் களம்காண்கின்றனர். `எனக்கு இது கடைசித் தேர்தல். கை விட்டுடாதீங்க’ என கண்ணீருடன் தி.மு.க வேட்பாளரும், `எனக்கு பி.பி, சுகர் இருக்கு. அதை மறந்து இயேசுநாதர் சிலுவையைச் சுமந்ததுபோல விராலிமலையைச் சுமக்கிறேன்’ என அமைச்சர் விஜயபாஸ்கரும் பிரசாரம் செய்தனர்.
0 Comments