தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. சில இடங்களில் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அவற்றின் தொகுப்புதான் இது.
ஒரு வாக்கு

கோவை குருடாம்பாளையம் 9-வது வார்டு இடைத்தேர்தலில் பா.ஜ.க-வைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கார் சின்னத்தில் போட்டியிட்டார். தேர்தல் முடிவில் அவர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி தேசிய அளவில் டிரெண்டானது. அவரது குடும்பத்தில் 6 பேர் இருக்கும் நிலையில், அவர்களுக்கு 4-வது வார்டில் வாக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
90-வயதில் வெற்றி
நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி ஊராட்சித் தலைவராக 90 வயது பெருமாத்தாள் வெற்றி பெற்றார். ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்ற அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட்டைப் பறிகொடுத்தனர்.

தடம் பதித்த விஜய் மக்கள் இயக்கம்
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சுமார் 169 இடங்களில் போட்டியிட்டனர். இதில், 110 பேர் வார்டு உறுப்பினர்களாக வெற்றிபெற்றிருப்பதாக விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்தியத் தலைவர் புஸ்ஸி ஆனந்த் கூறியிருக்கிறார்.
ரூ.500 யாரும் தரலை..!
நெல்லை பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு வாக்காளர், `ரூ.500 தராததால் யாருக்கும் ஓட்டுப்போடவில்லை’ என வாக்குச்சீட்டில் எழுதியிருந்தார்.

`மாமா… கிணத்துல தள்ளிவிட்டுட்டாங்களே..!’
நெல்லை பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஒரு கிராம பஞ்சாயத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கு கிணறு சின்னத்தில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் ஒருவர் தோல்வியடைந்தார். வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியே வந்த அவர், தோல்வியடைந்ததால் தரையில் புரண்டு அழுதார். அப்போது, `மாமா… கிணத்துல தள்ளிவிட்டுட்டாங்களே.. படுபாவிங்க’ என்று கூறி கண்ணீர் விட்டிருக்கிறார்.
ஊராட்சிமன்றத் தலைவியான 21 வயது பொறியியல் பட்டதாரி!

நெல்லை மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட லெட்சுமியூர் கிராமத்தைச் சேர்ந்த சாருலதா என்ற 21 வயது பொறியியல் பட்டதாரி, வெங்கடாம்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டதில் 796 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
4 பேருக்கு வாக்கு
விழுப்புரம் காணை ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான மஞ்சள் நிற வாக்கு சீட்டில் மொத்தமிருந்த 6 சின்னங்களில் 4 சின்னங்களில் ஒரு வாக்காளர் வாக்களித்திருந்தார். அதேபோல், கள்ளக்குறிச்சி தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தின் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்ட 4 பேரில் 3 சின்னங்களில் வாக்காளர் ஒருவர் வாக்களித்திருந்தார். இவை செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்டன.
8.குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்
நெல்லை மானூர் ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளப்பனேரி பஞ்சாயத்தில் 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட கலா, மக்டோனா ஆகிய இருவரும் தலா 99 வாக்குகள் பெற்றனர். இதனால், குலுக்கல் முறையில் கலா தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
வாக்குப்பெட்டி உடைப்பு
ராமநாதபுரம் பரமக்குடி தாலுகா போகலூர் பகுதியில் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் பதிவான வாக்குப் பெட்டியின் சாவி காணாமல் போயிருக்கிறது. எங்கு தேடியும் கிடைககாததால், தபால் வாக்குகள் பதிவான வாக்குப் பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு, வாக்குகள் எண்ணப்பட்டன.
ஒரு வாக்கில் வெற்றி!
திருச்சி லால்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுமருதூர் ஊராட்சியில் கடல்மணி என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

நாம் தமிழர் – ம.நீ.ம நிலை என்ன?
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி ஆகியவை படுதோல்வியைச் சந்தித்திருக்கின்றன. இதில், பெரும்பாலான இடங்களில் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
செல்லாத வாக்குகள்!
விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சின்னங்களில் வாக்களித்திருந்ததால், 310 தபால் வாக்குகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்டன. இன்னும் பலருக்குத் தேர்தலில் வாக்களிப்பது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையே இது காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.
டெபாசிட்டை இழந்த அ.தி.மு.க

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 19-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட பகவதி திருவேங்கடாமி 17,833 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அ.தி.மு.க வேட்பாளர் விஜயலட்சுமி 4,410 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தார்.
ஒரு வாக்குகூட பெறாத வேட்பாளர்கள்!
திண்டுக்கல், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு 13-ல் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் வேல்முருகன் என்பவர் ஒரு வாக்குகூட பெறவில்லை. அதேபோல, ஈரோட்டில் பெருந்துறை ஒன்றியத்திம் 10-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட சண்முகம், திருமூர்த்தி ஆகியோர் ஒருவாக்குகூட பெறவில்லை. சோகம்!
3 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை வென்ற வி.சி.க
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 4 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்குப் போட்டியிட்ட திருமாவளவனின் வி.சி.க, 3 இடங்களில் வெற்றிபெற்றது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க 2 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது.





kuwin sở hữu kho game đa dạng từ slot đến trò chơi bài đổi thưởng, mang đến cho bạn những giây phút giải trí tuyệt vời.
iwin – nền tảng game bài đổi thưởng uy tín, nơi bạn có thể thử vận may và tận hưởng nhiều tựa game hấp
Đến với J88, bạn sẽ được trải nghiệm dịch vụ cá cược chuyên nghiệp cùng hàng ngàn sự kiện khuyến mãi độc quyền.