சினிமாவையும் தமிழக வரலாற்றையும் பிரிக்கமுடியாது என்பார்கள். சினிமா மூலம் அரசியல் பண்ணி ஆட்சியைப் பிடித்த வரலாறெல்லாம் நமக்குப் பழக்கமானது. அப்படி சினிமாவை ஆராதிக்கும், அதை சுவாசிக்கும் மக்கள் அதிகம் கொண்டது தமிழ்நாடு. சினிமா லவ்வர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஜானர் படங்களை மற்ற மொழிகளிலும் தேடித்தேடிப் பார்ப்பதுண்டு. ஓடிடி-யின் எழுச்சி நமது தேடலை எளிதாக்கிவிட்ட இன்றைய சூழலில் உங்களுக்கு எந்த ஜானர் சினிமா ரொம்பவே பிடிக்கும் என்பதைக் கண்டுபிடிக்கலாமா… வாங்க..
ஜானரைக் கண்டுபிடிச்சுட்டா உங்க ஃபேவரைட் ஓடிடி தளங்கள்ல உங்களுக்குப் பிடிச்ச படங்களை எளிமையாக கண்டுபிடிச்சுடலாம். அதுக்கான ஒரு சின்ன முயற்சிதான் இது… ரெடியா கய்ஸ்?
Also Read – லாக்டவுனில் பார்க்க 10 ஃபீல் குட் படங்கள்! – பார்ட் 2
-
1 லீட் கேரக்டர் இப்படியிருந்தால்தான் பிடிக்கும்?
-
எந்தவொரு க்ளூவும் இல்லாத ஹீரோ/ஹீரோயின் கடைசியில் வெற்றிபெறுவது.
-
எதைப்பற்றியும் பயமில்லாத, காமன்சென்ஸ் அதிகமிருக்கும் கேரக்டர்
-
பல தோல்விகளைச் சந்திக்கும் கேரக்டர். ஆனால், துவண்டுபோகக் கூடாது
-
ஹீரோ, வில்லன் சமாசாரமெல்லாம் நமக்குப் பிடிக்காது. அதெல்லாம் ஓல்டு டிரெண்ட் பாஸ்.
-
வரலாறு அல்லது சமீபத்திய நிகழ்வுகள் என எதுவாகவும் இருக்கலாம்
-
-
2 உங்க மூவி நைட் எப்படியிருக்கும்?
-
எப்பவும் கூட்டமா ஃப்ரண்ட்ஸோட படம் பார்க்கிறதுதான் பிடிக்கும்
-
எனர்ஜிட்டிக்கான படங்களை க்ளோஸ் ஃப்ரண்டோட பார்ப்பேன்
-
நல்ல கதை இருக்க படத்தை க்ளோஸ் ப்ரண்டோட பார்ப்பேன்
-
நண்பர்களோட சேர்ந்து பயமுறுத்துற படத்தைப் பார்ப்பேன்
-
அறிவைத் தூண்டுற விதமான படத்தை லேப்டாப்ல பார்ப்பேன்
-
-
3 ஒரு படத்தோட எந்த விஷயம்... `ச்சே சூப்பர்ல’னு உங்களை சபாஷ் சொல்ல வைக்கும்?
-
ஒரு கேரக்டரோட மொத்த எமோஷனையும் காட்டுற குளோஸ் அப் ஷாட்ஸ்
-
ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்னு லேட்டஸ்ட் டெக்னாலஜி
-
தனித்துவமான கேமரா ஆங்கிள், எடிட்டிங் டெக்னிக்குகள்
-
பிரமிக்கவைக்கும் இயற்கை சீனரியோட பானரோமிக் ஷாட்ஸ்
-
அப்படி எதையும் ஸ்பெஷலா மென்ஷன் பண்ண முடியாது
-
-
4 ஒரு படத்தோட சூப்பர்ப் டயலாக்கை நீங்கள் கேட்டால்...
-
அந்தப் படத்தைப் பார்க்காதவர்கள்கிட்ட பேசும்போது மென்ஷன் பண்ணுவேன்
-
ஒரு நல்ல டயலாக் மட்டுமே வைச்சு படம் எப்படிப்பட்டதுனு முடிவு பண்ணிட முடியாது
-
டயலாக்கை எல்லாம் யாரு பாஸ் கவனிக்குறா?
-
வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அதைப் பயன்படுத்துவேன்
-
படம் பார்த்தவர்கள்கிட்ட அதைப் பற்றி விவாதிப்பேன்
-
-
5 நீங்கள் பார்க்கும் படத்தைத் தேர்வு செய்வதில் எவ்வளவு அக்கறை காட்டுவீர்கள்?
