• ShirdiSaibaba: ஷீரடி சாய்பாபா ஆலயம் – 7 தகவல்கள்!

    ஷீரடி சாய்பாபா ஆலயத்துக்கு தினசரி சராசரியாக 60,000 பக்தர்கள் வருவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. திருப்பதிக்கு அடுத்தபடியாக பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் கோயிலாக ஷீரடி ஆலயம் இருக்கிறது. 1 min


    ஷீரடி சாய்பாபா
    ஷீரடி சாய்பாபா

    மதம், மொழி, இனம் கடந்து உலகெங்கிலும் உள்ள பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஷீரடி சாய்பாபா ஆலயம் பற்றிய 7 அரிய தகவல்கள்.

    ஷீரடி சாய்பாபா ஆலயம்

    மனித அவதாரம் எடுத்த கடவுளாகப் போற்றப்படுபவர் மகான் சாய்பாபா. மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் ஒரு வேப்ப மரத்தடியில் அமர்ந்து மக்களுக்கு பேரருள் வழங்கியவர். அவர் வாழ்ந்த ஷீரடியில் பிரமாண்ட ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது.

    ஷீரடி சாய்பாபா
    ஷீரடி சாய்பாபா

    ஷீரடி சாய்பாபா ஆலயம் – 7 தகவல்கள்

    • சாய்பாபா ஸித்தியான நாள் 1918-ம் ஆண்டு அக்டோபர் 15. அவர் மறைந்து நான்காண்டுகளுக்குப் பிறகு அவரின் தீவிர பக்தரான நாக்பூர் ஸ்ரீமந்த் கோபால்ராவ் என்பவர் ஷீரடியில் ஆலயம் எழுப்ப உதவினார். ஆலயம் இப்போது ஸ்ரீசாய்பாபா சான்ஸ்தான் அறக்கட்டளையின் கீழ் செயல்படுகிறது.
    • சாய்பாபாவை அவரது பக்தர்கள் `சாய்’ என்று அழைக்கிறார்கள். கடவுள் என்பதைக் குறிக்கும் வகையிலான சாட்ஷாத் ஈஸ்வர் (Sakshaat Ishwar) என்பதன் சுருக்கமே சாய்.
    • ஷீரடியில் இருக்கும் ஆலயம் குரு ஸ்தன் என்றழைக்கப்படுகிறது. தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அவர் கழித்ததாக நம்பப்படும் வேப்பமரம் ஒன்றின் கீழ் இது அமைந்திருக்கிறது.
    • ஆலயத்தில் இருக்கும் வேப்ப மரத்தின் கனிகளும் இலையும் இனிப்பு சுவை நிறைந்ததாக இருக்கிறது.
    ஷீரடி சாய்பாபா
    ஷீரடி சாய்பாபா
    • எல்லோரையும் ஆள்பவன் ஒரே கடவுள் என்பது பாபாவின் வாக்கு. ஷீரடி ஆலயத்தில் பாபாவின் சமாதியும் துவாரகாமாய் மசூதியும் அமைந்திருக்கின்றன. பாபா ஏற்றியதாக நம்பப்படும் அணையா விளக்கையும் கோயில் வளாகத்தில் இருக்கும் பூங்காவில் பக்தர்கள் தரிசிக்கலாம்.
    • ஷீரடி ஆலயத்துக்கு தினசரி சராசரியாக 60,000 பக்தர்கள் வருவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. திருப்பதிக்கு அடுத்தபடியாக பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் கோயிலாக ஷீரடி ஆலயம் இருக்கிறது.
    • முதல்முறையாக சாய்பாபா, தனது இளம்வயதில் ஷீரடிக்கு சாய்பாபா வந்ததாகச் சொல்கிறார்கள் சாய்பாபாவின் உண்மையான பெயர் அல்லது அவரது பூர்வீகம் பற்றிய தெளிவான குறிப்புகள் எங்கும் இல்லை. முதல்முறையாக அவரை `சாய்’ என்று கோயில் பூசாரி அழைத்ததாக நம்பப்படுகிறது.

    Also Read – மதுரை மீனாட்சியம்மன் கோயில் பற்றி இந்த 20 தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?


    Like it? Share with your friends!

    422

    What's Your Reaction?

    lol lol
    8
    lol
    love love
    4
    love
    omg omg
    36
    omg
    hate hate
    4
    hate

    Web desk

    0 Comments

    Leave a Reply

  • Choose A Format
    Personality quiz
    Series of questions that intends to reveal something about the personality
    Trivia quiz
    Series of questions with right and wrong answers that intends to check knowledge
    Poll
    Voting to make decisions or determine opinions
    Story
    Formatted Text with Embeds and Visuals
    List
    The Classic Internet Listicles
    Countdown
    The Classic Internet Countdowns
    Open List
    Submit your own item and vote up for the best submission
    Ranked List
    Upvote or downvote to decide the best list item
    Meme
    Upload your own images to make custom memes
    Video
    Youtube and Vimeo Embeds
    Audio
    Soundcloud or Mixcloud Embeds
    Image
    Photo or GIF
    Gif
    GIF format
    எம்.ஜி.ஆர் – சிவாஜி முதல் சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி வரை… இது கோலிவுட் நட்பு சாக்லேட் தெரியும்… அதுல இந்த வெரைட்டியெல்லாம் தெரியுமா? `ஊட்டி, கூர்க், காஷ்மீர்’ – இந்தியாவின் அசத்தலான 8 Wedding Destinations! தமிழ் சினிமாவில் இந்த 10 டெக்னாலஜிகள் எந்தப் படத்தில் அறிமுகமாச்சு தெரியுமா? பயமா இருக்கா… இந்த இடங்களுக்கெல்லாம் போனா இன்னும் பயங்கரமா இருக்கும்!