`அண்டா மேல கைய வைச்ச…’ கட்சிகளின் டிரெண்டிங் பிரியாணி சம்பவங்கள்!

இன்னைக்கு பிரியாணினு சொன்னா விஜய்யோட பனையூர் பிரியாணி தான் டக்னு எல்லாருக்கும் நியாபகம் வரும். பிரியாணிக்கும் திமுகவுக்கும் ஜாதக பொருத்தம் பார்த்தா ஒண்ணுகூட பொருந்தாது. ஏன்? அதிமுகவும் பிரியாணி சம்பவங்கள்ல சிக்கியிருக்கு. அது என்ன? பிரியாணி அம்பாஸிடரா லோகேஷை நியமிக்கலாம். ஏன்? விஜயகாந்துக்கும் பிரியாணிக்கும் செம கனெக்‌ஷன் ஒண்ணு இருக்கு. என்னாவா இருக்கும்? இப்படி பிரியாணி பத்தின விஷயங்களைதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

Vijay Fans
Vijay Fans

விஜய் தன்னோட ரசிகர்களை அடிக்கடி சந்திச்சு பேசுவாரு. ஆனால், கொரோனா பிரச்னையால கடந்த சில வருஷமா தன்னோட ரசிகர்களை அவர் மீட் பண்ணல. இந்த நிலைல, திடீர்னு பனையூர்ல உள்ள ஆஃபீஸ்ல ரசிகர்களை விஜய் மீட் பண்ணப்போறதா அறிவிப்பு வெளியாச்சு. அப்புறம் என்ன டிரெண்டிங் டாப்பிக் அதுதான். ஒவ்வொருத்தரா விஜய் சந்திச்சது மட்டுமில்லாமல் அவங்களுக்கு பிரியாணி விருந்தையும் விஜய் ஏற்பாடு பண்ணியிருக்காரு. பனையூர்ல காலைல இருந்தே கூட்டம் அலைமோத தொடங்கிருச்சு. நிறைய சேனல்கள் லைவ் போட ஆரம்பிச்சிட்டாங்க. சோஷியல் மீடியால பனையூர், பனையூர் பிரியாணிலாம் செம டிரெண்டிங்கா போச்சு. அந்த ஹேஷ்டேக்ல விஜய்யை கேலி பண்ற விதமாக நிறைய பதிவுகளைப் பார்க்க முடிஞ்சுது. குறிப்பா, தமிழ் ராக்கர்ஸ் படத்துல விஜய்யை கிண்டல் அடிச்சு வைக்கப்பட்ட காட்சியை டிரெண்ட் பண்ணிட்டு இருக்காங்க. ஆனால், விஜய் ரசிகர்கள் செம ஹேப்பி அண்ணாச்சி. “முதல்ல குடும்பத்தை பாருங்க. அப்புறம் மக்கள் பணியை பாருங்க”னு விஜய் சொன்னதாக விஜய் ரசிகர்கள் வெளியை வந்து அவர பார்த்த அனுபவத்தை சில்லறைய சிதறவிட்டு பகிர்ந்துட்டு இருந்தாங்க. கடவுளை பார்த்த மாதிரி இருந்துச்சு. அவ்வளவு அழகா இருந்தாரு. மாலை போட்டவங்க சாப்பிடாம போகக்கூடாதுனு வெஜ் சப்பாடும் ஏற்பாடு பண்ணியிருந்தாரு. மறக்க முடியாத அனுபவம்னுலாம் சிலாகிச்சு பேசிட்டு இருந்தாங்க. விஜய் ரசிகர்களுக்கு கை கொடுக்கல. புஸ்ஸி ஆனந்த் கால்ல விஜய் ரசிகர்கள் விழுந்தாங்கனு சில சர்ச்சைகளும் சுத்திட்டு இருக்கு.