-
பாஸ், அது வெறும் பொழுதுபோக்கு மட்டும்தான்
-
நல்ல ட்விஸ்ட், டர்னிங் பாயிண்டுகள் இருக்க படமா இருக்கணும்
-
படத்துல வர்ற சம்பவங்கள், கதைலாம் நிஜத்துல நடக்குற மாதிரி இருக்கணும்
-
ஒரு படத்தோட முடிவு நம்மளைக் குறைஞ்சது சில நாட்களாவது அதைப்பற்றி சிந்திக்க வைக்கணும்
-
அந்தப் படத்தைப் பார்த்து என்னை நான் ஸ்மார்ட் ஆக்கிக்குவேன்
-
-
6 ஒரு நாளில் எவ்வளவு நேரம் நீங்கள் தனியாக இருக்க வேண்டுமென்று நினைப்பீர்கள்
-
பெரும்பாலான நேரங்கள், எல்லா நாள்களிலும்
-
சில நேரங்கள்ல அப்படி நினைப்பதுண்டு, பல நேரங்கள்ல ஒரு கம்பெனி இருந்தா நல்லாயிருக்கும்
-
பெரும்பாலான நேரங்களை க்ளோஸ் ப்ரண்ட் அல்லது நண்பர்களோட செலவழிப்பேன்
-
என்னால தனியாலாம் இருக்கவே முடியாது பாஸ்
-
விளையாடுறீங்களா... கம்பெனி இல்லாட்டி நான் செத்தே போய்டுவேன்
-
-
7 புதிய விஷயங்கள் மீது ஈடுபாடு உண்டா?
-
புதிய விஷயங்கள்தான் எப்பவுமே த்ரில் கொடுக்குறது
-
புது விஷயங்களை எதிர்க்கல.. ஆனால் இயற்கை போன்ற மாறாத விஷயமும் பிடிக்கும்
-
அதுல நமக்கு இன்ட்ரஸ்ட் இருந்ததில்லை
-
அந்த விஷயங்களைப் பொறுத்து முடிவெடுப்பேன்
-
டிரெண்ட்லாம் ரொம்ப நாள் நீடிக்காது... அதப்பத்தியெல்லாம் கவலைப்படுறதே இல்லை
-
-
8 எந்தளவுக்கு நம்பிக்கைக்குரியவர் நீங்கள்?
-
வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மற்றவர்களுக்கு உதவுவேன்
-
ஒரு விஷயத்தைப் பற்றி எனக்கு அதிகம் தெரிந்திருந்தால், உதவிக்குப் போவேன்
-
எனக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே உதவுவேன்
-
உதவணும்னு நினைச்சா மட்டும்தான் பண்ணுவேன்
-
உதவி தேவைப்படுவோரால் நமக்கு என்ன பிரயோஜனம்
-
சினிமாவின் எந்த ஜானர் உங்களுக்கு செட்டாகும்... கண்டுபிடிக்கலாம் வாங்க!
Created on-
Quiz result
த்ரில்லர்
வாழ்க்கையிலும் சரி, சினிமாவாவும் சரி எப்பவுமே த்ரில்லிங்தான் உங்க சாய்ஸ். பேய்ப் படங்கள் மாதிரி இல்லாம பல முடிச்சுகளை அவிழ்க்கும் எங்கேஜிங்கான திரைக்கதைதான் பெஸ்டுனு சொல்ற ஆளு நீங்க.
-
Quiz result
ஆக்ஷன்
சூப்பர் ஹீரோ டைப் ஆக்ஷன் படங்கள், வில்லன்களைக் கூட்டம் கூட்டமா திட்டம்போட்டு காலி பண்ணும் ஹீரோ டைப் படங்களின் ரசிகர் நீங்க.
-
Quiz result
ரியாலிட்டி
வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை வடிவம்தான் உங்களுக்கு ரொம்பவே பிடித்தமானதா இருக்கும்.
-
Quiz result
ஹாரர்
படம்னா பயமுறுத்தாம எப்படி பாஸ்னு வரையறையோட இருக்க ஆள் நீங்க... ஒவ்வொரு சீன்லயும் முதுகுத் தண்டுவடம் சிலிர்க்கணும்னு நினைச்சு படத்தை முடிவு பண்ணுவீங்க.
-
Quiz result
ஹிஸ்டாரிக்கல்
எப்பவுமே வரலாறுக்கு ஒரு முக்கியமான ஸ்பேஸ் இருக்குன்றது உங்க அழுத்தமான நம்பிக்கை. அப்படிப்பட்ட படங்களைத் தேடித்தேடி பார்க்கும் கேரக்டர் நீங்க.
0 Comments