Rajamouli

ராஜமெளலி சார் நீங்களுமா… ஓல்டு ரெக்கார்டெல்லாம் தெரியுமா?

இந்திய சினிமாவோட அடையாளம். ஆஸ்கர் நாயகன். பிரம்மாண்ட இயக்குநர் அப்டின்னா அது ராஜமெளலி தான். ஆனா, ராஜமெளலி சார் நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கலை… ஏன்னா.. இவருக்குள்ள 4 அட்லீ, 5 ஹரி இருக்குறாங்க. ஒரே கதைய வெச்சி மூணு படம் டைரக்ட் பண்னிருக்காரு சொன்னா நம்புவீங்களா? ஜாவா சுந்தரேசனா இப்போ கலக்கிட்டு இருந்தாலும், இவரோட ஆரம்பகால படங்கள்லாம் எப்படி இருக்கும்னு தெரியுமா? தெரிஞ்சா தாங்க மாட்டீங்கடா.. தாங்க மாட்டீங்க.. டெம்ப்ளேட்டு தான் நியாபகத்துக்கு வருது..! நாம ராஜமெளலியோட படங்களைத்தான் ரோஸ்ட் பண்ண போறோம்.

இவரோட மொத படம் ஸ்டூடண்ட் நம்பர் ஒன். ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர் படத்தோட இண்ட்ரோ சீன்ல பஸ்ஸை பிடிக்க ஓடிட்டே இருப்பாரு.. மியூசிக் டைரக்டருக்கு கைவலிக்கிற அளவுக்கு மியூசிக் போட்டு முடிக்கிற வரைக்கும் ஓடுவாரு. எப்படியும் 3-4 கிலோமீட்டரு ஓடிருப்பாரு. அதாங்க.. மாஸ்டர்ல விஜய் பஸ்ஸை பிடிக்கிற சீன் இருக்குல அதான்.. ! அப்படி பஸ்ஸை ரன்னிங்ல பிடிக்கப்போகும் போது ஒரு கார் இடிக்க வந்திடும். அக்சுவலி, ஜூனியர் என்டிஆருக்கு ஆக்ஸிடன் ஆகி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ண வேண்டிய சீன். ஆனா.. ஒரு ஜம்ப் பண்ணி க்ருட்டு..க்ருட்டுன்னு ரோலிங்லயே போய் பஸ்ஸுல ஏறுவாரு பாருங்க… இல்ல இல்ல பாக்காதீங்க!

சரி.. இதை விடுங்க! இன்னொரு சீன். விஜயகாந்த் நடிச்ச கஜேந்திரா படத்தோட ஒரிஜினல் ராஜமெளலி டைரக்ட் பண்ண சிம்ஹாத்ரி. இதுலயும் ஜூனியர் என்டிஆர்தான்.. ஃபைட் சீன்ல வில்லன் கத்தியால கைல லைட்ட கீரி விட்டுருவாப்ல.. உடனடியா சிகரெட்டை எடுத்து வாய்ல வச்சிட்டு, வத்திக்குச்சியை எடுத்து அந்த ரத்தத்துல நெருப்பு பத்த வெப்பாரு.. எப்ப்புர்றானு.. தோனும்..! அவரோட ரத்தம் எவ்ளோ சூடா இருக்கும்ங்கிறது இதான் சாம்பிள் !

இன்னொரு சீன்ல முதலாளியோ பொண்ணுனு தெரியாம ஹீரோயினை பெட்ஷீட்டோட சேர்த்து பிடிச்சு திருடனைப் பிடிச்சிட்டேன்னு கத்துவாரு விஜயகாந்த். இதுவே, ராஜமெளலி ஒரிஜினல் வெர்ஷன்ல ஹீரோயின் கூட உருண்டு, இடுப்பைலாம் பிடிப்பாரு ஜூனியர் என்.டி.ஆர். அவ்ளோ பண்ணியுமே, அது பொண்ணுதான்னு உனக்கு தெரியலயா? அப்டின்னுதான் கேட்க தோணுது. அதுமட்டுமில்ல, கட்டெறும்பை வெச்சி ஒரு சீன் வரும்.. ரொமான்ஸை அதுக்கும் கீழ கேவலப்படுத்த முடியாது.. அந்த சீன் கஜேந்திரா படத்துல இருக்காது. இதெல்லாம் வேணுமானு நினைச்சு கேப்டன் தூக்கிட்டாரு போல..!

ஒரே கதைய வெச்சி மூணு படம் டைரக்ட் பண்ணி, அந்த மூணையுமே ஹிட்டும் கொடுத்திருக்காரு நம்ம தலைவன். மொதல்ல கதைய சொல்லுறேன். ஹீரோவும் ஹீரோயினும் லவ் பண்ணுவாங்க. ஆனா, வில்லனுக்கு ஹீரோயின் மேல ஈர்ப்பு இருக்கும். அதுனால, ஹீரோவை போட்டுத் தள்ளிருவாரு வில்லன். அந்த ஹீரோ மறுபடியும் வேற ரூபத்துல வந்து வில்லன்கிட்ட இருந்து ஹீரோயினை காப்பாத்துவாரு. இதே திரைக்கதைலதான் நான் ஈ, மஹதீரா, பாகுபலின்னு மூணு படமுமே..! ஆமாங்க.. நான் ஈ-ல நானியை மர்டர் பண்ணிடுவாரு கிச்சா சுதீப். அப்புறம், ஈயா வந்து சமந்தாவை காப்பாத்துவாங்க. மஹதீரால முன் ஜென்மத்துல ராம்சரனை போட்டுத் தள்ளிருவாரு தேவ் கில். அடுத்த ஜென்மத்துல அவரை போட்டுத் தள்ளி லவ்வரை சேவ் பண்ணுவாரு. பாகுபலிலயும் பிரபாஸ் காதலிக்கிற பொண்ணு மேல ஆசப்படுவாரு ராணா. பிரபாஸை போட்டுத் தள்ளிருவாரு.. மறுபடியும் பிரபாஸே வந்து வில்லண்ட இருந்து நாயகிய மீட்பாரு..! கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்!

அதுமட்டுமில்ல, எந்தெந்த படத்தை எங்க இருந்து காப்பி அடிச்சார்ன்னு சொல்லணும்னா இன்னொரு வீடியோதான் போடணும்..! பொதுவா, மணிரத்னம், ஷங்கரோட பழைய படங்களை எல்லாம் இப்போ மறுபடி பார்த்தாலும் ஃப்ரெஷ்ஷா இருக்கும். அப்படி, ஆசப்பட்டு தப்பித்தவறி கூட ராஜமெளலியோட பழைய படங்களை பொரட்டிராதீங்க..! கடைசில நீங்களும் சொல்லுவீங்க..! ராஜமெளலி சார் நீங்களுமா…அப்டின்னு!

Also Read – விஜய், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி… பெஸ்ட் வில்லன் யார்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top