Vijay Fans
Vijay Fans

தி.மு.கவை மற்ற கட்சிகள் பிரியாணியை வைச்சு பயங்கரமா கலாய்ப்பாங்க. ஏன்னா, தி.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகிகள் பண்ண சம்பவங்கள் அப்படி. ஜாதகத்துல பத்து பொருத்தம் பார்த்தா பிரியாணிக்கும் தி.மு.க-வுக்கும் ஒண்ணுகூட பொருந்திப் போகாதுனே சொல்லலாம். 2018-ம் ஆண்டு விருகம்பாக்கத்துல உள்ள பிரியாணி கடைல தி.மு.கவைச் சேர்ந்த சிலர் தங்களுக்கு இலவசமா பிரியாணி வேணும்னு சில வருஷங்களுக்கு முன்னால கேட்டாங்க. ஆனால், ஹோட்டல் ஊழியர்கள் பிரியாணி தீர்ந்து போச்சுனு சொன்னதும், குத்து சண்டைல ஃபைட் பண்ற மாதிரி கையலாம் வைச்சு அங்க இருந்த ஊழியர்களை கடுமையா தாக்க ஆரம்பிச்சாங்க. இந்த சம்பவத்தோட சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்கள்ல வேகமா பரவிச்சு. ஓசி பிரியாணி திமுகன்ற ஹேஷ்டேக் ட்விட்டர்ல தேசிய அளவில் டிரெண்டாகவும் போச்சு. அந்த சம்பவத்துல ஈடுபட்டவங்களை அப்போ திமுக செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் அடிப்படை உறுப்பினர் பதவில இருந்து நீக்குனாரு. பாதிக்கப்பட்ட கடை ஊழியர்களை நேரில் சந்திச்சு ஆறுதலும் கூறினார். இந்த சம்பவத்தோட பிரியாணி பஞ்சாயத்து நிக்கல. வேளச்சேரில உள்ள ஒரு பிரியாணி கடைல குடிபோதையில் தி.மு.க நிர்வாகிகள் போய் சாப்பிட்ருக்காங்க. பணம் கேட்டதும், “நான் திமுககாரன். எங்கிட்டயே பணம் கேக்குறியா?”னு சண்டை போட்ருக்காங்க. இந்த சம்பவம் 2019-ல நடந்துச்சு. அப்பவும் ட்விட்டர்ல தி.மு.கவை வைச்சு செய்தாங்க.

Briyani
Briyani

சென்னைல தி.மு.க சுத்தி எல்லா இடத்துலயும் பிரியாணி பஞ்சாயத்தை கூட்டி வைச்சிருக்காங்க. 2021-ல தாம்பரம்ல வாக்குப்பதிவு மையம் ஒண்ணு பக்கத்துல, தேர்தல் விதிகளை மீறி பிரியாணி அண்டால திமுக கொடி, ஸ்டாலின் ஃபோட்டோலாம் வைச்சு மக்களுக்கு பிரியாணி வழங்குனதாகவும் பஞ்சாயத்துகள் ஏற்பட்டுச்சு. இதோட தி.மு.கவுக்கு பிரியாணிக்குமான பஞ்சாயத்து நிக்கலை. அந்த பஞ்சாயத்துகளை சொல்லிட்டே போகலாம். “இங்க பாரு சாமி, ஓசி பிரியாணிக்காக பாக்ஸிங்லாம் பண்ணுது, பிரியாணியை திருடுவது எப்படி?, இனிமேல் பிரியாணி வாங்கிக்கொடுத்தா காடு கொடுத்து வாங்குனியா? இல்லை பாக்ஸிங் பண்ணி வாங்குனியா?னுதான கேப்பானுங்க”னு எக்கச்சக்கமா மீம்ஸ் போட்டு கலாய்ச்சாங்க. சரி, இந்த பிரியாணிக்கு சரியான அம்பாஸிடரா யாரை வைக்கலாம்னு கேட்டா, லோகேஷ் கனகராஜ் பெயரை தைர்யமா சொல்லலாம். ஏன்னா, மனுஷன் அந்த பிரியாணியை மாநகரம்ல இருந்து விக்ரம் வரைக்கும் ஒவ்வொரு படத்துலயும் அவ்வளவு அழகா காமிச்சிருக்காரு. மாநகரம்ல முனிஷ்காந்த் பிரியாணி சாப்பிடுறது அவ்வளவு இம்ப்ரஸ் ஆகாது. ஆனால், படத்துல பிரியாணி இருக்கும். ஆனால், கைதில கார்த்தி பிரியாணி சாப்பிடுறதைப் பார்த்தா உடனே எங்கயாவது போய் பிரியாணி சாப்பிடணும்னு தோணும். மாஸ்டர்ல பிரியாணில லெக் பீஸ் மாட்றதுலாம் லக்குனு டயலாக் வைச்சிருப்பாரு. பிரியாணி சமைக்கிற சீனும் வரும். விக்ரம்ல கிடா விருந்துனு பிரியாணிக்கு தனி ஷாட் வைச்சு தூள் கிளப்பியிருப்பாரு. இப்படி பிரியாணி மேல செம கிரேஸ்ல இருக்குறதால, அவரை பிரியாணியோட அம்பாஸிடரா அறிவிக்கலாம்.

Also Read – என்னைத்தையாவது சொல்லுங்க.. இந்தி கத்துக்கிட்டா இவ்வளவு நன்மைகளா?

லோகேஷ் கனகராஜ் படத்தோட டீசர் எதாவது வந்தா, அதுல அண்டா எதாவது தெரிஞ்சா, உடனே, “பெருசா எதோ சம்பவம் பண்றீங்க போல”னு மீம்ஸ் போட ஆரம்பிச்சிருவாங்க. அந்த அளவுக்கு பிரியாணியையும் லோகேஷையும் ஒண்ணு மண்ணா பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அஜித்துக்கும் பிரியாணிக்கும் உள்ள கனெக்‌ஷன் பத்தி சொல்லவே தேவையில்லை. அவர் நடிக்கிற படங்கள்ல மொத்த டீம்க்கும் தன்னோட கையால பிரியாணி சமைச்சு போட்டு அசத்திருவாரு. அதேமாதிரி விஜயகாந்தும் டெக்னிக் வைச்சிருக்காரு. மீசை ராஜேந்திரன் நேர்காணல் ஒண்ணுல, “ஒருதடவை காலைல கோபத்துல அவரோட பி.ஏவை அடிச்சிட்டு வீட்டுக்கு போய்ட்டாரு. நாங்க அங்கதான் இருந்தோம். வீட்டுக்குப் போய்ட்டு ஃபோன் பண்ணி, அவனை அடிச்சிட்டேன். அவனை வீட்டுக்கு போக வேணாம்னு சொல்லுங்க. அவனுக்கு பிரியாணியெல்லாம் வாங்கி கொடுங்க”னு சொல்லியிருக்காரு. விஜயகாந்த் தன்னோட அன்பை இப்படியும் வெளிப்படுத்துவாருனு மீசை ராஜேந்திரன் சொல்லுவாரு. அதிமுகவும் சில பிரியாணி சம்பவங்களை பண்ணியிருக்காங்க. நாகைல தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருத்தர் வீட்டுல ஆடு திடீர்னு காணாமல் போய்ருக்கு. அப்போ, அந்த ஊர்ல அதிமுக பிரமுகர் வீட்டுல ஆட்டுக்கறி விருந்து நடந்துருக்கு. என்னனு விசாரிச்சதுல, அவர் ஆட்டைத் திருடி விருந்து வைச்சது அம்பலம் ஆகியிருக்கு. இதைத் தொடர்ந்து ட்விட்டர்ல ஆடு திருடு அதிமுக ஹேஷ்டேக் பயங்கரமா டிரெண்ட் ஆக ஆரம்பிச்சுது.

BJP - Briyani
BJP – Briyani

எல்லாத்தையும் விட அல்ட்டிமேட்டான விஷயம் பாஜக சம்பவம்தான். குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக திருப்பூர்ல பா.ஜ.க பேரணி நடந்துச்சு. அப்போ, பிரியாணி கடைகள் அதிகமா இருக்குற பகுதி வழியா பேரணி நடக்க இருப்பதாக கேள்விபட்ட கடை உரிமையாளர்கள், எங்களோட கடைக்கும் பிரியாணி அண்டாவுக்கும் பாதுகாப்பு தரணும்னு காவல்துறைக்கிட்ட புகார் கொடுத்தாங்க. ஏன்னா, கோவையில் நடந்த ஊர்வலம் ஒண்ணுல பிரியாணி கடையோட அண்டாவை பா.ஜ.க ஆதரவாளர்கள் திருடிட்டாங்கனு செய்திகள் வெளியாச்சு. அப்புறம் எப்போலாம் பா.ஜ.க சார்பில் பேரணி, போராட்டங்கள், உண்ணாவிரதம் நடக்குதோ, அப்போலாம் பிரியாணி அண்டா பத்திரம்னு ட்விட்டர்ல ஹேஷ்டேக் டிரெண்டாகும். இப்படி அரசியல் கட்சிகளுக்கும் பிரியாணிக்குமான பந்தங்களை பட்டியலிட்டு சொல்லிட்டே போகலாம்.

ஓசி திமுக பிரியாணி, ஆடு திருடி அதிமுக, பிரியாணி அண்டா பத்திரம், பனையூர் பிரியாணி வைப்ஸ்னு இவங்க பண்ண கூத்துல பிரியாணியைப் பார்த்தாலே சிரிப்புதான் இப்போலாம் வருது. ரைட்டு, இந்த சம்பவங்கள்ல நீங்களே பார்த்து வியந்த சம்பவம் என்னனு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top